ஜீவனைப் பேசுதல்மாதிரி
உங்கள் நினைவுகளை நினைத்துப்பாருங்கள்
நம்முடைய நினைவுகளுக்கு ஜீவன் அளிக்கும் வல்லமை உண்டு. நம்முடைய நினைவுகள் ஒரு பொருட்டாயிருக்கிறது. நீதி. 23:7 குறிப்பிடுகிறது “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்;” மிகுதியான நினைவுகளே வார்த்தைகளை வெளிப்படுத்துகிறதினால் நம்முடைய நினைவுகள் மிகவும் பொருட்டுள்ளதாயிருக்கிறது. நம்முடைய நினைவுகளும், அதன்மேல் சாய்ந்து செயல்படும் நம்முடைய இருதயமுமே நம்முடைய யதார்த்த நிலையை உருவாக்கி வெளிப்படுத்துகிறது. அவைகளே நம்மிடத்தில் உருவாகிற வார்த்தைகளையும், அதினிமித்தம் உருவாகும் நம்முடைய கிரியைகளையும் உருவாக்குகிறது. நாம் என்ன பேசுகிறோமோ அது முக்கியம், நாம் என்ன நினைக்கிறோமோ அது அதை விட மிக முக்கியம். வேத வார்த்தை சொல்லுகிறது, நாம் அவைகளை நம்முடைய நினைவுகளில் வைத்து சிந்தித்து கொண்டே இருக்கவேண்டும்; அதை விட முக்கியமாக, நாம் அதன் படி வாழ வேண்டும்; அதுவே பிரதானமாயிருக்கிறது. இந்த மாதிரி கீழ்படிதலுக்கு நம்முடைய வாழ்க்கையில் முன்னுரிமை அளிக்கிறோமா?
நம்முடைய வார்த்தையானது நம்முடைய நினைவுகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிற ஒரு கருவி என்று அநேக ஆராய்ச்சிப் புத்தகங்களும் தெரிவிக்கிறது. நம் சிந்தனையில் எதை உள்வாங்குகிறோமோ, அது நம்முடைய நினைவுகளில் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. “உள்ளே செலுத்துகிறதும் வெளியேற்றப்படுவதும் சமமா”? அப்படியானால், நாம் உள்வாங்குகிற நம்முடைய எண்ணங்களை பரிசீலித்து முன்னுரிமை படுத்துவது எவ்வளவு முக்கியம்? மேலும், இவைகள் நமக்கு ஆரோக்கியமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை ஈவுகிறது. ஆகாத சிந்தனைகளாலும், தகாத சீர்கெட்ட காரியங்களாலும் நம்முடைய நினைவுகள் நிரம்பியிருப்பதையே நம்முடைய சத்துரு விரும்புகிறான். நம்முடைய நினைவுகளை நினைத்து பார்ப்போம்.
மூளைக்கும் நம்முடைய நினைவுகளுக்கும் உள்ள அடிப்படை தொடர்பை நரம்பியல் மொழியியல் நிரலாக்கமும் ஆமோதிக்கிறது. (நரம்பியல்) நினைவுகளுடன், மொழி (மொழியியல்) வார்த்தைகள் மற்றும் நம்முடைய உள்ளும் புறம்புமான செயல்பாடுகள் (நிகழ்வுகள்). இந்த சிந்தனைப் பள்ளி நேர்மறையான ஆரோக்கியமான வாழ்க்கையுடன் தொடர்புடையது என்பதால் சிந்தனை விழிப்புணர்வின் நடைமுறை பயன்பாட்டைக் கருதுகிறது.
நாம் தேடுவதைக் கண்டுபிடிப்பதால், நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைப் பற்றி உண்மையில் சிந்திக்க வேண்டும். இந்த கதையைப்போல,….. ஒரு பாலைவனத்தின் மீது ஒரு கழுகு மற்றும் ஒரு ஹம்மிங் பறவை பறந்து கொண்டிருக்கிறது. கழுகு சாப்பிட மரித்து போன மற்றும் சிதைந்துபோன மாம்சத்தைத் தேடிக்கொண்டிருந்தது. கழுகு கண்டு கொண்டது. இதற்கு நேர்மாறாக, ஹம்மிங் பறவை ஒரு பூவின் அமிர்தத்தில் உயிரைத் தேடிக்கொண்டிருந்தது. ஹம்மிங் பறவை வாழ்க்கையை கண்டுபிடித்தது. அவர்கள் தேடுவதை அவர்கள் இருவரும் கண்டுபிடித்தனர். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள், எதைப் பற்றி சிந்திக்கிறீர்கள், எதை உங்கள் மனதின் சாளரத்தினுள் செல்ல அனுமதிக்கிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருங்கள். நம்முடைய எண்ணங்களின் மிகுதியிலிருந்து நம் வார்த்தைகள் பிறக்கின்றன.
2 கொரிந்தியர் 10:5 இவ்வாறாக கூறுகிறது ""அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழுப்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம் "" நம்முடைய நினைவுகளை அறிந்து அவைகளை சிறை படுத்த முடியும், அப்படி செய்வதற்கு தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரின் மூலமாக அந்த அதிகாரத்தை தந்திருக்கிறார். உங்கள் நினைவுளை சிறைப்படுத்துவது என்பது உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் குறித்து உங்களுடைய நினைவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைக் குறிக்கும் பொருளாகும்..
நம்முடைய தேவனின் நிறைவான ஆசீர்வாதங்களிலேயும், நம்முடைய அன்பான பிதாவாகிய தேவனின் ஒப்பற்ற தன்மைகளிலும், அவருடைய படைப்புகளில் நாம் காண்கிற அவருடைய நிறைவான அழகிலும், நமனுடைய வாழ்க்கை நிலைத்திருக்கும்போது, நாம் நிலையான சத்தியத்தில் ஜீவிக்கிறோம். எனினும், நம்முடைய குறைவுகளையும், இந்த உலகத்தில் உள்ள தவறுகளையும் நாம் நினைக்கும்போது, மனச்சோர்பும், பதற்றமான நிலையும் நம்முடைய வாழ்க்கையிலே காணப்பட முடியும். உங்கள் மனதில் ஒரு போர்க்களம் உள்ளது. உங்கள் வாழ்க்கை எப்போதும் உங்கள் வலிமையான நினைவுகளின் திசையில் நகரும். ஆகவே, உங்கள் மனதையும் நினைவுகளையும் ஜீவனை அழிக்கும் சத்தியத்துடன் கையாளுங்கள்!
ஆழ்ந்து சிந்தியுங்கள்:
நாள்முழுதும் உங்கள் நினைவுகளை கருத்தோடு ஆராய்ந்து பாருங்கள். அவை ஜீவனளிக்கும் மற்றும் நேர்மறையானவையா? அவை எதிர்மறையானவையா? எது ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவுகளை நிலைப்படுத்துகிறது??
Prayer:
ஆண்டவரே, என் நினைவுகள் என் வார்த்தைகளாய் புறப்படும்போது அவற்றை அறிந்துகொள்ள எனக்கு உதவுங்கள். ஜீவனளிக்கும் நினைவுகள் என் நாவிலிருந்து ஜீவனளிக்கும் வார்த்தைகளாக புறப்பட நான் விரும்புகிறேன். சத்திய வசனம் என் நினைவுகளில் நிலைத்திருக்க விரும்புகிறேன். உமது சத்தியத்துக்கு எதிரான எல்லா நினைவுகளையும் சிறைபிடிக்க எனக்கு உதவுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம்.
More