கிறிஸ்துமஸ் கதையின் 7 நாட்கள்: ஒரு கிறிஸ்து பிறப்பு பண்டிகை குடும்ப தியானம்மாதிரி
நாள் 7: சாஸ்திரிகள்
ஞானிகள் என்றும் அழைக்கப்படும் சாஸ்திரிகள், இயேசுவைக் கண்டுபிடிக்க கிழக்கிலிருந்து பயணம் செய்தனர். பல வேதாகம அறிஞர்கள் இந்த ஆண்கள் விண்வெளி அறிவியலைப் படித்ததாக நம்புகிறார்கள், அல்லது இன்று அதை நாம் வானியல் என்று அழைக்கிறோம். சாஸ்திரிகள் புத்திசாலிகள், செல்வந்தர்கள், மிகவும் மரியாதைக்குரிய ஆண்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இயேசுவைப் பார்க்க எத்தனை சாஸ்திரிகள் பயணம் செய்தார்கள் என்று வேதாகமம் சொல்லவில்லை என்றாலும், பாரம்பரிய போதனை மூன்று என்று என்னப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் தாராளமாக மூன்று பரிசுகளை பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அவருக்குக் கொண்டு வந்தார்கள்.
வேதாகம அறிஞர்கள் கூறுகையில், சாஸ்திரிகள் பதினாறு முதல் இருபத்து நான்கு மாதங்கள் வரை இயேசுவின் வீட்டிற்கு வரவில்லை. அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து இயேசுவின் மீது கண்களை வைத்தபோது, அவர்கள் முழங்காலில் விழுந்து, பரிசுகளை வழங்கி, அவரை வணங்கினார்கள். ஏரோது இயேசுவைக் கொல்ல விரும்புவதை தேவன் அறிந்ததால், இயேசு எங்கே இருக்கிறார் என்று ஏரோது ராஜாவிடம் சொல்ல வேண்டாம் என்று தேவன் ஒரு கனவில் அவர்களை எச்சரித்தார். தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் கிழக்கில் உள்ள தங்கள் வீட்டிற்கு வேறு வழியில் திரும்பினர்.
இயேசுவை மேசியாவாக வணங்குவதற்காக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட முதல் புறஜாதியார் அல்லது யூதரல்லாதவர்கள் சாஸ்திரிகள். இயேசுவின் பிறப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொண்டார்கள். தேவனே ஒரு மனிதனாக பூமிக்கு வந்திருந்தார்-பரலோகத்திலிருந்து வந்த எவ்வளவு தாராளமான பரிசு! அவர்கள் அவருக்கு தாராளமாக திருப்பி அளிப்பதன் மூலம் பதிலளித்தனர்.
குடும்ப செயல்பாடு: இந்தச் செயலுக்கு, ஒரு குடும்பமாக தாராளமாக இருங்கள். ஒரு பொம்மையை கொடுக்க உங்கள் குழந்தைகளை அழைக்கவும் அல்லது தேவைப்படும் குடும்பத்திற்கு ஒரு பரிசை வாங்க தங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தவும். உங்கள் குழந்தையுடன் பரிசை வழங்குங்கள். அல்லது தேவாலய காணிக்கையில் உங்கள் பிள்ளைகள் தங்கள் சொந்த பணத்தை கொடுக்க வழிநடத்துங்கள். ஒன்றாக, நீங்கள் தாராளமாக இருக்கக்கூடிய பிற வழிகளைக் கவனியுங்கள் மற்றும் ஒரு குடும்பமாக கூடுதல் கொடுக்கலாம். இயேசுவின் மீது நமக்குள்ள அன்பு எவ்வாறு ஒரு பரிசு, மற்றவர்களிடம் தாராளமாக நடந்துகொள்வதன் மூலம் அவருக்கு எவ்வாறு திருப்பித் தருவது என்பது பற்றி விவாதிக்க இந்தச் செயலைப் பயன்படுத்தவும்.
குடும்ப கலந்துரையாடல் கேள்விகள்:
நீங்கள் ஒருவருக்கு வழங்கிய பரிசு எது?
* அதைக் கொடுப்பது உங்களுக்கு எப்படி உணர்த்தியது?
இந்தத் திட்டம் மற்றொரு வளத்திலிருந்து தழுவிக்கொள்ளப்பட்டது. www.25ChristmasStories.com இல் மேலும் அறிக
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவருக்கும் ஒரு நல்ல அரவணைப்பு, உண்மையான இணைப்பு மற்றும் இப்போது கொண்டாட மகிழ்ச்சிகரமான ஒன்று தேவை என்று தெரிகிறது. இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை தியானம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இணைவதற்கும், உண்மையான கிறிஸ்துமஸ் கதையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புதிய மரபுகள், இரவு உணவு கதைகள், படுக்கை நேர உரையாடல்கள் மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு வழியை வழங்கும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இந்த கிறிஸ்துமஸ் “அரவணைப்பு” இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை காலத்தில்உங்கள் வீட்டிற்கு அழகான நினைவுகளைத் தருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்!
More