கிறிஸ்துமஸ் கதையின் 7 நாட்கள்: ஒரு கிறிஸ்து பிறப்பு பண்டிகை குடும்ப தியானம்மாதிரி
நாள் 1: மரியாள்
மரியாள் இயேசுவின் தாய். அது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது? இவ்வளவு முக்கியமான ஒன்றுக்காக தேவன் அவளை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறீர்கள்? மரியாள் ஒரு இளவரசி என்று நினைக்கிறீர்களா? அல்லது அவள் பணக்காரியா? அவள் பிரபலமானவள் என்று நினைக்கிறீர்களா?
மரியாளுக்கு இந்த காரியங்கள் எதுவுமில்லை. மரியாள் இளமையாகவும் ஏழையாகவும் இருந்தாள். பல வேதாகம ஆசிரியர்கள், மரியாள் இயேசுவுடன் கர்ப்பமாக இருந்தபோது அவளுக்கு சுமார் பதினான்கு வயது என்று நம்புகிறார்கள், ஏனென்றால் இளம் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான பொதுவான வயது அது. மரியாளும் சிறிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்தாள். அதற்கும் மேலாக, அவள் ஒரு கன்னிப் பெண், அதாவது அவளுக்கு இன்னும் குழந்தை பிறக்க தகுதியாகவில்லை. இளம் ஏழை. பிரபலமில்லை. குழந்தை பெற தகுதி அடையவில்லை. இயேசுவின் தாயாக நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய ஒருவரைப் போல இந்த காரியங்கள் தோன்றுகிறதா? அநேகமாக இல்லை. ஆனால் மரியாள் தாழ்மையானவள்.
தாழ்மையான இருதயமுள்ளவர்களை தேவன் கனப்படுத்துகிறார் என்று வேதாகமம் கூறுகிறது, தங்களுக்கு ஏதாவது ஒரு இழப்பு வருமென்றாலும் தேவனுக்கு முதலிடம் கொடுக்கும் மக்களை தேவன் கனப்படுத்துகிறார். தாழ்மையுடன் இருப்பது உங்களைப் பற்றி தற்பெருமை காட்டாமலும், புகழப்படுவதை எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு சேவை செய்வதாகவும் தெரிகிறது. ஒரு தாழ்மையான நபர் தேவன் மட்டுமே கவனிப்பது போல் நடந்து கொள்கிறார். உலகத்தின் பார்வையில் மிகவும் முக்கியத்துவம் இல்லாத ஒரு இளம் பெண்ணான மரியாளை உலக இரட்சகரின் தாயாக தேவன் தேர்ந்தெடுத்தார். ஏன்? காபிரியல் தேவதூதருக்கு பதிலளித்து, “நான் தேவனை நேசிக்கிறேன். அவர் என்னிடம் கேட்பதை நான் செய்வேன் " என்று சொன்னபோது மரியாளின் தாழ்மையான இருதயம் தெளிவாக இருந்தது. ”
குடும்ப செயல்பாடு: நீங்கள் காணக்கூடிய அனைத்து ஒளிரும் விளக்குகள், மின்சார விளக்குகள் அல்லது சிறிய விளக்குகளை சேகரிக்கவும். அவற்றை மேசையில் வைக்கவும். விளக்குகளை இயக்கவும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பற்றி விவாதிக்கவும். வீட்டைச் சுற்றி நடந்து, இந்த விளக்குகள் தரை மற்றும் மேஜை விளக்குகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பற்றி விவாதிக்கவும். “எந்த ஒளிரும் விளக்கு அனைவருக்கும் பிடித்தது?” என்று கேளுங்கள். மேலும் “நீங்கள் பயன்படுத்தாத விளக்கு அசிங்கமாக இருக்கிறதா?” அசிங்கமான விளக்கைத் தீர்மானியுங்கள். பின்னர் 1 சாமுவேல் 16: 7 ஐ ஒன்றாகப் படியுங்கள். ஒரு விளக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லை, அதைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் உள்ளே இருந்து வரும் ஒளி. இதேபோல், ஒரு நபர் வெளியில் எவ்வளவு பிரபலமானவர், நல்லவர், திறமையானவர் அல்லது பணக்காரராக இருந்தாலும், தேவன் அவரது இருதயத்தில் பிரகாசிக்கும் ஒளியைப் பார்க்கிறார். மரியாளின் இருதயம் தேவனின் பார்வையில் ஒரு பிரகாசமான வெளிச்சமாக இருந்தது!
குடும்ப கலந்துரையாடல் கேள்விகள்:
தேவனின் அன்பைக் காட்ட மற்றொரு நபருக்குச் செய்வது பற்றி நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்கள், ஆனால் இன்னும் செய்யவில்லை?
யாரும் பார்க்காவிட்டாலும், எந்தப் புகழையும் பெறாவிட்டாலும் அதைச் செய்வீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவருக்கும் ஒரு நல்ல அரவணைப்பு, உண்மையான இணைப்பு மற்றும் இப்போது கொண்டாட மகிழ்ச்சிகரமான ஒன்று தேவை என்று தெரிகிறது. இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை தியானம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இணைவதற்கும், உண்மையான கிறிஸ்துமஸ் கதையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புதிய மரபுகள், இரவு உணவு கதைகள், படுக்கை நேர உரையாடல்கள் மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு வழியை வழங்கும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இந்த கிறிஸ்துமஸ் “அரவணைப்பு” இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை காலத்தில்உங்கள் வீட்டிற்கு அழகான நினைவுகளைத் தருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்!
More