கிறிஸ்துமஸ் கதையின் 7 நாட்கள்: ஒரு கிறிஸ்து பிறப்பு பண்டிகை குடும்ப தியானம்மாதிரி
நாள் 6: தேவதூதர்கள்
தேவதூதர்கள் தேவனுடைய மக்களுக்கு செய்திகளை அனுப்புவதைப் பற்றி வேதாகமத்தில் அடிக்கடி வாசிப்போம். காபிரியேல் நினைவில் இருக்கிறதா? சகரியாவுக்கும் மரியாளுக்கும் அவர் கூறின செய்திகள் கிறிஸ்துமஸ் கதையின் மூலம் நமக்குத் தெரியும். காபிரியேல் தவிர, மீகாயேல் மட்டுமே நமக்குத் தெரிந்த மற்ற தூதன். ஆனால் இன்னும் பலர் உள்ளனர்! மில்லியன் கணக்கான தேவதூதர்கள் தேவனை வணங்குகிறார்கள், அவருக்கு சேவை செய்கிறார்கள், அவருடைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றுகிறார்கள் என்று வேதாகமம் சொல்கிறது. சில நேரங்களில் நீங்கள் ஒரு தூதனை அறியாமல் சந்திக்கலாம் (எபிரெயர் 13: 2).
இருப்பினும், தேவதூதர்கள் கிறிஸ்து பிறப்பின் காட்சிகளில் சித்தரிக்கப்படுவதை போல் நாம் அடிக்கடி காணும் இனிமையான, மென்மையான, சிறகுகள் கொண்ட மனிதர்கள் அல்ல. தேவதூதர்கள் “மிகுந்த பலம்” உடையவர்களாகவும் தேவனுக்குக் கீழ்ப்படிவதாகவும் வேதாகமம் விவரிக்கிறது (சங்கீதம் 103: 20). ஒருவேளை அதனால்தான், தேவதூதர்கள் சூழப்பட்ட வயலில் மேய்ப்பர்கள் தூதர்களை, தேவனுடைய மகிமையை பார்த்தபோது அவர்கள் பயந்தார்கள். ஆயினும் தேவதூதன், “பயப்படாதே” (லூக்கா 2:10) என்றார்.
பின்னர், திடீரென்று, இன்னும் பல தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு மேலே இரவு வானத்தை ஒளிரச் செய்தனர், இரட்சகரின் பிறப்பை முதலில் உலகுக்கு அறிவித்த தூதர்கள். வலிமையுடன், தேவதூதர்கள் மற்றவர்களைப் போலல்லாமல் ஒரு செய்தியை வழங்கினர்: இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்! அவருடைய வல்லமை பாவத்தின் இருளை ஒருமுறை அனைவருக்கும் தோற்கடிக்கும்.
குடும்ப செயல்பாடு: தேவதூதர்கள் தேவனைப் புகழ்ந்தது மட்டுமல்லாமல், இரவு வானத்தில் ஒளியை மேய்ப்பர்களுக்கு மேலே ஏற்றி வைத்தார்கள். வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியாவின் பிறப்புடன் தீமையின் அந்தகார சக்திகளுக்கு எதிரான வெற்றியை அவர்கள் அறிவித்தனர்.
இன்றிரவு, எல்லோரும் கிறிஸ்துமஸ் பைஜாமாக்களை அணியுங்கள். சில பாப்கார்னை வெடித்து அதை எடுத்து கொண்டு உங்கள் மகிழுந்தில் ஏறுங்கள். மகிழுந்தில் சாப்பிட்டு கொண்டு, இரவு வானத்தையும் ஒளிரச் செய்யும் அலங்கரிக்கப்பட்ட வீடுகளைப் பார்த்து உங்கள் சுற்றுப்புறத்திலும் அதைச் சுற்றியுள்ள வீடுகளையும் பாருங்கள். பிரகாசமான கிறிஸ்துமஸ் விளக்குகள் இருளைத் துளைத்து வீடுகளை ஒளிரச் செய்யும் பிரகாசத்தைப் பற்றி பேசுங்கள். இதேபோல், "உலகத்தின் வெளிச்சமாக" இருக்கும் இயேசுவைப் பின்பற்றும்போது, "ஒருபோதும் இருளில் நடக்கக்கூடாது" என்ற வல்லமை நமக்கு இருக்கிறது, ஏனென்றால் "ஜீவ வெளிச்சம்" நமக்குள் பிரகாசிக்கிறது (யோவான் 8:12).
குடும்ப கலந்துரையாடல் கேள்விகள்:
“ வெளிச்சத்தில் நடப்பது ”என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அவ்வாறு செய்ய நாம் ஏன் ஜெபிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவருக்கும் ஒரு நல்ல அரவணைப்பு, உண்மையான இணைப்பு மற்றும் இப்போது கொண்டாட மகிழ்ச்சிகரமான ஒன்று தேவை என்று தெரிகிறது. இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை தியானம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இணைவதற்கும், உண்மையான கிறிஸ்துமஸ் கதையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புதிய மரபுகள், இரவு உணவு கதைகள், படுக்கை நேர உரையாடல்கள் மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு வழியை வழங்கும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இந்த கிறிஸ்துமஸ் “அரவணைப்பு” இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை காலத்தில்உங்கள் வீட்டிற்கு அழகான நினைவுகளைத் தருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்!
More