டோனி எவன்ஸ் இன நல்லிணக்கத்தை ஆராய்கிறார்மாதிரி
வேதாகம நல்லிணக்கம்
ஞாயிற்றுக்கிழமை காலை என்பது நமக்கு பெரும்பாலும் வாரத்தின் மிகவும் ஒதுக்கப்பட்ட நேரமாகும், ஏனெனில் நாம் சகிப்புத்தன்மையின் மனநிலையை ஏற்றுக்கொண்டோம். நல்லிணக்கத்தின் குறிக்கோள் சகிப்புத்தன்மை அல்லது மற்றொரு இனத்தை "சமாளிப்பது" அல்ல. துரதிர்ஷ்டவசமாக, தேவாலயம் பெரும்பாலான நேரங்களில் இவ்வாறாகவே இருக்கிறது, ஏனென்றால் நாம் மற்ற இன மனிதர்களுடன் அப்போது மட்டுமே கூடிவருகிறோம். கிறிஸ்தவ வட்டாரங்களிடையே இன நல்லிணக்கம் என்று நாம் அழைக்கும் பெரும்பகுதி சிறிது இயேசுவின் நாமம் தெளிக்கப்பட்டு விவிலியமாக காட்சியளிக்கும் பாய்ச்சப்பட்ட சமூகவியலைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் தேவாலயத்திற்குள் இனத்தின் பிளவு சுவர்களை உடைக்க, சகிப்புத்தன்மை கொண்ட மனநிலையை விட்டுவிட்டு சிறந்த நோக்கத்துடன் நாம் தொடங்க வேண்டும், அந்த நோக்கமே வேதாகம நல்லிணக்கமாகும்.
மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கான குறிக்கோளுடன் இயேசு கிறிஸ்துவுக்கு பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில், இனரீதியான வழிகளில் ஒன்றிணைக்கும் நோக்கத்திற்காக, பிளவுகளை ஏற்படுத்திய பாவத்தை நிவர்த்தி செய்வதாக வேதாகம நல்லிணக்கத்தினை வரையறுக்கப்படலாம்.
நாம் கவனிக்க வேண்டிய பாவம் இனவெறி. நாம் தேவனின் பார்வையில் பாவமாக இருக்கும் ஒன்றை வேறொன்றாக அழைத்தால், நம்மிடத்தில் ராஜ்யதிற்கான கண்ணோட்டம் அற்றுப்போகும். நல்லிணக்கம் என்பது உறவுகளைப் பற்றியது. அடிப்படையில் சமரசம் செய்வது என்பது நட்பை மீட்டெடுப்பதாகும். நமது குறிக்கோள் இனவெறியின் பாவத்திலிருந்து மனந்திரும்புவது மட்டுமல்ல, ஆனால் நம்முடைய சொந்தத்தை விட வெவ்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் உண்மையான நட்பை வளர்ப்பதுமே ஆகும். இனவெறியின் பாவத்திலிருந்து நாம் மனந்திரும்பும் போது, இன ரீதியில் உறவுகளை வளர்த்துக் கொண்டு, பின்னர் ஒற்றுமையுடன், நம் சமூகங்களுக்கு சேவை செய்யலாம். திருச்சபையானது இன மக்கள்தொகையைப் பொருட்படுத்தாமல் நமது சுற்றுப்புற மக்களுக்கு உப்பாகவும் மற்றும் வெளிச்சமாகவும் இருக்க வேண்டும்.
வேதாகம நல்லிணக்கத்தின் எந்தப் பகுதியில் நீங்கள் பணியாற்ற வேண்டும்?
நீங்கள் இத்திட்டதின் மூலம் பயன்பெற்றீர்கள் என நம்புகிறோம். மேலும் விவரங்களுக்கு,இங்கே சொடுக்கவும்.
இந்த திட்டத்தைப் பற்றி
ஒற்றுமைக்கு பதிலாக, பலர் பிற இனங்களை சகித்துக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையில் ஒரு உறவில் நுழைய எந்த விருப்பமும் இல்லாமல் மற்றவர்களுடன் வெறுமனே ஈடுபடுகிறார்கள். இந்த 3 நாள் வாசிப்பு திட்டத்தில், டாக்டர் டோனி எவன்ஸ் இன சகிப்புத்தன்மையிலிருந்து விலகி நல்லிணக்கத்தை நோக்கி செல்ல நமக்கு உதவுவார். உண்மையான வேதாகம நல்லிணக்கத்திற்கான வழிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவினுடன் ஒரே உடலாக அமையும் உண்மையான ஒற்றுமைக்கு இது ஏன் முக்கியமானது என்பதையும் விவாதிப்போம்.
More