டோனி எவன்ஸ் இன நல்லிணக்கத்தை ஆராய்கிறார்மாதிரி
அடையாள திருட்டு
இன்றுய மிகப்பெரிய குற்ற சவால்களில் ஒன்று, அடையாள திருட்டு. திருடர்கள் உங்களின் அடையாளத்தை தங்கள் சொந்த மோசடி பயன்பாடுகளுக்காக திருடுவார்கள். அவர்கள் நீங்களாகவே நடித்து, உங்களுக்கானவற்றை எடுத்துக்கொள்கிறார்கள். வரலாற்றில் மிகப்பெரிய அடையாள திருடன் சாத்தான். அவன் இயேசு விசுவாசிகளாகிய நமக்குக் கொடுத்த எல்லா விதமான அற்புதமான விஷயங்களையும் கொள்ளையடிக்க விரும்புகிறான். அவன் இதைச் செய்வதற்கான ஒரு வழி, நமது அடையாளத்தைப் பற்றி நம்மை குழப்பமடையச் செய்வதாகும். இந்த குழப்பமே இனவெறி இன்னும் நிலவுவதற்கும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாததற்கும் காரணம்.
நாம் நம்முடைய அடையாளத்தை கிறிஸ்துவின் சிலுவையுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆனால் சாத்தான் இனம் போன்ற வேறு பல அடையாளத்தினை நமக்கு நாம் தெரிந்துகொள்ள முயற்சிப்பான். இதனால்தான் இன்னும் இவ்வுலகில் ஒருவர் தங்களை ஒரு கருப்பு கிறிஸ்தவர் என்றோ, ஒரு வெள்ளை கிறிஸ்தவர் என்றோ, ஒரு ஹிஸ்பானிக் கிறிஸ்தவர் என்றோ அல்லது ஒரு ஆசிய கிறிஸ்தவர் என்று எல்லாம் குறிப்பிடுவதை நாம் கேட்கிறோம். தொழில்நுட்ப ரீதியாக, இந்த சொற்றொடர் தவறானது, ஏனெனில் “கிறிஸ்தவர்” பெயர்ச்சொல்லாக செயல்பட்டு “இனம்” வினையெச்சத்தால் மாற்றியமைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் யார் என்பதை இனம் மாற்றியமைக்கிறது என்பதே இதன் பொருள்.
எனினும், நமது அடையாளம் கிறிஸ்துவில் உள்ளது. அதாவது, கிறிஸ்துவுடனான நமது நிலைப்பாடு நம்மை ஒரு கிறிஸ்தவராக ஆனால் கருப்பு நிற, வெள்ளை நிற, ஹிஸ்பானியராக அல்லது ஆசியனாக இருப்பவராக இருக்கிறோம். ஒரு மனிதனின் அடையாளம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அதுவே நமது செயல்களைத் தீர்மானிக்கும். நமது அடையாளம் முதலில் கிறிஸ்துவில் இருக்க வேண்டும், வேறு எல்லாவற்றையும் அதற்கு கீழேயே வைக்க வேண்டும். தேவன் இனம் அல்லது கலாச்சாரத்தை மறுக்க தனது மக்களுக்களிடம் கேட்கவில்லை, ஆனால் நம்முடைய கிறிஸ்தவ அர்ப்பணிப்புக்கு அந்த விஷயங்கள் குறுக்கிடகூடாது என்று அவர் கேட்கிறார். உங்கள் இனத்தினை தழுவுங்கள். உங்கள் கலாச்சாரத்தினை தழுவுங்கள். உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள், ஆனால் உங்களது இனவழி அடையாளம் வேதாகம சத்தியத்துடன் தலையிட வேண்டாம்.
உங்களது இன அடையாளம் தேவனுடைய வார்த்தையை சிதைப்பதை எவ்வாறு தடுக்க முடியும்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒற்றுமைக்கு பதிலாக, பலர் பிற இனங்களை சகித்துக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையில் ஒரு உறவில் நுழைய எந்த விருப்பமும் இல்லாமல் மற்றவர்களுடன் வெறுமனே ஈடுபடுகிறார்கள். இந்த 3 நாள் வாசிப்பு திட்டத்தில், டாக்டர் டோனி எவன்ஸ் இன சகிப்புத்தன்மையிலிருந்து விலகி நல்லிணக்கத்தை நோக்கி செல்ல நமக்கு உதவுவார். உண்மையான வேதாகம நல்லிணக்கத்திற்கான வழிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவினுடன் ஒரே உடலாக அமையும் உண்மையான ஒற்றுமைக்கு இது ஏன் முக்கியமானது என்பதையும் விவாதிப்போம்.
More