டோனி எவன்ஸ் இன நல்லிணக்கத்தை ஆராய்கிறார்மாதிரி
தேவ சாயல்
எல்லா மனிதர்களும், எந்த இனமாக இருந்தாலும், ஆதாமின் பொதுவான தோற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எல்லா மனிதர்களுமே ஒரே மூதாதேயரிலிருந்தது வந்தவர்கள் என்று அப்போஸ்தலர் புஸ்தகமும் சொல்கிறது. இதில் இருந்து ஒரு படி மேலே சென்று, மனிதகுலத்தின் படைப்பைப் பார்க்கும்போது, திரியேக தேவனே நம்மை அவருடைய சாயலில் படைத்தார் என்பதையும் அறிகிறோம். இறையியலில், தேவ சாயலில் மனிதர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றர் என்ற கருத்தை Imago Dei என அழைக்கிறோம். சாயல் என்பது ஒரு கண்ணாடியில் தெரியும் தோற்றம் போன்றே அல்லது பிரதிபலிப்பு. இது நாம் ஒவ்வொருவரும், நமது இனம் மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டு, நம் அனைவரிடமும் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் மேலான தகுதி இருப்பதை உணர்த்துகிறது. நமது கண்ணியம் இயல்பானது. எல்லா மனிதர்களும் மரியாதையுடன் பிறந்தவர்கள் ஏனெனில் அவர்கள் தேவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.
எனவே, எந்தவிதமான இனவெறி, உயரடுக்கு, பாகுபாடு அல்லது ஒடுக்குமுறை சமுதாயத்தில் இருந்தாலும் அது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, அது பாவம். சக சாயலோடு இருக்கும் மனிதர்களை அவர்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தாழ்ந்தவர்களாக நடத்துவது பாவம். நாம் ஒற்றுமையை அடையவேண்டும் என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது நேர்மையாக பேசுவதுதான். அதாவது, எந்தவிதமான இனவெறி, உயரடுக்கு, பாகுபாடு அல்லது ஒடுக்குமுறையாக இருந்தாலும் சரி நாம் அதனை அதன் பெயரிலேயே அழைக்க வேண்டும் - பாவம். பாவத்தை நாம் நிவர்த்தி செய்யும்போது மட்டுமே தேவன் நம்மை குணப்படுத்தவும் மற்றும் ஒன்றிணைக்கவும் முடியும். சர்வவல்லமையுள்ள தேவனின் சாயலில் உருவாக்கப்பட்ட நாம் ஒருவருக்கொருவர் தேவ சாயலை உடையவர்கள் என எண்ண வேண்டும்.
தேவ சாயல்ஆக இருப்பதை உணரும் தருவாயில் மற்ற இனம் மற்றும் கலாச்சாரத்தினை குறித்த உங்கள் கண்ணோட்டம் எவ்வாறு வேறுபடுகிறது
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒற்றுமைக்கு பதிலாக, பலர் பிற இனங்களை சகித்துக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையில் ஒரு உறவில் நுழைய எந்த விருப்பமும் இல்லாமல் மற்றவர்களுடன் வெறுமனே ஈடுபடுகிறார்கள். இந்த 3 நாள் வாசிப்பு திட்டத்தில், டாக்டர் டோனி எவன்ஸ் இன சகிப்புத்தன்மையிலிருந்து விலகி நல்லிணக்கத்தை நோக்கி செல்ல நமக்கு உதவுவார். உண்மையான வேதாகம நல்லிணக்கத்திற்கான வழிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவினுடன் ஒரே உடலாக அமையும் உண்மையான ஒற்றுமைக்கு இது ஏன் முக்கியமானது என்பதையும் விவாதிப்போம்.
More