மாற்றமடைந்து வாழுதல்: நோக்கம்மாதிரி
நேரான பாதைகள்
நமது நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது தேவனிடம் சரணடைந்து வாழ்வதாகும். நாம் அவருடைய சித்தத்திற்கு சரணடையும் போது, நாம் எதுவும் செய்யாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நாம் முன்னேறும்போது தொடர்ந்து அவரைத் தேடுகிறோம் என்று அர்த்தம். அவர் நம்முடைய பாதைகளை நேராக்குவார் என்று வேதாகமம் நமக்கு வாக்களிக்கின்றது, ஆனால் அவர் நம் நடைகளை சீர்படுத்த, நாம் அவர் கொடுக்கும் பாதையை தேர்ந்து அதில் நடப்பதாலேயே முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, எல்லா வயதினரான பெண்களும் கிறிஸ்துவில் தங்கள் அடையாளத்தை எவ்வாறு உறுதியாக வேரூன்றுவது என்பதை அறிய உதவும் ஒரு ஊழியத்தைத் தொடங்குவதற்கான பார்வையையும் விருப்பத்தையும் தேவன் எனக்குக் கொடுத்தார். அந்த நேரத்தில், ஒரு பெரிய கனவை எப்படி நிறைவேற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக, இது ஒரே இரவில் நடக்காது என்பதை நான் புரிந்துகொண்டேன், ஆனால் எங்கு தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை! எங்களுக்கு ஒரு இடம், திறமையான குழு, நிதியுதவி, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் ஆகியவை தேவை. விரக்தியடைவதற்குப் பதிலாக, தேவன் என் பாதையில் வைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், அதன் விளைவாக அவரை நம்பவும் முடிவு செய்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் முதல் கூட்டத்தினை நடத்தினோம். அந்த முதல் அடியை எடுத்து வைப்பதும், ஒவ்வொரு அடியிலும் அவருடைய சித்தத்திற்கு நான் சரணடைவதும் என் கீழ்ப்படிதல் இல்லாமல் நடந்திருக்காது என்று எனக்குத் தெரியும்.
நாம் முடிவெடுப்பதில் தேவனைத் தேடும்போது அது அவருக்குப் பிரியமாக இருக்கிறது. நான் ஒரு தவறான திருப்பத்தை செய்திருந்தாலும், அவர் என் பாதையைத் திருப்பி, அவர் என்னை விரும்பும் இடத்திற்கு என்னை மீண்டும் கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு வழி திறந்தார் என்றும் அல்லது ஒரு வழியை அடைத்தார் என்றும் எனக்குத் தெளிவாகத் தெரிந்த நேரங்கள் உள்ளன. என் இதயம் அவருக்குச் சேவை செய்வதை அவர் அறிந்திருப்பதால் அவர் எல்லாவற்றையும் செய்கிறார் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கனத்திலும் நாம் அவரை ஒப்புக்கொண்டு, நமது எதிர்காலத்தை ஒப்படைத்து, அவரைக் கௌரவிக்கும் முடிவுகளை எடுக்க முயற்சித்தால், நம் வாழ்விற்கான அவருடைய நோக்கம் தெளிவாகிவிடும்.
இறுதி இலக்கை நீங்கள் உறுதியாக அறியாவிட்டாலும், இப்போது தேவன் உங்களை என்ன நடவடிக்கை எடுக்க வழிநடத்துகிறார் என்பதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் குழந்தைகளுடன் நன்றாக இருந்தால், தேவாலயத்தில் உங்கள் குழந்தைகளின் ஊழியத்தில் பணியாற்ற முயற்சி செய்யலாம். ஒழுங்கமைப்பதில் நீங்கள் திறமையானவராக இருந்தால், உங்கள் உள்ளூர் ஆடைகள் அலமாரியில் புதிய பொருட்களை எடுத்துச் செல்லவும், விஷயங்களை ஒழுங்காக வைத்திருக்கவும் உங்களுக்கு உதவலாம். தேவன் உங்களை எங்கு வழிநடத்துகிறார் என்பதை உங்களால் இன்னும் அறிய முடியவில்லை என்றால், மக்களை தேவாலயத்திற்கு அழைக்கத் தொடங்குங்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, நாம் அனைவரும் நம்முடன் அதிகமான மக்களை நித்தியத்திற்குக் கொண்டு வர அழைக்கப்பட்டுள்ளோம்.
கொலோசெயர் 3:23 இவ்வாறாக கூறுகிறது, “'நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்”. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் திறமைகளை நன்றாகப் பயன்படுத்தவும், அவருடைய ராஜ்யத்தின் சேவையில் உங்களைச் செலுத்தவும் தொடங்குங்கள். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, தேவனின் மகிமைக்காக எடுத்து வைக்கும் நிச்சயமற்ற ஒரு படி சிறந்தது. தப்பான அடியை எடுத்து வைத்து விடுவோமோ என்ற பயம் உங்களை முன்னேற விடாமல் தடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களது சரணடைந்த வாழ்க்கையை அசாதாரணமான ஒன்றாக உருவாக்க அவர் நம்பகமானவர்.
தேவனே, உமது பிரமாண்டமான திட்டத்தில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி. என் வாழ்க்கைக்கான ஒரு பார்வை உம்மிடம் உள்ளது என்பதை நான் அறிவேன், மேலும் நீர் எனக்காகத் திட்டமிட்ட நோக்கத்தை நோக்கி நான் நடக்க என் நடைகளை சீர்படுத்தும். இந்தத் திட்டத்தின் மூலம் நான் தொடங்கியதைச் செயல்படுத்த எனக்கு உதவும். உமது சத்தியத்தின் கண்ணோட்டத்தில் என்னைப் பார்க்க எனக்கு உதவும். நான் எதைப் பற்றி ஆர்வமாக உள்ளேன், நான் எதில் சிறந்தவன், நான் எதை வென்றேன், நீர் என்னை எங்கு வழிநடத்துகிறீர், ஆகிய அணைத்து புள்ளிகளும் உமது வேலையைச் செய்வதற்கு என்னை எவ்வாறு தனித்துவமாகத் தகுதிப்படுத்துகிறது என்பதைக் காட்டும். என்னைச் செதுக்குவதைத் தொடரும். நான் விரும்புவது எல்லாம் என் வாழ்நாள் முழுவதும் உம்மை கௌரவிக்க வேண்டும். எனக்கு வழிகாட்டி, என் பாதையை நேராக்குங்கள். இயேசுவின் பெரிதான மற்றும் மகிமை நிறைந்த நாமத்தில், ஆமென்.
உங்களது மனதிற்கு சேவை செய்ய தேவன் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினார் என்பதற்காக தேவனை நாங்கள் பிரார்த்திகிறோம்.
இதனோடு தொடர்புடைய வேறு வேதாகம திட்டங்களை ஆராயுங்கள்
மாற்றப்பட்ட மகளிர் ஊழியங்கள் பற்றி மேலும் அறிக
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் உங்களை எதற்காக படைத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அல்லது சில அனுபவங்களின் ஊடக நீங்கள் ஏன் போக நேரிடுகிறது என்று அவரிடம் கேட்டிருக்கிறீர்களா? உங்களால் மட்டுமே நிரப்பக்கூடிய அல்லது செய்யக்கூடிய ஒரு வேலைக்காக நீங்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தொலைந்து போனதாக உணர்ந்தாலும், அல்லது நீங்கள் நகரத் தயங்கினாலும், இந்த 5 நாள் திட்டமானது நீங்கள் தேவனை நம்ப உதவும், எனவே அவரால் உங்களை உங்களது நோக்கத்திற்கு நேராக அழைத்துச் செல்ல முடியும்.
More