மாற்றமடைந்து வாழுதல்: நோக்கம்மாதிரி
காத்திருப்பில்
இந்தத் திட்டத்தின் முதல் மூன்று நாட்கள் நீங்கள் சிந்திக்க நிறைய விஷயங்களைத் தந்தது. நீங்கள் எதைப் பற்றி ஆர்வமாக இருக்கிறீர்கள், எதில் சிறந்தவர் மற்றும் உங்கள் வாழ்வின் கடினமான விஷயங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான புள்ளிகளை இணைக்க முயற்சிக்கும்போது நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் அது புரிந்துகொள்ளக்கூடியது தான். அதைப் பற்றி அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, காத்திருக்கும் நேரத்தைத் தழுவுங்கள். உங்களுக்கான திட்டங்களை அவர் உங்களுக்குக் காண்பிப்பதற்கு முன்பு அவர் உங்களுக்கு ஏதாவது கற்பிக்க விரும்பலாம்.
என்னைப் பொறுத்தவரை, என் வாழ்க்கைகான தேவனுடைய பெரிய திட்டத்தை பார்ப்பதற்கு முன்பு தேவனுடைய சத்தியத்தின் ஊடாக என்னைப் பார்ப்பது எப்படி என்பதை நான் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. என்னிடம் வழங்க எதுவும் இல்லை என்ற பொய்யை நான் பலமுறை நம்பினேன், மேலும் அந்த பொய்களை நம்பி தேவன் என்னை கொண்டு செய்ய விரும்பின காரியங்களை நான் செய்யாமல் போனானேன். நான் ஊழியம் செய்யத் தொடங்கும் போது, எனக்கு போதிய வேதம் தெரியாது என்றும், பயனுள்ள எதையும் செய்ய எனக்கு திறமை இல்லை என்றும் உணர்ந்தேன். என் பாதுகாப்பின்மை இருந்தபோதிலும், அவர் எனக்கு முன்னால் எதை வைத்தாலும் நான் சரணடைவேன் என்று தேவனிடம் வாக்குறுதி அளித்தேன். நான் எனது பாதுகாப்பில் இருந்து வெளியேறி, சேவை செய்ய முன்வந்தபோது, நான் வழங்கக்கூடியது விரும்பப்பட்டது மற்றும் தேவையானது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். உண்மை என்னவென்றால், என்னை யாரும் திறமையற்றவளாகவோ அல்லது திறனற்றவளாகவோ பார்க்கவில்லை. அனால் இன்னும்,தேவனுடைய வார்த்தையின் உண்மையை விட என் தலையில் உள்ள பொய்களுக்கு என் வாழ்க்கையில் அதிக அதிகாரம் கொடுத்தேன். நோக்கம்
மோசேயும் கூட போதாமையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டார். யாத்திராகமம் புத்தகத்தில், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை விடுவிக்கவும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் பின்பற்றபோகும் யூத சட்டங்களையும் வழங்க தேவன் மோசேயைப் பயன்படுத்தினார். மோசே இஸ்ரவேல் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தார், ஆனால் அந்த நோக்கத்தில் அடியெடுத்து வைக்க தேவன் அவரை அழைத்தபோது, அவர் அந்த வேலைக்கு தகுதியானவர் என்று மோசே நம்பவில்லை. தேவன் தன்னுடன் இருப்பதாக உறுதியளித்தாலும், மோசே தான் போதுமானவர் அல்ல என்று வலியுறுத்துகிறார், மேலும் வேறு யாரையாவது அனுப்பும்படி தேவனிடம் கேட்கிறார். இடைநிறுத்தி அதைப் பற்றி சிந்தியுங்கள். காலத்திற்குக் கட்டுப்படாத, அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்த, இன்னும் அவரைப் பயன்படுத்த விரும்பும் சர்வவல்லமையுள்ள தேவனிடம் மோசே பேசுகிறார். மோசேக்கு நம்பிக்கை அளிக்க அது போதுமானதாக இருக்க வேண்டும். இருப்பினும் இன்னும், எத்தனை முறை நம்பிக்கையற்றவராகவே இருக்கிறோம்?
இப்போது, உங்கள் நோக்கம் குறித்து உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உங்களிடம் தனித்துவமான வரங்களும் திறமைகளும் உள்ளன என்று சொல்லும் தேவனுடைய வார்த்தையை நீங்கள் நம்பத்தான் வேண்டும். உங்களது தாலந்துகளை வேறு ஒருவருடன் ஒப்பிடுகையில் அவை அற்பமானதாகத் தோன்றுவதால் அவற்றை உங்களால் அடையாளம் காண முடியாமல் இருக்கலாம் அல்லது அவை மிக எளிதாக வருவதால் அவற்றை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். உண்மை என்னவென்றால், உங்களுக்கு இயல்பாக வரும் விஷயங்கள் எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல. நீங்கள் வழங்குவது சிறப்பானது, மேலும் நீங்கள் தேவனுடைய திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்க அவர் உங்களை வனைந்து உள்ளார். அது என்ன என்று அவரிடம் கேளுங்கள்.
தேவனை எப்படிக் கேட்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள். அவருடைய வார்த்தையான வேதாகமத்தை தினமும் படியுங்கள். அவருடன் பேசுவதன் மூலமும், அவரைக் கேட்பதன் மூலமும் வலுவான ஜெப வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். கிறிஸ்துவின் குணநலன்களை பிரதிபலிக்கும் நபர்களுடன் உங்களைச் சுற்றி கொள்ளுங்கள். தேவனுடன் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்தவே செயல்படுங்கள், விரைவில், அவர் உங்கள் உள்ளதை ஏவும் போது உங்களால் அவருடைய குரலை அறிந்துக்கொள்ள முடியும்.
காத்திருப்பதில் தொலைந்து போனதாக உணரும்போது, தேவனுடைய வார்த்தையை கேட்பதில் கவனம் செலுத்துங்கள். அவர் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அறியுங்கள். பொய்களைக் கண்டறிந்து அவற்றை உங்களுக்கு உணர்த்துமாறு அவரிடம் கேளுங்கள், அதனால் அவர்கள் உங்கள் மீது உரிமை கோர மாட்டார்கள். சிறிய விஷயங்களில் கீழ்ப்படிதலைக் கடைப்பிடிப்பது எப்படி என்பதை பயிற்சி செய்யுங்கள், அதனால் அவர் இன்னும் அதிகமான பொறுப்பாகளை தரும் வேளையில் நீங்கள் தயாராக இருப்பீர்கள். நீங்கள் எதில் சிறந்தவர் என்பதைக் காட்டும்படி அவரிடம் கேளுங்கள், பின்னர் உங்களிடம் உள்ள அனைத்தையும் அவருக்கு வழங்க தயாராக இருங்கள். நீங்கள் அவருக்காகக் காத்திருக்கும்போது இவற்றைச் செய்யுங்கள், ஏனென்றால் பல சமயங்களில், சரணடைவதற்கும் கேட்பதற்கும் நாம் தயாராக உள்ளதன் மறுபக்கத்தில்தான் நமது நோக்கம் இருக்கிறது.
தேவனே, எனக்காக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை உருவாக்கியதற்கு நன்றி. உமது கண்களால் என்னைப் பார்க்கவும், என்னைத் தடுக்கக்கூடிய அனைத்து பொய்களையும் தூக்கி எறியவும் எனக்கு உதவும். உமது சாயலில் நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கபட்டுள்ளேன் என்றும் என்னைப் போல் வேறு யாரும் இல்லை என்றும் நம்ப எனக்கு உதவும். என்னைத் தொடர்ந்து செம்மைப்படுத்தி, எனக்காக நீர் வைத்திருக்கும் நோக்கத்திற்காக என்னைத் தயார்படுத்தும். உம்முடன் நெருக்கமாக வளரவும், உமது தேவாலயத்தில் எனக்காக நீர் உருவாக்கிய இடத்தை நிரப்பவும் நான் எடுக்க வேண்டிய அடுத்த படியை எனக்குக் காட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் உங்களை எதற்காக படைத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அல்லது சில அனுபவங்களின் ஊடக நீங்கள் ஏன் போக நேரிடுகிறது என்று அவரிடம் கேட்டிருக்கிறீர்களா? உங்களால் மட்டுமே நிரப்பக்கூடிய அல்லது செய்யக்கூடிய ஒரு வேலைக்காக நீங்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தொலைந்து போனதாக உணர்ந்தாலும், அல்லது நீங்கள் நகரத் தயங்கினாலும், இந்த 5 நாள் திட்டமானது நீங்கள் தேவனை நம்ப உதவும், எனவே அவரால் உங்களை உங்களது நோக்கத்திற்கு நேராக அழைத்துச் செல்ல முடியும்.
More