மாற்றமடைந்து வாழுதல்: நோக்கம்மாதிரி
தேவனிடமிருந்து தாலந்துகள்
உங்களது வாழ்க்கையின் அனைத்து பகுதிகளும் எவ்வாறு ஒன்றாகப் பொருந்துகின்றன என்பதை எப்போதாவது நீங்கள் கருத்தில் கொண்டது உண்டா? நீங்கள் அதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும், தேவன் உங்கள் பாதையில் சில விஷயங்களை வைத்து, உங்களது பல்வேறு திறன்களை பலப்படுத்த வாய்ப்புகளை அளித்தார், இவ்வாறாக அவர் உங்கள் வாழ்வின் நோக்கத்திற்காக உங்களை தயார்படுத்துகிறார்.
30 வயதுப் பெண்ணாக, எனது உற்சாகமான ஆண்டுகளை நினைத்துப் பார்த்ததும், அது எப்படி எனது இப்போதைய வாழ்க்கையுடன் இணைந்துள்ளது என்று யோசித்து வியந்தது எனக்கு நினைவிருக்கிறது. 13 ஆண்டுகளாக, மழலையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளியின் மூத்த ஆண்டு வரை, நான் என் பள்ளியை உற்சாகப்படுத்தினேன் மற்றும் பெப் பேரணிகளை வழிநடத்தினேன். பெரியவளாக, அந்த அனுபவங்களை தேவன் என் எனக்குக் கொடுத்தார் என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை.
அதற்குப் பிறகு, நான் ஒரு மாநாட்டிற்குச் சென்றேன், அங்கு பெண்கள் மற்றவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்துவது பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைக் கேட்டேன். "எப்போதாவது அதைச் செய்ய வேண்டும்" என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். அப்போதே, தேவன் எனக்கு புள்ளிகளை இணைத்தார். எனது சிறுவயது பயிற்சியின் காரணமாக, பெரிய கூட்டங்களுக்கு முன்னால் என்னால் பயமின்றி வசதியாக இருக்க முடிகிறது மற்றும் அவர்களின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. அந்த ஆண்டுகளில், தேவன் எனக்காக உருவாக்கிய பந்தயத்திற்காக என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை உணர்ந்தேன்.
உங்களது ஒவ்வொரு வாழ்க்கை அனுபவமும் உங்களை தனித்துவமாக்குகிறது. தேவன் உங்களுக்கு வழங்கிய இயற்கையான திறமைகள், உங்களுக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகள் மற்றும் நீங்கள் பெற்ற திறன்களை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு வளர்ந்தீர்கள், எங்கு பயணம் செய்தீர்கள், என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று சிந்தியுங்கள். ஒருவேளை நீங்கள் வெவ்வேறு கலாச்சாரங்களைப் புரிந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள மக்களுடன் பழகலாம் அல்லது மக்களை ஊக்குவிக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு நகர்த்தும் கலையை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற பல்வேறு அனுபவங்கள் தானாகப் பொருத்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால் எல்லாம் ஒன்றுபெற, தேவனை மகிமைப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள ஒன்றை நோக்கி அவை உங்களை வழிநடத்துகின்றன.
இதை நாம் எஸ்தர் புத்தகத்தில் காண்கிறோம், இது ஒரு யூதப் பெண்ணின் கதை, அதில் எஸ்தர் தனது மக்களை வெகுஜன இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுகிறாள். பாரசீக மன்னரின் மனைவி மற்றும் ராணியாக இருந்தாலும், அவள் தன்னை சிறப்பு வாய்ந்தவளாகவோ அல்லது முக்கியமானவள் என்றெல்லாம் பாராமல் தன்னையும் தேவனின் திட்டத்திற்கு ஒப்புக்கொடுக்கிறாள். அவள் உயிர் பிழைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் யார், அவள் எங்கு வாழ்ந்தாள், அவள் வாழ்ந்த காலம், அவள் யாரிடம் செல்வாக்கு பெற்றாள், தேவன் அவளுக்குக் கொடுத்த ஞானம் ஆகியவற்றின் காரணமாக, இஸ்ரவேலர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற அவர் அவளைப் பயன்படுத்தினார்.
தேவன் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த திறமைகள், தாலந்துகள், கல்வி, நிதி பலம், அந்தஸ்து அல்லது செல்வாக்கை உங்களுக்கு வழங்கியுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதுதான் கேள்வி. தேவனுடைய வேலையைச் செய்ய நீங்கள் முழுநேர ஊழியத்தில் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் வியாபாரத்தில் அல்லது வீட்டில், பலருடன் அல்லது சிலருடன் தேவனுக்காக வேலை செய்யலாம். நம்மில் பெரும்பாலோர் பிரபலமாக மாட்டார்கள், ஆனால் நம் செல்வாக்கு வட்டத்தில் இருப்பவர்களுக்குத் தேவைப்படும் செல்வாக்கு மற்றும் தனித்துவமான தாலந்துகள் அனைவருக்கும் உள்ளன. இந்த விஷயங்கள் எவ்வாறு உங்களை அவருடைய நோக்கத்திற்காக சித்தப்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள்.
தேவனே, நீர் எனக்கு வழங்கிய அனைத்திற்கும், என் பாதையில் நீர் வழங்கிய ஒவ்வொரு வாய்ப்புக்கும் நன்றி. நீர் எனக்கு வழங்கிய அனைத்து பலம், குணாதிசயங்கள், கற்றல், செல்வாக்கு மற்றும் எனக்கே தனித்துவமான தாலந்துகளை எனக்கு வெளிப்படுத்தும். எனது வாழ்க்கைக்கான உமது நோக்கத்தை சுட்டிக்காட்டி நீர் எனக்கு அளித்த தாலந்துகளோடு அவை அனைத்தும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை வெளிப்படுத்தும். எனது வாழ்வினைக்கொண்டு உமது ராஜ்யத்திற்காக ஊழியஞ்செய்ய விரும்புகிறேன். உமக்கு மகிமையை கொண்டுவர எனக்கு உதவும். இயேசுவின் பெயரில், ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் உங்களை எதற்காக படைத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அல்லது சில அனுபவங்களின் ஊடக நீங்கள் ஏன் போக நேரிடுகிறது என்று அவரிடம் கேட்டிருக்கிறீர்களா? உங்களால் மட்டுமே நிரப்பக்கூடிய அல்லது செய்யக்கூடிய ஒரு வேலைக்காக நீங்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தொலைந்து போனதாக உணர்ந்தாலும், அல்லது நீங்கள் நகரத் தயங்கினாலும், இந்த 5 நாள் திட்டமானது நீங்கள் தேவனை நம்ப உதவும், எனவே அவரால் உங்களை உங்களது நோக்கத்திற்கு நேராக அழைத்துச் செல்ல முடியும்.
More