மாற்றமடைந்து வாழுதல்: நோக்கம்மாதிரி

Living Changed: Purpose

5 ல் 3 நாள்

கஷ்டங்கள் மத்தியில் நோக்கம்

தேவன் நமது கடந்த காலத்தின் கஷ்டங்களை எவ்வாறு நன்மைக்காகப் பயன்படுத்துவார் என்பதைப் பார்ப்பது சில சமயங்களில் கடினமாக இருக்கலாம். ஆயினும்கூட, வேதாகமத்தில், தேவன் மக்களின் வாழ்க்கையில் இருந்த இருண்ட, மிகவும் கடினமான சூழ்நிலைகளை எடுத்து, அவற்றை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்தியதற்கான உதாரணங்களைக் காண்கிறோம்.

ஆதியாகமம் 37-50 யோசேப்பின் கதையைச் சொல்கிறது, யோசேப்பின் சகோதரர்கள் அவன் மீது பொறாமை மற்றும் வெறுப்பு நிறைந்தவர்களாக இருந்தார்கள், அவர்கள் அவனை அடிமையாக விற்றுப்போட்டனர். அந்த கஷ்டங்களுடன் கூட போத்திபாரின் மனைவியின் பொய்கள் அவனை சிறையில் அடைத்தது. நம்மில் பலரைப் போலவே, யோசேப்பும் துரோகம், நிராகரிப்பு மற்றும் கைவிடுதல் போன்ற பெரும் உணர்வுகளை எதிர்கொண்டான் - ஆனால் தேவன் அவனுக்கும் ஒரு நோக்கத்தை வைத்து இருந்தார். இறுதியில், அவனது நம்பிக்கையற்ற சூழ்நிலையின் மத்தியில் இருந்து, யோசேப்பு தனது குடும்பத்தையும் எகிப்து முழுவதையும் பஞ்சம் மற்றும் மரணத்திலிருந்து காப்பாற்றும் அதிகாரத்துடன் பார்வோனுக்கு அடுத்தபடியான பதவி வகித்தான். திரும்பிப் பார்க்கும்போது, ​​தேவன் அவனை ஒருபோதும் கைவிடவில்லை, ஆனால் யோசேப்பி வாழ்க்கையில் அமைதியாக ஒரு அதிசயத்தை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.

யோசேப்பை போலவே, நாமும் கூட அனைவரும் வலியையும் மன வேதனையையும் அனுபவிக்கிறோம். நம்மில் சிலர் சொல்ல முடியாத சோகத்தையோ அல்லது மன்னிக்க முடியாத துஷ்பிரயோகத்தையோ கூட அனுபவித்து இருக்கலாம். இருப்பினும், இதுபோன்ற கஷ்டங்கள், தேவனுடன், நாம் சேர்ந்து செயல் படும்போது நமது நோக்கத்தைக் கண்டறிய நமக்கு நம்பிக்கையை தருகிறது.

பல சமயங்களில், நம் காயங்கள் இந்த உலகத்தை வேறு யாராலும் செய்ய முடியாத வகையில் சாதகமாக மக்களை ஈடுபடுத்த வாய்ப்பளிக்கின்றன. பெற்றோரை இழந்தவர்களால் மட்டுமே அந்த இழப்பு எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மை. என் அப்பாவின் இழப்பு இன்றும் வலிக்கிறது, ஆனால் அவ்வலி மற்றவர்களின் வாழ்க்கையில் ஆறுதல் கூறுவதற்கு எனக்கு திறனை அளிக்கிறது என்பதை இப்போது என்னால் பார்க்க முடிகிறது. என் அனுபவத்தில், நமது வலி உண்மையில் நம் நோக்கத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

உங்கள் கடந்த காலத்தின் காரணமாக, ஒருவருக்கு அவர்களின் திருமண வாழ்க்கைக்கான நம்பிக்கையை வழங்குவதற்கு நீங்கள் தனித்தனியாகத் தகுதி பெற்றிருக்கலாம் அல்லது உங்கள் இளம்பருவத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்ற குடும்பங்களில் உள்ள சுயத் தீங்குக்கான எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண உதவும். உங்கள் போராட்டங்கள் காரணமாக, கருவுறாமை, அடிமையாதல் அல்லது புற்றுநோய் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் நீங்கள் ஒருவருக்கு உதவலாம். உங்கள் கதை எதுவாக இருந்தாலும், உங்கள் சாட்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அதில் அழகும் அதிகாரமும் இருக்கிறது.

நீங்கள் தற்போது கடினமான பருவத்தில் வாழ்கிறீர்கள் என்றால், எதிர்காலத்தில் தேவன் உங்களுக்காக என்ன வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி உங்களால் சிந்திக்க முடியாமல் போகலாம். அது சரி. இந்த நேரத்தில், தேவன் உங்கள் வலியை எவ்வாறு பயன்படுத்துவார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவர் செய்வார் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.அது உங்களுக்கு நம்பிக்கையைத் தரட்டும்.

தேவனே, என் வாழ்வில் நான் கடந்து வந்த கடினமான காரியங்கள் அனைத்தையும் வீணாக விடமாட்டேன் என்று எனக்கு உறுதியளித்ததற்கு நன்றி. என் நலனுக்காக எல்லாவற்றையும் செய்வதாக உறுதியளித்ததற்கு நன்றி. இயேசுவே, எனது கடந்த காலத்தின் இருண்ட, அசிங்கமான மற்றும் அபூரணமான பகுதிகள் அனைத்தையும் நான் உங்களுக்குத் தருகிறேன், அவற்றை நீங்கள் அழகாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். என்னை குணப்படுத்தி, உமது நோக்கங்களுக்காக எனது கடந்த காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டுங்கள். உம் மீது நம்பிக்கையுடன் இருக்க என்னை நிரப்புங்கள். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Living Changed: Purpose

தேவன் உங்களை எதற்காக படைத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அல்லது சில அனுபவங்களின் ஊடக நீங்கள் ஏன் போக நேரிடுகிறது என்று அவரிடம் கேட்டிருக்கிறீர்களா? உங்களால் மட்டுமே நிரப்பக்கூடிய அல்லது செய்யக்கூடிய ஒரு வேலைக்காக நீங்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தொலைந்து போனதாக உணர்ந்தாலும், அல்லது நீங்கள் நகரத் தயங்கினாலும், இந்த 5 நாள் திட்டமானது நீங்கள் தேவனை நம்ப உதவும், எனவே அவரால் உங்களை உங்களது நோக்கத்திற்கு நேராக அழைத்துச் செல்ல முடியும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Changed Women's ஊழிங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழ்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பாருங்கள்: https://www.changedokc.com/