கடினமான காலங்களில் கடந்து செல்லுதல்மாதிரி
காத்திருப்பு அறை
ஒருவர் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, "அதற்கிடையில்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். நமது வாழ்விலும் "அதற்கிடையில்," என்ற அந்த காலம், நமது குணமடைதலுக்கான காத்திருப்பின்போதோ அல்லது நாம் அதிசயத்திற்காக காத்திருக்கும்போதோ, அது பெரும்பாலும் அழகாக இருப்பதில்லை, இல்லையா?
அப்படியானால், அதற்கிடையில் நாம் என்ன செய்வது? நம்மால் பார்க்க முடியாதபோது, தேவன் செயல்படுகிறார் என்ற நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எவ்வாறு காத்துக்கொள்ளுவது? உங்கள் போராட்டத்தில் நீங்கள் காத்திருக்கும் போது உங்களுக்கான சில பரிந்துரைகள்:
உங்கள் வலியில் அவரைப் போற்றுங்கள்
நம் வேதனையில் நாம் செய்யக்கூடிய முக்கியமான காரியங்களில் ஒன்று தேவனை நோக்கி ஜெபிப்பது. அவர் ஒவ்வொரு நாளும் அதற்கு தகுதியானவர். அவர் நமக்காகச் செய்த அனைத்தையும் நாம் நினைக்கும் போதும், நாம் அவருடன் செலவிடப்போகும் நித்தியத்தை நினைக்கும் போது, நம்மால் எப்படி ஜெபிக்காமல் இருக்க முடியும்? தேவனின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துங்கள்—அவர் எல்லையற்றவர், மாறாதவர், சர்வ வல்லமையுள்ளவர், பரிபூரணமானவர், இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர், மேலும் அவர் எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கிறார். நமது சோதனையின் வேளையில் நாம் அவரை துதித்து நாம் விரும்பும் முடிவைப் பெறுவோம்.
அவரை மகிமைப்படுத்துங்கள்
இவ்வலியின் நடுவே, உங்களால் உங்களது பலவீனத்தை மட்டுமே காண முடியும், நீங்கள் வளர்ந்து வரும் ஆவிக்குரிய வாழ்வையோ அல்லது நீங்கள் எவ்வளவு வலுவாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஜெபம், ஆராதனை, வேதவார்த்தையை வாசிப்பது மற்றும் அவருடைய வாக்குறுதிகளை நம்புதல் ஆகியவற்றின் ஒவ்வொரு முறையும் உங்கள் ஆவி பலப்படுத்தப்படுகிறது. நமது பலவீனத்தில்தான் அவருடைய பலம் பூரணமாகிறது. சோதனைகள் நம்மை உருவாக்குகிறது அல்லது உடைக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். உங்களுடையது உங்களை உருவாக்குகிறது என்று நம்புங்கள்.
உங்கள் இதயத்தை அவரிடம் ஊற்றுங்கள்
நீங்கள் சுமக்கும் வலிகள் அனைத்தும் தேவனை பயமுறுத்துவதில்லை. உங்கள் கேள்விகள், பயங்கள் மற்றும் உங்கள் கோபத்தை கூட அவரால் முழுமையாக கையாள முடியும். அவரிடம் வந்து கொண்டே இருங்கள். சோதனைகள் நம்மை கிறிஸ்துவிடம் பற்றிக்கொள்ள அல்லது கிறிஸ்துவை விட்டு ஓடிப்போகச் செய்யலாம். அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். இந்த கஷ்டம் உங்கள் வாழ்க்கையில் ஏன் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். விஷயங்கள் கடினமாக இல்லாதபோது நீங்கள் கற்றுக்கொண்ட உண்மையை, நடைமுறைக்குக் கொண்டுவருவது இங்குதான். இதில் இருந்து வெளிவர நாம் தினசரி அவரிடம் சரணடைந்து அவரை விசுவாசிக்க வேண்டும்.
நித்தியத்தை மனதில் வையுங்கள்
அநித்தியத்தின் மீது நம் கண்களை நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். நாம் காணக்கூடியவற்றில் கவனம் செலுத்தும்போது, நாம் தற்காலிகமாக கவனம் செலுத்துகிறோம். கண்ணுக்குத் தெரியாதது, திரைக்குப் பின்னால் தேவன் செயல்படும் விதம்தான் நித்தியமானது. தேவன் நம்மில், நம் மூலமாக, நமக்காக, ஆம், நம்முடன் கூட ஏதோ ஒன்றைச் சாதித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய சரியான காலக்கெடு நிறைவேறுவதைப் பார்க்கும்போது பொறுமையை வெளிப்படுத்துவதைத் தேர்ந்தெடுப்போம்.
உங்கள் காத்திருப்பின் காலத்தை நீங்கள் தாங்கிக் கொள்ளும்போது, திரும்பிப் பார்த்து உங்கள் முன்னேற்றத்தைத் பார்க்க பயப்பட வேண்டாம். ஏனென்றால் நீங்கள் சிலவற்றைச் செய்துள்ளீர்கள். பின்னர், அடுத்த படியை எடுத்துக்கொண்டே இருங்கள். நீங்கள் எப்போது எழுந்திருக்கப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் இனி நடக்க முடியாது என்று நினைக்கும் நாள் உங்கள் முன்னேற்ற நாளாக இருக்கலாம்.
பிரதிபலிப்பு
- உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காத்திருப்பு அறையில் இருந்தால், ஒவ்வொரு நாளும் அவர் உங்களுக்குள் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படி தேவனிடம் கேளுங்கள்.
- இன்றைய வேத வாசிப்பில், எந்த வசனம் உங்களுக்குள் மிகவும் எதிரொலிக்கிறது? உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4-நாள் திட்டத்தில், நாம் தனியாக இல்லை என்பதையும், நம் வலிக்கு தேவன் ஒரு நோக்கம் வைத்து இருப்பதையும், அதை அவர் தனது பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவார் என்பதையும் அறிந்து உற்சாகமடைவோம்.
More