கடினமான காலங்களில் கடந்து செல்லுதல்மாதிரி
உறுதியாக இருங்கள்
இப்போது உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டத்தை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால், நீங்கள் தனியாக இல்லை. உண்மையில், உலகில் 100% மக்கள் தங்கள் வாழ்க்கையில் சில வகையான கஷ்டங்கள் அல்லது கடினமான பருவங்களை அனுபவிப்பார்கள். நீங்கள் இப்போது ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்தாலும், அல்லது அப்படிப்பட்ட சூழலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாலோ அல்லது கடினமான சூழலுக்குல் செல்லப் போகிறீர்கள் என்றாலோ, எவ்வகை சூழல் என்றாலும் அவை வாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும். கடினமான காலங்களை யாரும் வேண்டும் என்றே அனுபவிக்க மாட்டார்கள். இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் - சவாலான நேரத்தை அனுபவித்து மகிழ்ந்த ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அநேகமாக இல்லை.
பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்து எதுவுமில்லை அல்லது கடினமான நேரங்களுக்குள் செல்வதைத் தடுக்கும் எந்த ஒரு ஊக்குவிக்கும் சிந்தனையோ அல்லது சுய பேச்சும் இல்லை. எனவே, நமது கடினமான சூழ்நிலைகளில் நாம் மட்டுமே செல்வது போல் உணரலாம், ஆனால் அது உண்மை இல்லை.
இயேசு போதித்ததில் நாம் உற்சாகத்தைக் காணலாம். யோவான் 16:33-ல் அவர் இவ்வாறாக கூறுகிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" நாம் எதை எதிர்க்கப் போகிறோம் என்பதை அவர் புரிந்துகொண்டார்—குறைபாடு, பாவம், வெறுப்பு மற்றும் ஆவிக்குரிய வாழ்வின் எதிரி நிறைந்த உலகம் இது. அவன் நம்மை அழிக்க விரும்புகிறான். இந்த ஏமாற்றம் நிறைந்த உலகில் மனம் தளர்ந்து வாழ வேண்டும் என்றில்லை. முடிவில் நாம் வெற்றி பெறுவோம் என்பதை அறிந்தால் இன்னும் நிறைவான, வளமான வாழ்க்கையை வாழலாம்.
இயேசு ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே பூமிக்கு வந்தார்—மனிதகுலம்.<ஒரு/em> அவர் நம்மை இரட்சிக்கவும் நித்திய ஜீவனை வழங்கவும் வந்தார். நாம் இயேசுவுக்கு ஆம் என்று கூறி, அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அந்த கஷ்டங்களும் கடினமான நேரங்களும் நம்மை விட்டு முற்றிலும் நீங்கும் என்று பலர் அடிக்கடி கற்பிக்கப்படுகிறார்கள். அது வெறுமனே பொய்யானது.
இந்தத் திட்டத்தைப் படிப்பது நீங்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களை நீக்காது அல்லது நீங்கள் தாங்கும் எந்த மன வேதனையையும் நீக்காது. ஆனால் அடுத்த படியை நீங்கள் எடுப்பதற்கு உங்களுக்கு சில பலத்தையும் தைரியத்தையும் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் இன்று இருபது அடிகள் எடுக்க வேண்டியதில்லை—ஒரு படி எடுத்து வையுங்கள். பின்னர் நாளை, இன்னொன்றை எடுங்கள். நமது வலியின் பின்னால் உள்ள சில ஏன்கள் பற்றியும் அவை கொண்டு வரும் கடினமான சாலைகளில் நாம் எவ்வாறு செல்லலாம் என்பதைப் பற்றியும் பேசுவோம்.
இந்தத் தலைப்பைப் பற்றி நாம் விவாதிக்கும்போது, தேவன் உங்களை எவ்வளவு நேசிக்கிறார், உங்கள் வலியை அவர் எப்படித் தம் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார், மேலும் அவர் உங்களை உள்ளே இருந்து எப்படி மாற்றுவார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அவர் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறார், உங்கள் வலியிலும் கூட. அவை என்ன என்பதைத் தொடர்ந்து பார்க்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.
பிரதிபலிப்பு
- உங்கள் எண்ணங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கை நிகழ்வு என்ன? இதற்கு நீங்கள் விரும்பும் முடிவை எழுதுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4-நாள் திட்டத்தில், நாம் தனியாக இல்லை என்பதையும், நம் வலிக்கு தேவன் ஒரு நோக்கம் வைத்து இருப்பதையும், அதை அவர் தனது பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவார் என்பதையும் அறிந்து உற்சாகமடைவோம்.
More