கடினமான காலங்களில் கடந்து செல்லுதல்மாதிரி

Going Through Hard Times

4 ல் 2 நாள்

நாம் ஏன் சோதனைகளை சந்திக்கிறோம்

நம் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது, ​​பொதுவாக நம் உதடுகளில் முன்னணியில் இருக்கும் ஒரு வார்த்தை ஏன். சோதனைகள் கடினமானவை, வேதனையானவை மற்றும் துன்பகரமானவை என்பதால், நாம் பொதுவாகக் கேட்கிறோம், “ எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?” மேலும் நாம் தேடும் பதிலைப் பெறவே முடியாது. நம்முடைய சொந்த ஆசைகள் சோதிக்கப்படுவதால், நாம் எதை நம்புகிறோம் என்பதை அவை சந்தேகிக்க வைக்கும்.

நாம் 1 ஆம் நாளில் கற்றுக்கொண்டது போல, நமக்கு சிக்கல் இருக்கும் என்று இயேசு நமக்குக் கற்பித்தார். கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக வாழ்வது சிரமம் இல்லாதது அல்ல. வீழ்ந்த மற்றும் உடைந்த விஷயங்களைச் செய்யும் வீழ்ந்த மற்றும் உடைந்த மனிதர்களால் நம் உலகம் விழுந்து உடைந்துவிட்டது. எனவே‌ நிச்சயமாக, சோதனைகள் இருக்கும். நம்மைப் பாதிக்கும் விஷயங்களை மக்கள் செய்வார்கள். மற்றவர்களையும் நம்மையும் பாதிக்கும் விஷயங்களை நாம் செய்வோம். நாம் விரும்பாமல் இருக்கலாம், ஆனால் நம் செயல்கள் இன்னும் ஒருவரின் வாழ்க்கையில் வலியை ஏற்படுத்துகின்றன. அவர்கள் நமது சொந்தமாகவும் இருக்கலாம்.

சோதனைகளை எதிர்கொள்வதற்கான சில காரணங்கள் இங்கே:

ஆவிக்குரிய வளர்ச்சி
சோதனைகள் நம் வாழ்வில் எவ்வாறு நுழைகின்றன என்பதைப் பொருட்படுத்தாமல், அவை நம் குணத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படலாம். நமது பொறுமையையும், நெகிழ்ச்சியையும் சோதிக்கும் விஷயங்களைச் சந்திக்கும் போது, ​​நாம் சோதனையுடன் வேலை செய்து, அது நம்மைப் பலப்படுத்த அனுமதிக்கலாம் அல்லது அதற்கு எதிராக தொடர்ந்து போராடலாம். கடினமான நேரங்கள் நம்மைச் செம்மைப்படுத்த அனுமதிப்பது நம்பமுடியாத அளவிற்கு கடினம், ஆனால் நாம் அதைச் செய்யும்போது, ​​நாம் ஒரு சிறந்த மனிதராக மற்றும் அதிக தெய்வபயத்துடன் உருமாற்றம் பெற்று இருப்போம்.‌அந்த உருமாற்றம் நம் வாழ்வில் மதிப்புக்குரியது.

நமது வாழ்க்கை தேர்வுகளின் விளைவுகள்
நமது ஒவ்வொரு முடிவுக்கும் கடுமையான யதார்த்தம் இருக்கிறது, அதுதான் பின்விளைவுகள். பெரும்பாலும், நம்முடைய சோதனைகள் மற்றும் கஷ்டங்கள் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் மற்றும் நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதன் நேரடி விளைவேயாகும். வேறொருவரின் செயல்கள் அல்லது நமது சொந்த செயல்களால் நாம் பாதிக்கப்படலாம். சில செயல்கள் பாவமானவை, அவை இருக்கும் போது, ​​அதன் பின் வரும் விளைவுகள் தீமையை தவிர வேறு எதுவும் இல்லை.

ஆவிக்குரிய தாக்குதல்
நம்முடைய ஆவிக்குரிய எதிரியான சாத்தானைப் பொறுத்தவரை, நாம் அவனுக்கு அதிக மதிப்பை கொடுக்கிறோம் அல்லது மிகக் குறைவாகக் கொடுக்கிறோம். நமக்கு நடக்கும் ஒவ்வொரு கெட்ட விஷயமும் அவனுடைய தவறு அல்ல, ஆனால் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கடினமான சூழ்நிலைகளிலும் அவனுடைய பங்கும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின் 3 ஆம் நாளில், நம்பிக்கை நிரம்பிய வேதவசனங்களுக்குள் நாம் மூழ்குவோம், அவை தேவன் எப்போதும் எதையும், எல்லாவற்றையும் நம் நன்மைக்காகவும் மற்றும் உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டும்.

பிரதிபலிப்பு

  • நீங்கள் சந்தித்த சோதனையை மீண்டும் நினைத்துப் பாருங்கள். இது உங்கள் குணத்தை வளர்ப்பதற்கான சோதனையாகவோ அல்லது உங்களின் வாழ்க்கை தேர்வின் விளைவு என்றோ அல்லது ஆவிக்குரிய தாக்குதல் என்றோ நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.
நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Going Through Hard Times

நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4-நாள் திட்டத்தில், நாம் தனியாக இல்லை என்பதையும், நம் வலிக்கு தேவன் ஒரு நோக்கம் வைத்து இருப்பதையும், அதை அவர் தனது பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவார் என்பதையும் அறிந்து உற்சாகமடைவோம்.

More

இந்த வேதகமத் திட்டம் யூவெர்ஷனால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது.