கடினமான காலங்களில் கடந்து செல்லுதல்மாதிரி

Going Through Hard Times

4 ல் 3 நாள்

தேவன் சோதனைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்

நம் வாழ்க்கையில் இந்த சவாலான பருவங்களை நாம் கடந்து செல்லும்போது, நாம் நம்மை வளர்த்துக் கொள்கிறோம் அல்லது அதில் தங்கி விடுகிறோம். கடினமான நேரங்கள் நம் வழியில் வரும்போது நாம் தேவன் மீது வருத்தப்படுவதில் எந்த தவறும் இல்லை. நம் அனைவரும் அந்த அனுபவம் உண்டு. ஆனால், நாம் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டுபிடிப்போம். சோதனைகளின் மூலம் நமது நம்பிக்கை முதிர்ச்சியடைகிறது என்பதை நாம் உணரக்கூடிய ஒரு வழி, நம்முடைய “ஏன்”கேள்விகள் “எப்படி”கேள்விகளாக மாறும்போதே. 

சவால்களை என் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
இந்த சோதனையின் காரணமாக நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எவ்வாறு பாதிக்கிறோம்?
இந்த சவாலின் மூலம் நாம் எவ்வாறு நன்மையைக் கொண்டு வர முடியும்?

கிறிஸ்தவ வட்டாரங்களில் ஒரு பிரபலமான சொற்றொடர் சுற்றி வருகிறது, அது தேவன் எதையும் வீணாக்குவதில்லை. அது முற்றிலும் உண்மையே. தேவையற்ற, சவாலான சூழ்நிலைகளில் நாம் தள்ளப்பட்டாலும் அல்லது நமது தேர்வுகள் நம்மை அங்கு அழைத்துச் சென்றாலும், தேவன் நம் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், மற்றவர்களை பாதிக்கவும், மகிமையைப் பெறவும் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்துவார். நம் வலியை தேவன் என்ன செய்கிறார் என்று விவாதிப்போம்.

அவர் நம்மை மாற்றுகிறார்
நம்மை ஆழமாகப் புண்படுத்தும் உக்கிரமான சோதனைகளால் நாம் பாதிக்கப்படும்போது, நம்மில் பெரும்பாலோர் “அதைக் கடக்க” விரும்புகிறோம். நாம் அதன் வழியாகச் செல்ல வேண்டும். மறுபுறம் குணமடைவதைக் காண, நம் இதயங்களை உடைக்கும் அனைத்தையும் உரையாற்றுவதன் மூலம் நாம் வலியைத் தள்ள வேண்டும். நம் வாழ்வில் புயல்களை கடக்கும்போது, அதற்கு நாம் பலமாக இருப்போம். 

அவர் மற்றவர்களை மாற்றுகிறார்
நம்மில் பலர் நம் வாழ்வில் சவால்களைச் சகித்துக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீங்கள் கல்லூரியில் பட்டம் பெறாமல் இருக்கலாம், ஆனால் உங்களது சவால் நிறைந்த வாழ்க்கைக்கு நீங்களே நிபுணர்கள். தேவன் இதைப் பார்க்கிறார், மற்றவர்களுக்கு உதவுவதற்காக நம்மை அவருடைய பாத்திரங்களாக கருதுகிறார். பவுல் 2 கொரிந்தியர் 1:4-ல் இவ்வாறாக எழுதுகிறார், ‭"தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்." நான் அதை மேற்கொண்டேன் என்று சொல்வதற்காக மட்டுமே அவர் நம்மை இருண்ட துன்பங்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இல்லை, அவர் நமக்குக் கொடுத்த ஆறுதலை நாம் பெற்று மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். 

ரோமர் 8:28 இவ்வாறாக கூறுகிறது, "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” தேவன் நன்மைக்காக சில வேலைகளை செய்கிறார் என்று கூறுகிறது. சில விஷயங்களிலும் மற்றும் சில விஷயங்களிளில் தவிர்த்து என்றல்ல, அவர் எல்லா விஷயங்களையும் நன்மைக்கேதுவாக செய்கிறார். எடுத்துக்காட்டாக, மிக மோசமான காரியத்தை அதாவது—இயேசு சிலுவையில் மரித்ததைக் தேவன் எடுத்து—அதை அதிக நன்மைக்காக—மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக பயன்படுத்தினார். வலி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது தேவனுடைய மீட்பை அழகாகக் காட்டுவதற்கான வாய்ப்பு. நம் வாழ்வின் ஒவ்வொரு மீட்பின் கதையும், நம் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை அவர் எவ்வாறு வெற்றிகளாக மாற்றினார் என்பதன் வெளிப்பாடு. அதில் தேவன் மகிமையைப் பெறுகிறார். 

இந்தத் திட்டத்தின் இறுதி நாளில், நமது சவாலான பருவங்கள் நாம் விரும்புவதை விட ஏன் நீண்ட காலம் நீடிக்கின்றன என்பதைப் பற்றி விவாதிப்போம். மேலும் காத்திருப்பில், தேவனை எப்படி அதிகமாக நம்புவது மற்றும் நம் நம்பிக்கையில் வளருவது எப்படி என்பதை கற்றுக்கொள்வோம்.

பிரதிபலிப்பு

  • நீங்கள் கடந்து வந்த மிகவும் கடினமான சோதனை எது? வேறொருவருக்கு ஆறுதலாக இருக்க உங்கள் வலியை எவ்வாறு பயன்படுத்தலாம்?
நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Going Through Hard Times

நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4-நாள் திட்டத்தில், நாம் தனியாக இல்லை என்பதையும், நம் வலிக்கு தேவன் ஒரு நோக்கம் வைத்து இருப்பதையும், அதை அவர் தனது பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவார் என்பதையும் அறிந்து உற்சாகமடைவோம்.

More

இந்த வேதகமத் திட்டம் யூவெர்ஷனால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது.