பரிசுமாதிரி

The Gift

5 ல் 5 நாள்

அதிசயத்துடன் வழிபடுங்கள்

பல நூறு ஆண்டுகளாக, மக்கள் இயேசுவுக்காக காத்திருந்தனர். எனவே இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நீங்கள் விரும்பிய ஒன்றுக்காக காத்திருந்தால் - நீங்கள் தனியாக இல்லை. காத்திருப்பது நாம் வணங்கும் ஒரே தேவனைப் பற்றிய சக்திவாய்ந்த நினைவூட்டலாக இருக்கலாம்.

சற்று சிந்தியுங்கள், கடவுள் ஒரு நொடியில் நம்மைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவர் நமக்கு தன்னை ஒரு குழந்தையாக அனுப்புவதைத் தேர்ந்தெடுத்தார். நம்மிடையே வாழ்ந்து, நம்மிடையே கஷ்டப்பட்டு, நமக்காக இறக்கும் ஒருவராக, நாம் ஒருபோதும் சம்பாதிக்க தகுதியில்லாத சரியான பரிசாக நம்மிடையே இருக்கிறார்.

சில சமயங்களில் நாம் விடுமுறைக் காலத்தில் சில உலக பிரகாரமான செயல்களை கடவுளுக்காகச் செய்வதில் மிகவும் பரபரப்பாக இருப்போம், அத்தருணத்தில், அவர் நம்முடன் இருப்பதை மறந்துவிடுகிறோம். தவறான இதயத்துடன் சரியான விஷயங்களைச் செய்வதால் நமக்குள் ஒருவித வெறுப்பு உருவாகலாம். இயேசுவின் பரிசு நம்மைப் பற்றியது அல்ல, நம் முயற்சியைப் பற்றியதும் அல்ல, மாறாக கடவுள் மற்றும் அவருடைய கிருபையைப் பற்றியது என்பதை நாம் எளிமையாக மறந்துவிடக்கூடாது.

ஆனால், இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் நாம் அவசரப்பட வேண்டியதில்லை. கிருபையின் பரிசைப் பிரதிபலிக்கவும், நினைவில் கொள்ளவும், நாம் நிதானித்து சற்று சிந்திக்கலாம். ஆம்! நாம் ஏதோ ஒன்றுக்காக கஷ்டப்படுவதை நிறுத்தலாம், தேவையற்ற ஒன்றுக்காக கடவுளிடம் வலியுறுத்துவதை நிறுத்தலாம், தேவனிடம் செல்லும் வழியை நம் முயற்சியின் மூலம் சம்பாதிக்க நினைப்பதையும் நிறுத்தலாம் - அதற்கு பதிலாக இயேசு நமக்கு கொடுக்க வந்ததை அவர் சமூகத்திலிருந்து பெற எண்ணம் கொள்ள வேண்டும்.

சாஸ்திரிகள் தாங்கள் தேவனிடம் செல்லும் பரம வழியை தங்கள் முயற்சியினால் வென்றெடுப்பதற்காக பரிசுகளை வழங்கவில்லை. ஆசீர்வாதத்தை எதிர்பார்த்தும் பரிசுகள் வழங்கப்படவில்லை. மாறாக, தேவ பிரசன்னத்தில் நிரம்பி வழியவும், தாங்கள் கண்ட அதிசயத்தின் நீட்சியாகவும் பரிசுகளை வழங்கினர்.

நாம் அவர்களின் வழியைப் பின்பற்றுவோம். கடமையின் நிமித்தம் கீழ்ப்படிதலைச் செய்யாமல், இறுதிப் பரிசை நமக்கு அனுப்பியவர்மீது நிரம்பி வழியும் பேரன்பின் நிமித்தமாக கீழ்ப்படிவோம்.

சாஸ்திரிகள் வழங்கிய பரிசுகள் இன்று நமக்கு நம்பிக்கையின் ஊற்றுமூலமாக இருக்கின்றன, ஏனென்றால் நாம் யாரை வணங்குகிறோம் என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன. தம்முடைய குமாரனை நமது ராஜாவாகவும், நம்மை குணப்படுத்துபவராகவும், நமது இரட்சகராகவும் அனுப்பினார் நம் தேவன்.

விடுமுறை நாட்களில் அவசரப்படுவதை நிறுத்திவிட்டு, உயிர்த்தெழுந்த ராஜாவான இயேசுவின் பிறப்பை நினைவு கூறி அதிசயத்தின் வேகத்தைத் தழுவத் தொடங்குங்கள்.

ஜெபியுங்கள்: தேவனே, உமது குமாரனாகிய இயேசுவின் மூலம் எங்களுக்கு இறுதி பரிசை அனுப்பியதற்கு நன்றி. நீங்கள் எனக்காகச் செய்ததை நினைவில் கொண்டு என் இருதயத்தை மையப்படுத்தி, கிருபையின் பரிசை முழுமையாகப் பெற எனக்கு உதவுங்கள். சலசலப்பை நிறுத்திவிட்டு, நீங்கள் யார்? என்ன செய்தீர்கள்!! என்று ஆச்சரியத்துடன் வழிபடத் தொடங்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் பெயரில், ஆமென்.

பயிற்சி: இன்று சிறிது நேரம் அமைதியாக இருங்கள், கடவுள் சொல்வதைக் கேட்கவும், அவர் யார் என்பதற்காக அவரை வணங்கவும் முயற்சி செய்யுங்கள்.
நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Gift

இது ஆண்டின் மிக அற்புதமான நேரம், ஆனால் விடுமுறை நாட்கள் பொதுவாக நாம் கண்ணை மூடி திறப்பதற்குள் வேகமாக கடந்து செல்லும். இந்த கிறிஸ்மஸ் காலங்களில், நாம் வேதத்தை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வின் அதிசயங்களை மறுபடியும் மீட்டெடுக்க மற்றும் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம். பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் தொடரான ​ "பரிசு" உடன் வரும் இந்த 5-நாள் பைபிள் திட்டத்தில், ஞானிகள் இயேசுவுக்குக் கொடுத்த மூன்று பரிசுகள் எவ்வாறு நம்மை ஆச்சரியப்படுத்துவதற்கும், இயேசு கிறிஸ்துவை வழிபடுவதற்கும் வழிவகுக்கும் என்பதைக் கண்டுபிடிக்க இருக்கிறோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.