பரிசுமாதிரி

The Gift

5 ல் 4 நாள்

இயேசு செய்த காரியங்களுக்காக - நம் இரட்சகரை வணங்குங்கள்

உங்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த பரிசு எது?

நீங்கள் விரும்பும் ஒருவர் உங்களை ஆச்சரியப்படுத்திய, ஒரு சிந்தனைமிக்க, சரியான நேரத்தில் கிடைத்த பரிசாக இருக்கலாம். ஒருவேளை, நீங்கள் தகுதியுடையவர் என்று நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும் ஒரு பரிசாக இருக்கலாம். ஒருவேளை, இது நீங்கள் விரும்பாத ஒன்றாக இருக்கலாம்.

நாம் ஒருபோதும் அதற்குத் தகுதியாக இருந்திருக்கவோ அல்லது சம்பாதிக்கவோ முடியாது என்றாலும், இயேசு நமக்காக ஒரு பெரிய தியாகத்தை செய்தார். ஆம்! நாம் இன்னும் பாவிகளாக இருந்தபோதே - நம்முடைய தவறுகளை அறிந்திருந்தும், நாம் அவரை மீண்டும் நேசிப்பதற்கு முன்பு - இயேசு நமக்காக மரிப்பதைத் தேர்ந்தெடுத்தார், இதனால் நாம் பரம தேவனுடன் ஒரு ஐக்கியமான உறவைத் தேர்வுசெய்ய முடியும் என்று அவர் எண்ணினார்.

இந்த உண்மை மட்டுமே நம்மை அதிசயத்துடனும் நன்றியுடனும் நிரப்ப வேண்டும் - மேலும் சாஸ்திரிகளைப் போலவே, அது நம்மை வழிபடச் செய்ய வேண்டும்.

சாஸ்திரிகள் இயேசுவை வணங்குகையில், அவர்கள் ஒரு இறுதி பரிசைக் கொடுத்தனர்: அதுதான் வெள்ளைப்போளம்.

வெள்ளைப்போளம் பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டிருந்தது, ஆனால் பெரும்பாலும் துன்பம் மற்றும் மரணத்துடன் தொடர்புடையது. பழைய ஏற்பாட்டில் ஆலயம் மற்றும் ஆசாரியர்கள் அல்லது ராஜாக்களை தயார் செய்ய வெள்ளைப்போளம் ஒரு அபிஷேக எண்ணெயாக பயன்படுத்தப்பட்டது. இது புதிய ஏற்பாட்டில் இறந்த உடலை கிருமி நீக்கம் செய்ய அல்லது சிதைவிலிருந்து பாதுகாக்கும் எண்ணெயாகவும், சிலுவையில் அறையப்படும் மக்களுக்கு துன்பத்தை குறைக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.

மற்ற பரிசுகளைப் போலவே, இயேசு எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை வெள்ளைப்போளம் முன்னறிவித்தது:

அபிஷேகம் செய்யப்பட்டவராக இருப்பார்: சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், நம்மைக் குணப்படுத்தவும், நம்மை விடுவிப்பதற்காகவும் இயேசு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார் (லூக்கா 4:16-19).
பாடுபடும் ஊழியக்காரனாக இருப்பார்: இயேசு சிலுவையில் தம்முடைய வேதனையைத் தணிக்க வெள்ளைப்போளத்தைக் குடிக்கவில்லை (மாற்கு 15:23). அவர் நம்முடைய பாவங்களின் முழு எடையையும் ஏற்றுக்கொண்டார், மேலும் நமக்காக வலி மற்றும் துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். அவருடைய காலம் முழுவதும், நாம் இயேசுவின் ஊழியம் செய்யும் தன்மை கொண்ட தாழ்மையான இருதயத்தைக் காணமுடியும்.
இறுதியாக உயிர் தியாகம் செய்வார்: நமக்காக இயேசு செய்த இறுதி தியாகம் - அவரது முழு வாழ்க்கை. அவர் ஒருபோதும் செய்யாத பாவங்களுக்காக சிலுவையில் துன்பப்பட்டார் மற்றும் நம் பாவங்களுக்காக தன்னுயிரை செலுத்தி தீர்த்தார்.

இயேசு பூமியில் அவருடைய ஊழியத்தின் போது செய்த செயல்கள் மற்றும் நிறைவேற்றிய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, ​​உங்கள் மனது தானாக அவரைத் தொழுவதற்காக உங்களை வழிநடத்தும். நீங்கள் அவரை வழிபடும் வழிபாடு பலவாறாக உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்கலாம். ஒருவேளை, அது இயேசுவை அவர் யார் என்பதற்காக அவரைப் புகழ்வதன் மூலம் அவருக்கு நன்றியைக் காட்டுவதாக இருக்கலாம். ஒருவேளை, அது கிறிஸ்துவுக்காக துன்பம் அனுபவிப்பதாக இருக்கலாம். ஒருவேளை, இது மற்றவர்களுக்கு கிறிஸ்துவைப் போன்ற கிருபையையும், அன்பையும் நீங்கள் நீட்டிப்பதாக இருக்கலாம். இயேசு கிறிஸ்துவை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை சாஸ்திரிகள் நமக்கு ஒரு முன் மாதிரியாக காட்டினார்கள். அது தற்காலத்திற்கு பொருந்துவதாகவே இருக்கிறது.

பரபரப்பாக இருக்கும் இந்த விடுமுறை காலங்களில் சாஸ்திரிகளைப் போலவே, இயேசு நமக்குக் கொடுத்த பரிசை நினைத்துப் அவரை துதிப்போம். நாம் மிகவும் பரபரப்பாகவோ அல்லது கவனச்சிதறலாகவோ இல்லாமல், நாம் உண்மையில் கொண்டாடுவது நம்மிடமுள்ள மிக சிறந்த பரிசு என்பதை நினைவில் கொள்ள அழைக்கப்படுகிறோம்.

ஜெபியுங்கள்: கர்த்தாவே, எனக்காக பாடுபட்டதற்காகவும், எல்லாவற்றையும்விட சிறந்த பரிசை எனக்கு அளித்ததற்காகவும் உமக்கு நன்றி - தங்களின் உயிர் தியாகத்தின் மூலம் எனக்கு ஒரு அற்புதமான பரிசை கொடுத்தீர்கள். என் வாழ்நாளில், உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. தயவுகூர்ந்து, உம்முடைய கிருபையையும், அன்பையும் மறுபடியும் எனக்கு ஞாபகப்படுத்தும் மற்றும் என்றென்றும் என் இருதயம் உண்மை போன்று தியாக உணர்வோடும், ஊழியம் செய்யும் மனதோடும் இருக்க எனக்கு உதவி செய்தருளும். இயேசுவின் பெயரில், ஆமென்.

பயிற்சி: இன்று ஒருவருக்கு இரக்கம், அன்பு அல்லது கருணையை நீங்கள் நீடிப்பதற்கு கூடுதல் நேரம் அல்லது சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Gift

இது ஆண்டின் மிக அற்புதமான நேரம், ஆனால் விடுமுறை நாட்கள் பொதுவாக நாம் கண்ணை மூடி திறப்பதற்குள் வேகமாக கடந்து செல்லும். இந்த கிறிஸ்மஸ் காலங்களில், நாம் வேதத்தை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வின் அதிசயங்களை மறுபடியும் மீட்டெடுக்க மற்றும் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம். பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் தொடரான ​ "பரிசு" உடன் வரும் இந்த 5-நாள் பைபிள் திட்டத்தில், ஞானிகள் இயேசுவுக்குக் கொடுத்த மூன்று பரிசுகள் எவ்வாறு நம்மை ஆச்சரியப்படுத்துவதற்கும், இயேசு கிறிஸ்துவை வழிபடுவதற்கும் வழிவகுக்கும் என்பதைக் கண்டுபிடிக்க இருக்கிறோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.