பரிசுமாதிரி

The Gift

5 ல் 3 நாள்

அவர் செய்கிற எல்லாவற்றிற்காகவும் இயேசுவை துதியுங்கள் - நமது தேவன், பிரதான ஆசாரியன் மற்றும் குணப்படுத்துபவர்

சாஸ்திரிகள் இயேசுவுக்குக் கொண்டுவந்த அடுத்த பரிசு தூபவர்க்கம். பிசின் (காய்ந்த சாறு).

ஆம், தூபவர்க்கம் (தூபம்) என்பது மரங்களிலிருந்து வருகிற பிசின். குறிப்பாக அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையிலும் அதைச் சுற்றியும் வளரும் மரங்களிடம் இருந்து எடுக்கப்படுபவை.

முதலில், ஒரு சிறப்பு கத்தி போஸ்வெல்லியா சாக்ரா மரத்தில் ஒரு காயத்தைத் துளைக்கிறது, அங்கு சாறு வெளியேறத் தொடங்குகிறது. இந்த முதல் சாறு சேகரிக்கப்படுவதில்லை, இது அசுத்தங்களை சுத்தப்படுத்துகிறது.

பின்னர், சுத்திகரிக்கப்பட்ட திரவத்தை வெளியிட அதிக வெட்டுக்கள் செய்யப்படுகின்றன. சாறு காய்ந்தவுடன், பிசின் உருவாக்குகிறது. இந்த பிசினே மரத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு, பின்னர் துண்டுகளாக நசுக்கி, தூபவர்க்கமாக விற்கப்படுகிறது.

ஏசாயா 60:6-ல் முன்னறிவிக்கப்பட்டபடி, இயேசுவுக்கு வழங்கப்பட்ட தூபவர்க்கம் அரேபிய பாலைவனம் முழுவதும் (ஒட்டகத்தின் மூலம்) பயணித்திருக்கும். அந்த நேரத்தில், அதன் எடை தங்கத்தை விட அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இந்த பரிசின் நோக்கம் மற்றும் செயல்பாட்டில் தான் அதன் மதிப்பை நாம் உண்மையில் பார்க்க ஆரம்பிக்க முடியும். தூபவர்க்கம் பெரும்பாலும் ஒரு வகையான தூபமாக எரிக்கப்பட்டது. உண்மையில், அந்த வார்த்தையின் வரலாற்று அர்த்தமே 'தூய' அல்லது 'உயர்தர தூபம்' என்றாக இருக்கும்பொழுது அதன் சிறப்பை நம்மால் உணர முடிகிறது.

பழைய ஏற்பாட்டின் வரலாறு முழுவதும் பார்க்கையில், இந்த தூய தூபவர்க்கமானது ஆலயங்களில் ஆசாரியர்ளால் வழிபாட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டு பின்னர் பாவங்களை மறைப்பதற்காக கடவுளுக்கு செய்யப்பட்ட பலியாகும். இது ஒரு குணப்படுத்தும் மருந்தாக பண்டைய உலகம் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

அண்மைய அறிவியல் ஆராய்ச்சிகள், தூபவர்க்கத்தில் இன்னும் குணப்படுத்தும் சக்தி உள்ளது, குறிப்பாக சில புற்றுநோய்களுக்கு எதிராக என்று கண்டறியப்பட்டுள்ளது. பிபிசிக்கு நோயெதிர்ப்பு நிபுணர் மஹ்மூத் சுஹைல் பேட்டியளித்தபோது​​ இவ்வாறு விளக்கினார், “செல் கருவில் உள்ள டிஎன்ஏ (DNA) குறியீடு சிதைவதால் புற்றுநோய் தொடங்குகிறது. தூபவர்க்கத்திற்கு அதை மீட்டமைக்கும் செயல்பாடு இருப்பதாகத் தெரிகிறது. சரியான டிஎன்ஏ(DNA) குறியீடு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இது உடம்பில் உள்ள செல்களுக்குச் சொல்லும்.

சாஸ்திரிகள் ஏன் குழந்தை இயேசுவுக்கு தூபவர்க்கத்தைப் பரிசாகக் கொண்டுவந்தார்கள்? அவர்கள் அறிந்தோ அறியாமலோ, ஏசாயா 53:5 இல் முன்னறிவிக்கப்பட்ட இயேசுவின் கதையைச் சொல்லக்கூடிய ஒரே பொருளை அவர்கள் பரிசாகக் கொண்டு வந்திருக்கலாம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5)

இயேசு இதைச் செய்தார்! இன்னும் இதை செய்து கொண்டு இருக்கிறார். போஸ்வெல்லியா சாக்ரா மரத்தின் ஒரு பகுதியை நசுக்கியது போல, இயேசு நசுக்கப்பட்டார். அதனால், அவர் நமது குணப்படுத்தும் மருந்தாக மாறினார் - நமது பாவத்திற்கு இறுதியான மற்றும் சரியான தியாகமாகத் தம் உயிரைக் கொடுத்த பிரதான ஆசாரியன் ஆனார், இன்னும் நம் பாவத்திற்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்யும் செயல்பாடுகளை இவ்வுலகில் மீட்டமைத்தார். அவரே நமது சமாதான காரணராகிய தேவன்.

ஜெபியுங்கள்: இயேசுவே, தேவனுடன் இருப்பதற்காக இவ்வுலகத்தில் எங்களை சரியானவர்களாக மாற்றி மீட்டமைத்ததற்காக நன்றி. எங்களுக்காக தொடர்ந்து பரிந்து பேசுவதற்கும், நீங்கள் எங்களை குணப்படுத்துவதற்கும், எங்களை மீட்டெடுப்பதற்கும், எங்களுக்கு அமைதியைக் கொண்டுவருவதற்கும், நீங்கள் எங்களுடன் இருப்பதை உணர்த்துவதற்கும் நன்றி. ஆமென்

சிந்தனை: அவர் செய்ததற்கும் இன்றும் செய்கிறதற்கும் அவரை எப்படி வணங்குவீர்கள்? அவரை உங்கள் ஆசாரியராகவும் குணப்படுத்துபவராகவும் எப்படி நம்புவது
நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Gift

இது ஆண்டின் மிக அற்புதமான நேரம், ஆனால் விடுமுறை நாட்கள் பொதுவாக நாம் கண்ணை மூடி திறப்பதற்குள் வேகமாக கடந்து செல்லும். இந்த கிறிஸ்மஸ் காலங்களில், நாம் வேதத்தை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வின் அதிசயங்களை மறுபடியும் மீட்டெடுக்க மற்றும் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம். பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் தொடரான ​ "பரிசு" உடன் வரும் இந்த 5-நாள் பைபிள் திட்டத்தில், ஞானிகள் இயேசுவுக்குக் கொடுத்த மூன்று பரிசுகள் எவ்வாறு நம்மை ஆச்சரியப்படுத்துவதற்கும், இயேசு கிறிஸ்துவை வழிபடுவதற்கும் வழிவகுக்கும் என்பதைக் கண்டுபிடிக்க இருக்கிறோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.