பரிசுமாதிரி
இயேசு கிறிஸ்து நமது ராஜாவாக இருப்பதினால் அவரை வணங்குங்கள்
நீங்கள் விரும்பும் ஒருவருக்கு சரியான பரிசைக் கண்டுபிடிக்க நீங்கள் எப்போதாவது சிரமப்பட்டிருக்கிறீர்களா? அது அவர்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், அதனால் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு அர்த்தமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்த நினைக்கிறீர்கள்
சாஸ்திரிகள் இயேசுவுக்கு பரிசுகளை வழங்கிய நிகழ்வு பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றினாலும், அது உண்மையில் இயேசு யார் என்பதை அழகாக சித்தரிக்கிறது. அவர்கள் அவருக்குப் பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடுவது எளிது, ஆனால் இந்த கிறிஸ்துமஸில் நம் இதயங்களை மையப்படுத்த உதவும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது இந்தப் பரிசுகள்.
அந்த பரிசுகள் ஒன்றிணைந்து இயேசு கிறிஸ்து யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. ஒரே வரியில் கூற வேண்டுமென்றால், "அவர் சர்வவல்லமையுள்ள கடவுள், ஆனால் நம்மைக் காப்பாற்றத் துன்பப்படத் தயாராக இருக்கிறார்".
சாஸ்திரிகள் இயேசுவுக்கு தங்கத்தை பரிசாகக் கொண்டு வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்று, தங்கம் என்பது ஒரு ராஜாவுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு. ஆனால், ஒரு குழந்தைக்கு தங்கம் கொடுக்க வேண்டும் என்ற சாஸ்திரிகளின் விசுவாசத்தைக் குறித்து சிந்தியுங்கள். தேவன் ஒரு ராஜாவை அனுப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். சொல்லப்போனால், இயேசுவின் காலத்திலிருந்த மக்கள் தங்கள் நாட்டை வரப்போகின்ற ராஜா ஆள வேண்டும் என்று விரும்பினார்களே தவிர—தங்கள் இதயத்தை ஆள வேண்டும் என்று அல்ல. ஒரு ராஜாவுக்கு பதிலாக, கடவுள் ஒரு குழந்தையை அனுப்பினார், இயேசு வளர்ந்து, எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார், நம்முடைய பாவங்களுக்காக நம் இடத்தில் மரித்தும் போகிறார்.
எனவே ஒரு குழந்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும்கூட, சாஸ்திரிகள் தங்கத்தை பரிசாக அளித்தனர். இதன் மூலம் இயேசு கிறிஸ்து தான் நமது ராஜா; எல்லா புகழ், தியாகம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர் என்பதைக் காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டிலும் தங்கம் விலைமதிப்பில்லாத பரிசாக இருந்தது. 1 ராஜாக்களின் புத்தகத்தில், சாலொமோன் கடவுளுக்கு ஆலயம் கட்டும்போது தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை காணமுடிகிறது. தேவனின் பிரசன்னத்திற்கான இடமாக இருந்ததினால், எருசலேமின் ஆலயத்தை கட்டுவதற்கு அவருக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆலயத்தின் உள்ளே வெவ்வேறு பகுதிகள் இருந்தன, மேலும் உள் பகுதி மகா பரிசுத்த ஸ்தலமாக அறியப்பட்டது. அந்த இடத்தில், ஆசாரியன் தேவனின் பிரசன்னத்தை எதிர்கொண்டு மக்கள் சார்பாக பலி இடலாம். அந்தப் பரிசுத்த ஸ்தலத்தின் சுவர்களும் பலிபீடங்களும் தங்கத்தால் செய்யப்பட்டன.
ஆகவே, சாஸ்திரிகள் இயேசுவுக்குப் பொன்னைக் கொடுத்தபோது, இயேசு சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்குப் பிறகு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்புவதன் மூலம் நமக்காக இறுதியான தியாகத்தைச் செய்வார் என்று ஒரு மாதிரியாக முன் அறிவிக்கப்பட்டது. இந்த தியாகத்தினால் இயேசு கிறிஸ்துவின் உடனான உறவை நம்மால் தேர்ந்தெடுக்க இயலும்.
இப்போதும் சாஸ்திரிகள் இயேசுவுக்கு உலகப்பிரகாரமான பொன்னைக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ நமக்கு அதைவிட மிகவும் விலையுயர்ந்த பரிசைக் கொடுத்தார். சாஸ்திரிகள் தேவனிடம் பரலோகத்திற்கு செல்லும் வழியை விலை கொடுத்து வாங்கவில்லை. எந்த மனிதனும், எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும் சரி, அதை வாங்க முடியாது. மாறாக, நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட உறவுக்கு வழி வகுக்க நாம் செலுத்த முடியாத விலையை இயேசு தாமே மனப்பூர்வமாக செலுத்தினார். சாஸ்திரிகள் இயேசுவுக்குப் பொன்னைக் கொடுத்தார்கள் - ஆனால் இயேசுவோ நமக்கு தேவனோடு ஒரு தொடர்பைக் கொடுத்தார்.
சாஸ்திரிகளால் செய்ய முடிந்தது, இயேசுவுக்கு ஒரு ஆடம்பரமான வழிபாட்டுச் செயலாக தங்களிடம் உள்ளதைக் கொடுப்பதுதான். அவர்களின் தியாகத்தைப் பின்பற்றுவோம், இயேசுவே நம் ராஜா என்பதை நினைவில் கொள்வோம். அடிக்கடி அவசரத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு பருவத்தில், கடவுள் நம்முடன் இருக்க இயேசுவை அனுப்பினது எவ்வளவு புனிதமானது மற்றும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்வோம்.
ஜெபியுங்கள்: கடவுளே, இயேசுவை எங்கள் இறுதி தியாகமாக அனுப்பியதற்கு நன்றி. ராஜாக்களின் ராஜாவாகவும், பிரபுக்களின் ஆண்டவராகவும் இருப்பதற்கு நன்றி. இன்று உமது மகிமையை எனக்கு நினைவூட்டுவீர்களாக. இயேசுவின் நாமத்தில், ஆமென்
சிந்தனை: நீங்கள் இன்று ஜெபிக்கும்போது, இயேசு ராஜாவை நினைவில் கொள்ள, முழங்கால் படியிட ஒரு இடத்தைக் கண்டறியவும்

இந்த திட்டத்தைப் பற்றி
இது ஆண்டின் மிக அற்புதமான நேரம், ஆனால் விடுமுறை நாட்கள் பொதுவாக நாம் கண்ணை மூடி திறப்பதற்குள் வேகமாக கடந்து செல்லும். இந்த கிறிஸ்மஸ் காலங்களில், நாம் வேதத்தை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வின் அதிசயங்களை மறுபடியும் மீட்டெடுக்க மற்றும் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம். பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் தொடரான "பரிசு" உடன் வரும் இந்த 5-நாள் பைபிள் திட்டத்தில், ஞானிகள் இயேசுவுக்குக் கொடுத்த மூன்று பரிசுகள் எவ்வாறு நம்மை ஆச்சரியப்படுத்துவதற்கும், இயேசு கிறிஸ்துவை வழிபடுவதற்கும் வழிவகுக்கும் என்பதைக் கண்டுபிடிக்க இருக்கிறோம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.