ஏன் ஈஸ்டர்?மாதிரி
நாம் என்ன செய்ய வேண்டும்?
புதிய ஏற்பாடு, தேவன் அளிக்கும் பரிசை பெற்றுக்கொள்ள நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்கிறது. இது விசுவாசத்தின் செயல். யோவான் இப்படியாக எழுதுகிறார், 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்' (யோவான் 3:16).
இயேசுவை பற்றி நாம் அறிந்திருப்பது மூலம், விசுவாசிப்பது நம்பிக்கையின் செயலை உள்ளடக்கியது. அது ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையல்ல. ஒரு நபரின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை. அது ஒரு வழியில், ஒரு மணமகன் அல்லது ஒரு மணமகள் தங்களது திருமண நாளன்று கூறும், 'நான் செய்வேன்' என்பதற்கு ஒப்பானது.
இந்த விசுவாச படிமுறை ஒவ்வொரு நபருக்கும் பெரிதாக மாறும், ஆனால் நான் இப்பொழுது ஒரு வழியை விவரிக்கிறேன் அது இப்பொழுதே ஒரு படி எடுத்து வைக்க உதவும். அது மூன்று எளிமையான வார்த்தைகளில் சுருக்குவிடலாம்:
'மன்னிப்பு'
நீங்கள் தவறு செய்த எல்லாவற்றையும் மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டு, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தவறு என்று அறிந்த எல்லாவற்றையும் விட்டு திரும்ப வேண்டும். இதையே வேதாகமம் 'மனந்திரும்புதல்' என்று கூறுகிறது.
'நன்றி'
இயேசு எனக்காகக சிலுவையில் பலியானார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அவர் உங்களுக்காக மரித்து, இலவசமாக அவர் நமக்களித்த இரக்கம், சுதந்திரம் மற்றும் அவருடைய ஆவிக்காக நன்றி கூற வேண்டும்.
'தயவு'
தேவன் ஒருக்காலும் அவரது வழியை நாம் வாழக்கையில் திணிப்பதில்லை. நீங்கள் அவரளிக்கும் பரிசை ஏற்றுக்கொள்ள வேண்டும், வரவேண்டி அழைக்கவேண்டும் மற்றும் அவரது ஆவி நம்மில் வாழ உடன்பட வேண்டும்.
நீங்கள் தேவனோடு உறவாட விரும்பி, இந்த மூன்று காரியங்களை சொல்ல தயாரானால், இதோ நீங்கள் அந்த உறவை துவங்குவதற்கு ஜெபிக்கத்தக்க ஒரு மிகச் சிறிய ஜெபம்:
தேவனாகிய இயேசு கிரிசதுவே,
என வாழ்க்கையில் செய்த தவறான காரியங்களுக்காக மனம் வருந்துகிறேன் (உங்கள் சிந்தையில் உதிக்கும் ஒரு சில தருணங்களுக்காக மன்னிப்பு கேட்கவும்). தயவு செய்து என்னை மன்னியும். இப்பொழுது நான் தவறாக கருதும் எல்லாவற்றிலிருந்து மனம் திரும்புகிறேன்.
நான் மன்னிப்படைந்து விடுதலை பெற எனக்காக சிலுவையில் பலியானதற்காக நன்றி.
எனக்களித்த மன்னிப்பிற்காக மற்றும் உம்முடைய பரிசான ஆவிக்காகக் உமக்கு நன்றி. அந்த பரிசை நான் இப்பொழுது பெற்றுக்கொள்கிறேன்.
நித்திய காலமும் என்னுடன் இருக்க உம்முடைய பரிசுத்த ஆவியானவர் வழியாக தயவு செய்து என் வாழ்க்கையினுள் வாரும்.
இயேசுவே உமக்கு நன்றி. ஆமேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார்.
More