ஏன் ஈஸ்டர்?மாதிரி

Why Easter?

5 ல் 4 நாள்

எதற்காக விடுதலை?  

இயேசு சரீரப்பிரகாரமாக இவ்வுலகத்தில் இல்லை, ஆயினும் அவர் நம்மை தனியே விட்டுவிடவில்லை. அவர் தமது பரிசுத்த ஆவியானவரை நம்மோடுகூட இருக்கும்படியாய் அனுப்பியுள்ளார். அவருடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணும்படியாக வரும்போது, அவர் நமக்கு ஒரு புது விடுதலையைக் கொடுக்கிறார்.

தேவனை அறிந்துகொள்ளும்படியாக விடுதலை

நாம் தவறாக செய்யும் காரியங்கள் நமக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பிரிவினையை உண்டாக்குகிறது: ‘உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது’ (ஏசாயா 59:2). இயேசு சிலுவையில் மரித்தபோது, அவர் நமக்கும் தேவனுக்குமிடையேயான பிரிவினையை அகற்றினார். இதன் விளைவாக, நம்முடைய சிருஷ்டிகரோடு நாம் உறவு வைத்துக்கொள்வதை சாத்தியமாக்கியிருக்கிறார். நாம் அவருடைய குமாரர் மற்றும் குமாரத்திகளாய் ஆகியிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இந்த உறவை நமக்கு உறுதிசெய்கிறார், மேலும் அவர் தேவனைக் குறித்து இன்னும் நன்றாக அறிந்துகொள்ள உதவிசெய்கிறார். அவர் நமக்கு ஜெபிக்கவும் தேவனுடைய வார்த்தையை (வேதாகமம்) புரிந்துகொள்ளவும் உதவிசெய்கிறார்.

அன்புகூரும்படியாக விடுதலை

‘அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்’ (1 யோவான் 4:19). சிலுவையை நாம் நோக்கிப் பார்க்கும்போது, தேவன் நம்மேல் வைத்த அன்பை நாம் புரிந்து கொள்கிறோம். தேவஆவியானவர் நமக்குள் வந்து வாசம் பண்ணும்போது, நாம் அந்த அன்பை அனுபவிக்கிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது, தேவன்மீதும், மற்றவர்கள் மீதும் நமக்கு ஒரு புது அன்பு உண்டாகிறது. நம்மை மட்டுமே மையமாகக்கொண்ட ஒரு வாழ்க்கை வாழாமல் இயேசுவில் அன்புகூர்ந்து அவருக்கு சேவைசெய்வது மற்றும் மற்றவர்களில் அன்புகூர்ந்து அவர்களுக்கு சேவைசெய்வதை மையமாகக்கொண்ட ஒரு வாழ்க்கையான அன்பின் வாழ்க்கை வாழும்படியாய் நாம் விடுதலையாயிருக்கிறோம்.

மாறும்படியாக விடுதலை

மக்கள் சிலசமயங்களில் சொல்கிறார்கள், ‘நீங்கள் நீங்கள்தான். உங்களை மாற்றமுடியாது’ என்பதாக. நற்செய்தி என்னவென்றால் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் நாம் மாறமுடியும் என்பதே. இருதயத்தின் ஆழத்தில் நாம் எப்பொழுதும் வாழவேண்டுமென விரும்பிய வாழ்க்கையை வாழும்படியாய் பரிசுத்த ஆவியானவர் நமக்கு விடுதலை கொடுக்கிறார். புனித பவுல் ‘ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிப்பட்டவைகளே’ (கலா 5:22-23) என்று சொல்கிறார். தேவ ஆவியானவரை நமக்குள் வந்து வாசம்செய்யும்படியாக நாம் வேண்டிக்கொள்ளும்போது, இந்த விசேஷித்த குணாதிசயங்கள் நம்முடைய வாழ்க்கையில் வளர ஆரம்பிக்கின்றன.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Why Easter?

ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஆல்பா மற்றும் நிக்கி கும்பெல் அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://alpha.org/ க்கு செல்லவும்