ஏன் ஈஸ்டர்?மாதிரி
எதிலிருந்து விடுதலை?
இயேசு, நம்மை விடுவிக்கும்படிக்கு, சிலுவையில் தம்முடைய இரத்தத்தை மீட்பு கிரயமாகச் செலுத்தினார்.
குற்ற உணர்விலிருந்து விடுதலை
நாம் குற்றத்தை உணர்கிறோமோ இல்லையோ, நம்முடைய சிந்தை, பேச்சு மற்றும் செயல்களில் அவருடைய கட்டளைகளை மீறும் அநேகநேரங்களில் நாம் எல்லோரும் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாயிருக்கிறோம். ஒருவன் குற்றம் செய்யும்போது அபராதம் செலுத்தவேண்டியுள்ளது, அதேபோல் தேவனுடைய நியமங்களை மீறுவதற்கும் தண்டனை உண்டு. ‘பாவத்தின் பலன் மரணம்’ (ரோமர் 6:23).
நாம் செய்யும் தவறான காரியங்களுக்கான பலன் ஆவிக்குரிய மரணமாகும்—தேவனுடைய சமூகத்திலிருந்து நிரந்தரமாகத் விலக்கப்படுவதே அது. அந்தத் தண்டனையை அனுபவிக்க நாம் யாவரும் பாத்திரவான்களாயிருக்கிறோம். நாம் முற்றிலுமாக மன்னிக்கப்படும் படியாகவும், நம்முடைய பாவம் நீக்கப்படும் படியாகவும், இயேசு, சிலுவையில் நம்முடைய இடத்தில் தண்டனையை ஏற்றார்.
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
இயேசு ‘பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான்’ (யோவான் 8:34) என்று சொல்கிறார். அந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும்படி இயேசு மரித்தார். சிலுவையில், இந்த அடிமைத்தனத்தின் அதிகாரம் முறியடிக்கப்பட்டது. நாம் அவ்வப்போது இன்னும் தடுமாறினாலும், இயேசு நம்மை விடுவிக்கும்போது இந்த அடிமைத்தனத்தின் அதிகாரம் முறியடிக்கப்படுகிறது.
பயத்திலிருந்து விடுதலை
‘மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும்’ இயேசு வந்தார் (எபி 2:14-15). மரணத்தைக் குறித்து நாம் இனி ஒருபோதும் பயப்படத் தேவையில்லை.
இயேசுவினால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு மரணம் என்பது முடிவல்ல. மாறாக இது பாவத்தின் பிரசன்னம்கூட நம்மை அணுகாத, பரலோகத்திற்குச் செல்லும் வழிவாசல். இயேசு மரணபயத்திலிருந்து நம்மை விடுவித்தபோது, மற்ற எல்லா பயங்களிலிருந்தும் நம்மை விடுவித்தார்.
இந்த திட்டத்தைப் பற்றி
ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார்.
More