ஏன் ஈஸ்டர்?மாதிரி
அவர் எதற்காக வந்தார்? அவர் ஏன் இறக்க வேண்டும்?
இயேசு ஒருவர் மட்டுமேதான் தன் பிறப்பைத் தேர்ந்தெடுத்தவர், மற்றும் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த சிலரில் ஒருவர். அவர் தாம் இவ்வுலகில் தோன்றியது நமக்காக உயிர் துறக்கவே என்றார். 'அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்'(மாற்கு 10:45).
இயேசு 'நமக்காக' மரித்தார் என்றார். 'நமக்கு' என்றால் 'நமக்குப் பதிலாக' என்று அர்த்தம். மரித்தவர். நம் மேல் இருந்த அன்பினால் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் அபராதம் செலுத்த வேண்டாமென்று அவர் இப்படி செய்தார். குருசின் மேல் கிறிஸ்து 'இவைகள் அனைத்தையும் நான் என்மேல் ஏற்றுக்கொண்டேன்' என்பதை.திறம்படக் கூறினார். உங்களுக்காகவும் எனக்காகவும் இதைச் செய்தார். நீங்களோ நானோ உலகிலேயே தனிநபராக இருந்திருந்தாலும் இயேசு இதை செய்திருப்பார். புனித பவுல் 'என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்' என்று எழுதினார்.(கலாத்தியர் 2:20). நம்மீதுள்ள அன்பின் காரணமாய் தம் ஜீவனை மீட்கும்தொகையாக கொடுத்தார்
மீட்கும்தொகை என்ற சொல் அடிமைகளின் சந்தையிலிருந்து வந்தது. இரக்கமுள்ள ஒருவன் அடிமையை வாங்கி விடுவிக்கலாம் - அதற்குரிய மீட்கும்தொகையை முதலில் கட்ட வேண்டும். நம்மை விடுவிக்க, இயேசு சிலுவையின்மீது தன் இரத்தத்தை சிந்தி மீட்கும்தொகையைக் கட்டினார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார்.
More