அன்புள்ள அடிமைத்தனமே...மாதிரி
நாள்:4: அடி ஆழம்
நம் அடிமைத்தனத்தின் சிற்றின்பத்திலிருந்து அதன் பிடி அகற்றப்படும்போது, அது நல்ல நேரமாக இருப்பதை நிறுத்திவிட்டு, நாம் சமாளிக்கும் மற்றும் உயிர்வாழ போராடும் ஒரு தருணமாக மாற தொடங்கும் போது, நாம் நமது வாழ்கையில் அடி ஆழத்தில் இருப்பது போல் உணருவோம். விரக்தியும் நம்பிக்கையின்மையும் நம்மைச் சூழ்ந்து, நம்மை நெருக்கும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அடிப்பகுதி வேறுபட்டது. ஆனால் அதிலிருந்து மீண்டு வர, நம்மிடம் கட்டுப்பாடு இல்லை என்று சரணடைய வேண்டும். நாம் செய்துகொண்டிருக்கும் அதே தேர்வுகளைச் செய்வதன் மூலம் நாம் சிறப்பாக வரப் போவதில்லை என்றும் நமது தேவனிடம் ஒற்றுக் கொள்ளவேண்டும். கீழே இருந்து மேலே ஏற ஒரே வழி மேலே பார்க்கத் தொடங்குவதுதான்.
தேவன் நம்மை கீழே அதாவது நமது ஒன்றுமில்லாமையில் சந்திப்பதாக வாக்களிக்கிறார். நம்மால் முடியாத காரியமாகத் தோன்றும்போது, போதைப் புதைகுழியிலிருந்து நம்மால் வெளிவரவே முடியாது என்று தோன்றும்போது, அவர் அங்கே இருக்கிறான். மீட்பு என்பது எளிதான வழி அல்ல; ஆனால் சிறையிலோ, சீர்திருத்த நிறுவனங்களிலோ அல்லது மரணத்திலோ நாம் போய் சேராதிருக்க ஒரே வழி இதுதான். எங்களிடம் சுதந்திரம் உள்ளது - தேவன் அவரைத் தேர்ந்தெடுக்கும்படி நம்மை ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டார். ஆனால் நாம் அப்படிச் செய்தால், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், ஒருபோதும் கைவிடமாட்டார் என்று உறுதியளிக்கிறார்.
அடி ஆழத்தில் இருப்பதால், நம்மால் சுவாசிக்க கூட முடியாமல் போயிருக்கலாம். அதன் வேதனையை ஒருவேளை இன்றும் உணரலாம். ஆனால் தேவனின் உதவியை நாம் கேட்டால், நமது புதிய வாழ்க்கையை மீட்டெடுக்கும் அடித்தளமாக நமது நிலை மாறும். நமது முடிவு நமது புதிய தொடக்கமாக மாறும் இடமாக அடி ஆழம் இருக்க முடியும். தேவன் நம்மிடமிருந்து: எரிந்துபோன நம் வாழ்க்கையின் சாம்பலை வாங்கி, அவர் நமக்கு அழகு கிரீடம் தருவார். துக்கம் மற்றும் விரக்திக்கு பதிலாக, அவர் நமக்கு மகிழ்ச்சியையும் புகழையும் தருகிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
"அன்புள்ள அடிமைத்தனம்..." என்பது 5 நாள் வாசிப்புத் திட்டமாகும், இது அடிமைத்தனத்தின் வேதாகம நிலைப்பாட்டினை நமக்கு எடுத்துரைக்கிறது. இது நமது போராட்டங்களைக் குறித்து மிகவும் நுண்ணறிவு மற்றும் சக்தி வாய்ந்த வார்த்தைகளை வழங்குகிறது, இந்த திட்டம் உங்களுக்கு ஆறுதல் வழங்கி நீங்கள் இரட்சிக்கப்பட உதவ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்!
More