அன்புள்ள அடிமைத்தனமே...மாதிரி

Dear Addiction...

5 ல் 2 நாள்

நாள் 2: அருமையான நாட்கள்

நமக்கு சில அருமையான நாட்கள் இருந்தது உண்டு, இல்லையா?

அடிமையாக இருந்து மீண்டு வரும் நம்மில் பெரும்பாலோரின் வாழ்க்கையின் சில இனிமையான அடிமைத்தனத்தின் நினைவுகள் இருக்கும். வாழ்க்கையின் எந்தப் பருவத்தைப் பற்றியும் இதைச் சொல்லலாம் - நிச்சயமாக நாம் நினைவுபடுத்தும் எந்தக் காலகட்டத்திலும் சில நல்ல நினைவுகள் இருக்கும்.

ஆனால் அந்த நினைவுகள், அந்த நல்ல நேரங்கள் மற்றும் அந்த முதல் உயர்வைத் துரத்துவது நமது தனிப்பட்ட வளர்ச்சியை கணிசமாகத் தடுக்கலாம். 1 கொரிந்தியர் 13:11-ல் பவுல் அதைச் இவ்வாறாக எழுதுகிறார், நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில்லை. இரட்சிப்புக்கு நேராக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை பொறுத்தவரையில், நாம் ஒவ்வொரு படியாக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதும், நமது சிதைவுகளை உரிய இடத்தில் கெளரவமாக மீட்டெடுப்பதற்குப் பாடுபடுவதும், நமது இரட்சிப்பை எதிர்நோக்குவதும் முக்கியம். தகுந்த நேரம் மற்றும் இடம் வரை நமது கடந்த காலத்து மனநிலையை விலக்கி, நிகழ்காலத்தில் இருப்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக மீட்பின் ஆரம்ப நாட்களில்.

நினைவில் கொள்ளுங்கள், நம் அறியப்படாத எதிர்காலத்தை நாம் எப்போதும் அதை அறிந்த தேவனிடம் ஒப்புகொடுக்க அவரை நம்பலாம். அவர் எரேமியா 29:11ல் இவ்வாறாக சொல்கிறார், 'நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே'. இது நமக்கான ஒரு நல்ல வார்த்தை அல்லது சில நேர்மறையான ஊக்கம் மட்டும் அல்ல - இது நமக்கான நமது படைப்பாளரின் வாக்கு.

"இன்று மட்டும்" என்னும் சொல் நமது அடிமைத்தன விடுதலை முயற்சில் தொடர்ந்து வரும் வார்த்தை. நேற்றைய நாளில் ஒரு காலும், மற்றொன்று நாளையிலும் இருந்தால், உங்களுக்கு நிகழ்காலத்தில் முதலீடு இருக்காது. இன்று கர்த்தர் படைத்த நாள், யாருக்குத் தெரியும், நாம் அனைவரும் பாடுபடும் வாழ்நாள் நினைவுகளை இன்று நாம் உருவாக்கிக்கொண்டிருக்கலாம்!

   

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Dear Addiction...

"அன்புள்ள அடிமைத்தனம்..." என்பது 5 நாள் வாசிப்புத் திட்டமாகும், இது அடிமைத்தனத்தின் வேதாகம நிலைப்பாட்டினை நமக்கு எடுத்துரைக்கிறது. இது நமது போராட்டங்களைக் குறித்து மிகவும் நுண்ணறிவு மற்றும் சக்தி வாய்ந்த வார்த்தைகளை வழங்குகிறது, இந்த திட்டம் உங்களுக்கு ஆறுதல் வழங்கி நீங்கள் இரட்சிக்கப்பட உதவ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்!

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக STORM Inc. இன் இணை நிறுவனர்களான ஜார்ஜ் மற்றும் மெரிடித் ஷாஃபர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: http://www.storminc.org