அன்புள்ள அடிமைத்தனமே...மாதிரி
நாள்: 1: முன்னுரை
மீட்பு என்பது அனைவருக்கும் உண்டு.
நீங்கள் போதைப்பொருள் அல்லது மது, உணவு அல்லது ஆபாசப் படங்கள், சூதாட்டம் அல்லது அதிர்ச்சி ஆகியவற்றிலிருந்து மீண்டு வந்தாலும், இந்த வாழ்க்கையை நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்தால், நீங்கள் மீண்டு வர வேண்டிய அவசியம் இருக்கும்.
இந்த ஐந்து நாட்களில் அன்புள்ள அடிமைத்தனம், என்னும் இத்திட்டத்தில் இரட்சிப்பின்காலத்தில் நாம்எதிர்கொள்ளும் சில சிக்கல்களுக்குத் தீர்வு காண்போம். நீங்கள் குணமடைவதைப் பற்றி மேலும் அறிய முற்பட்டாலும் அல்லது நீண்ட கால மீட்புக்குள் புதிய வாழ்க்கையை சுவாசிக்க விரும்பினாலும், உங்கள் தனிப்பட்ட பாதையில் இது உங்களை ஊக்குவிக்கும் என்பதே எங்கள் பிரார்த்தனை.
நாங்கள் இந்த உலகத்தின் வாழ்க்கையை உள்ளும் புறமும் அறிந்திருக்கிறோம். போதையின் நல்ல நேரங்களின் கவர்ச்சியையும் அது வேடிக்கையாக இருப்பதை நிறுத்தும்போது ஏற்படும் மாற்றத்தையும் நாங்கள் அறிவோம். கற்பாறை போன்ற அவர் மீது ஒரு புதிய, வலுவான அஸ்திவாரத்தில், தேவன் நம் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதையும் நாங்கள் பார்த்தோம். சாத்தியமான இரட்சிப்பின் மாபெரும் நிலையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இவை அனைத்தின் மூலமாகவும், கிறிஸ்துவில் அளிக்கப்பட்ட நம்பிக்கையினாலும், நம்முடைய சாட்சியின் வார்த்தையினாலும், நாம் ஜெயங்கொள்பவர்களாக இருக்கிறோம்.
நம்மை மாற்றக்கூடிய ஒரே ஒருவரான இயேசு கிறிஸ்துவிடம் நாம் சரணடையும் போது ஒவ்வொரு நாளிலும் மீட்பு நிகழ்கிறது. உங்களுடன் நடக்கவும், தேவனுடைய வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கவும், மீட்பு சாத்தியம் என்று உங்களை ஊக்குவிக்கவும் நாங்கள் இங்கே இருக்கிறோம்.
நீங்கள் எங்கிருந்து தொடங்கினாலும், உங்கள் போதையில் நீங்கள் என்ன செய்தீர்கள், உங்களுக்கு என்ன செய்திருந்தாலும் அல்லது இந்த தருணத்தில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இதோ இந்த இடம், இந்த தருணம். உலர்ந்த எலும்புகளுக்கு உயிரையும், பாலைவனத்தில் நீரோடைகளையும், வனாந்தரத்தில் வழிகளையும், மரித்தோரை உயிர்பிப்பவருமாகிய, நம்முடைய ஜீவனுள்ள தேவனை நாம் சேவிப்பதால், நமது இரச்சிப்பும், உயிர்த்தெழுதலும் சாத்தியமாகும்.
பிசாசின் பிடியிலிருந்து நாம் எவ்வாறு பின்வாங்குகிறோம், அடிமைத்தனத்தில் நாம் செய்த தேர்வுகளுக்கு எவ்வாறு பரிகாரம் செய்கிறோம், மற்றும் நமது இரட்சிப்பின் மூலம் ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப இயேசுவின் கைகளாகவும் கால்களாகவும் எப்படி மாறுகிறோம், என்பதான செயல்களே நமது மீட்பிற்கான முதல் படி.
மீட்பு மதிப்புக்குரியது, நீங்களும் கூட மதிப்புக்குறியவர்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
"அன்புள்ள அடிமைத்தனம்..." என்பது 5 நாள் வாசிப்புத் திட்டமாகும், இது அடிமைத்தனத்தின் வேதாகம நிலைப்பாட்டினை நமக்கு எடுத்துரைக்கிறது. இது நமது போராட்டங்களைக் குறித்து மிகவும் நுண்ணறிவு மற்றும் சக்தி வாய்ந்த வார்த்தைகளை வழங்குகிறது, இந்த திட்டம் உங்களுக்கு ஆறுதல் வழங்கி நீங்கள் இரட்சிக்கப்பட உதவ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்!
More