அன்புள்ள அடிமைத்தனமே...மாதிரி
நாள் 3: மாற்றம்
தூண்டில் மற்றும் இரை. உண்மையில், இது நமது எல்லா பாவங்களிலும் பேசுப்படும் தந்திரங்களில் ஒன்றாகும், இல்லையா? வேடிக்கை என்னவென்றால், பெரும்பாலும் திருப்தி, அமைதி மற்றும் சிற்றின்பத்திற்க்கான வாக்குறுதியின் மூலமாகவே நாம் பாவத்திற்குள் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் இந்த மூன்றையும் தேவனுடைய வார்த்தையில் காணலாம் என்பதையும், இந்த உலகம் வழங்கக்கூடிய அனைத்தும் உண்மையான விஷயத்தின் செயற்கையான மற்றும் தயாரிக்கப்பட்டப் பதிப்பு என்பதை நாம் இப்போது அறிவோம்.
ஆனால் இந்த அறிவு மற்றுமே அடிமைத்தனத்தின் பழக்கம் நம்மீது ஏற்படுத்தக்கூடிய பிடியை மறுக்கவோ குறைக்கவோ கூடாது. அறிவானது பின்பு நாம் செய்யும் செயலுக்கு ஒரு மதிப்பை தர வேண்டும்.
வங்கியில் பணம் செலுத்துபவர்கள் கள்ள நோட்டுகளை எவ்வாறு அடையாளம் காண கற்றுக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகரித்த தொழில்நுட்பத்தின் தோற்றம் மற்றும் குற்றவியல் கூறு நாளுக்கு நாள் புத்திசாலித்தனமாக இருப்பதால், தவறான நாணயத்தை அடையாளம் காண்பது மேலும் மேலும் கடினமாகிவிட்டது. இதை எதிர்த்துப் போராட, வங்கிகள் தங்கள் நிறுவனங்களுக்குள் தொடர்ந்து கள்ளநோட்டுகளில் ஏற்பட்டுள்ள புதிய போக்குகளை மற்றும் குறிப்புகளை அனுப்பி வெளிப்படுத்துகிறது. இது உண்மை. குற்றவாளிகள் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்களா? நிச்சயமாக. ஆனால் அவர்களின் கற்றலின் மையமானது உண்மையான விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது. வங்கிப் பணியாளர்கள் உண்மையான ரூபாயுடன் மிகவும் பரிச்சயமானவர்களாக ஆகிவிடுகிறார்கள், ஏதாவது தொலைவில் சீரற்றதாகத் தோன்றினால், அவர்கள் அதை உடனடியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
நமது ஆவிக்குரிய வாழ்விற்கும் மற்றும் நமது நிதானத்தைப் பற்றியும் இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். ரோமர் 12:2 இவ்வாறாக கூறுகிறது, நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்அப்பொழுது நீங்கள் தேவனுடைய சித்தம் என்ன என்பதை சோதித்தறிய முடியும்—அவருடைய நல்ல, பிரியமான மற்றும் பரிபூரண சித்தம்.
நமது இரட்சிப்பில், நம் மனதைப் புதுப்பிப்பதன் மூலம், மாற்றும் வாழ்க்கையின் விதிமுறைகளின்படி நமது வாழ்க்கையை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் உண்மையில் நம்மை மாற்றிக் கொள்கிறோம். தேவனுடைய வார்த்தையின் நம்பகத்தன்மையையும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பையும் நாம் நன்கு அறிந்தவுடன், வேறு எந்த ஏமாற்றுகளையும் உடனடியாக அடையாளம் காணத் தொடங்குகிறோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
"அன்புள்ள அடிமைத்தனம்..." என்பது 5 நாள் வாசிப்புத் திட்டமாகும், இது அடிமைத்தனத்தின் வேதாகம நிலைப்பாட்டினை நமக்கு எடுத்துரைக்கிறது. இது நமது போராட்டங்களைக் குறித்து மிகவும் நுண்ணறிவு மற்றும் சக்தி வாய்ந்த வார்த்தைகளை வழங்குகிறது, இந்த திட்டம் உங்களுக்கு ஆறுதல் வழங்கி நீங்கள் இரட்சிக்கப்பட உதவ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்!
More