வேதாகமத்தை எப்படி படிப்பது (அடிப்படைகள்)மாதிரி

How To Study The Bible (Foundations)

5 ல் 3 நாள்

சிறந்த வேதாகம படிப்பு உபகரணங்களால் பக்கவலிமை அடைகிறது


அவனது உபகரணங்களின் சிறப்பே ஒரு மனிதனின் சிறப்பு.- எம்மெர்ட் உல்ஃப்.


எனது விடுமுறை நாட்களில் நான் மிகவும் இஷ்டபட்டு செய்யும் விஷயங்களில் ஒன்று, இளஞ்சூடான இஞ்சி-எலுமிச்சை தேநீருடன் அமர்ந்து சமையல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்பது தான். ஒரு நிபுணத்துவம் வாய்ந்த செஃப் வேலை செய்வதைப் பார்ப்பது மிகவும் வசிகரமானது. அவர்கள் பயன்படுத்தும் மசாலாக்கள், அமைக்கும் வெப்பநிலை, அவர்களின் படைப்புகளை பரிமாறும் பாத்திரங்கள் வரை எல்லாமே நோக்கத்துடன் கூடியது.

உலகத் தரம் வாய்ந்த இந்த செஃப்களிடம் சமையலின் மிக முக்கியமான அம்சம் என்ன என்று கேட்டால், 99% பேர் ஒரே பதிலைத்தான் தருவார்கள்: மூலப்பொருட்கள். மூலப்பொருட்கள் எவ்வளவு புதியதாக அல்லது அரிதாக இருக்கிறதோ, கடைசியில் அந்த உணவு அற்புதமாக இருக்கும்.

பைபிளின் மாணவர்களுக்கு, நமது மூலப்பொருட்கள் என்பது வேதாகமத்தைப் புரிந்துகொள்ள உதவும் உபகரணங்களாகும். நல்ல உபகரணங்களைப் பயன்படுத்தினால், வேதாகமத்துக்குட்பட்ட உலகத்தைப் பற்றிய மேன்மையான புரிதலை வளர்த்துக் கொண்டு, தேவனுடைய வார்த்தையில் காணப்படும் காலத்தால் அழியாத உண்மைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வோம். ஆனால் முழுமையற்ற அல்லது தவறான "மூலபொருட்களை" நாம் பயன்படுத்தினால், பைபிளைப் பற்றிய நமது புரிதல் குறைவாக இருக்கும், சில வேளைகளில் ஆபத்தான பாதைகளுக்கும் நம்மை வழிநடத்தக்கூடும்.

2 தீமோத்தேயு நம்மை "சத்திய வசனத்தை" "சரிவர" கையாளக்கூடிய ஊழியர்களாக ஆகும்படிக்கு வலியுறுத்துகிறது. இதைச் செய்ய எனக்கு தெரிந்த சிறந்த வழி:

  1. பைபிளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவக்கூடிய உபகரணங்களைக் கண்டறியுங்கள்.
  2. இந்த உபகரணங்களைப் பயன்படுத்த உங்களுக்கு உதவ தேவன் ஒரு தெய்வபக்தியுள்ள ஆலோசகரை நோக்கி வழிநடத்துமாறு ஜெபியுங்கள்.

தற்ப்போது, அங்குள்ள உபகரணங்களின் எண்ணிக்கையால் எளிதில் திணறிப்போகலாம். விளக்கவுரைகள், அகராதிகள், சொற்தொகுதி பட்டியல், வரைபடங்கள், மொழி மென்பொருள் மற்றும் பலவற்றை காணலாம். நான் எப்போதும் என் மாணவர்களை ஊக்குவிக்கும் #1 உபகரணங் எளிமையானது: ஒரு நல்ல மொழிபெயர்ப்பு.

நல்ல வேளையாக, யூவெர்ஷன் பைபிள் ஆப் போன்ற உபகரணங்கள் பல பயனுள்ள மொழிபெயர்ப்புகளை அணுக எளிதாக்குகின்றன. இங்கிருந்து தொடங்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.

தேவனுடைய வார்த்தையில் அதைத் தேட விரும்புபவர்களுக்காக பொக்கிஷங்கள் காத்திருக்கின்றன.


நிபுணரின் குறிப்பு:உங்கள் வேதாகம ஆய்வை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா, ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா? உங்களுக்குப் பிடித்த வசனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அந்த வசனத்தின் 5 வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். என்ன வேறுபாடுகள்/ஒற்றுமைகள் தெரிகின்றன? ஒரு வாசகராக உங்கள் விழிப்புணர்வு சிறந்த உபகரணங்களில் ஒன்றாகும்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

How To Study The Bible (Foundations)

வேதாகமத்தைப் பொறுத்தவரை சமாளிக்க முடியாது போலவும், போதிய தகுதி இல்லாததாகவும், தொலைந்து போனது போலவும் உணர்வது மிகவும் எளிது. வெற்றிகரமான வேதாகம படிப்பின் முக்கியமான மூன்று நியமங்கள் மற்றும் சில வழிகளை உங்களுக்கு கற்பிப்பதன் மூலம் வேதாகமத்தை படிப்பதை உங்களுக்கு எளிதாக்குவதே எனது நோக்கம். வெறும் தகவலுக்காக மட்டுமின்றி வாழ்வை உருமாற்றும் எவ்வாறு வேதாகமத்தை வாசிக்கலாம் என்பதை கண்டறிய இன்றே இந்த திட்டத்தில் சேருங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்காக ஃபேய்த்ஸ்பிரிங்கிற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்திற்கு தயவுகூர்ந்து செல்லுங்கள்: http://www.ramosauthor.com/books/