வேதாகமத்தை எப்படி படிப்பது (அடிப்படைகள்)மாதிரி
சிறந்த வேதாகம படிப்பு என்பது பழக்கத்தினாலே.
நாம் எதை திரும்பத் திரும்ப செய்கிறோமோ நாம் அதுவாகவே மாறுகிறோம் - சீன் கோவி
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ, நம் வாழ்க்கை நம் பழக்கங்களைச் சுற்றியே அமைந்துள்ளது. நாம் என்ன சாப்பிடுகிறோம், மன அழுத்தம் வருகையில் எவ்வாறு நடந்து கொள்கிறோம், அலாரத்தை ஒத்திவைக்கிறோமா இல்லையா - இவை அனைத்தும் நாம் நம் வாழ்வில் அனுமதித்த பழக்கங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
எழுத்தாளர் சார்லஸ் டுஹிக் கூறுகையில், ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் அனைத்திலும் சுமார் 45% பழக்கவழக்கமானவை. உங்களிடம் நல்ல பழக்கங்கள் இருந்தால், இது ஊக்கமளிக்கிறது. ஆனால் உங்கள் பழக்கங்கள் நீங்கள் விரும்புவது போல் இல்லை என்றால், நீங்கள் எடுக்க வேண்டிய முடிவுகளில் பாதி ஏற்கனவே உங்களுக்காக எடுக்கப்பட்டுவிட்டன (அதுவும் மோசமாக தேர்வு செய்யப்பட்டவை).
தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை உங்களிடம் கூறுகிறேன்.
வேதத்தில் நாம் காணும் விசுவாசத்தின் ஜாம்பவான்கள் ஏன் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள்? ஏனெனில் தேவனோடு செலவிடும் நேரமும், அவரது வார்த்தையில் செலவிடும் நேரமும் அவர்களின் தினசரி வாழ்வில் விட்டுக்கொடுக்க முடியாத அங்கங்களாக இருந்தன.
தாவீது ராஜா செய்த அனைத்து தவறுகளுக்கு மத்தியிலும், அவர் மீண்டும் மீண்டும் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்பி வந்து, அதன்படி தன் வாழ்க்கையைச் சீரமைத்து, அதன் காரணமாக இஸ்ரவேலின் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
பவுல் வேதவாக்கியங்களை வாழ்ந்து சுவாசித்த ஆர்வமுள்ள பரிசேயனாக வளர்ந்தார். இயேசு அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய பிறகு, அவர் தேவனுடைய வார்த்தையை புதிய நம்பிக்கையுடன் அணுகி, அதன் காரணமாக தனது வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றினார்.
தினசரி வேதாகமப் பழக்கத்தை தவிர்த்திருக்க முடிந்தவர் இயேசு மட்டுமே. இருப்பினும் மீண்டும் மீண்டும் இயேசு அமைதியாக வாசிக்கவும் ஜெபிக்கவும் தனியாகச் சென்றதை நாம் காண்கிறோம். தெய்வீகத்துடனான சந்திப்புகளால் நமது மனிதத்தன்மை எவ்வளவு ஆழமாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை நம் அனைவரையும் விட அவர் சிறப்பாகப் புரிந்துகொண்டார்.
நிபுணரின் குறிப்பு: தொடர்ந்து வேதாகமத்தை வாசிப்பதில் சிரமப்படுகிறீர்களா? உங்கள் படுக்கையறை அல்லது சமையலறை நுழைவாயிலுக்கு அருகில் அதைத் திறந்து வைக்கவும். இவ்வாறு, உங்கள் வழக்கமான தினசரி வேலைகளைச் செய்யும்போது நீங்கள் கடந்து செல்லும்போது குறைந்தபட்சம் ஒரு வசனத்தையாவது படிப்பீர்கள். உறுதியான வேதாகமப் பழக்கத்தை உருவாக்குவதன் நோக்கம் அதை எளிமையாக்குவது (1 வசனம்) மற்றும் கண்ணுக்குத் தெரியுமாறு (ஏற்கனவே திறந்து உங்கள் பாதையில் வைக்கப்பட்டிருப்பது) இருப்பதே ஆகும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வேதாகமத்தைப் பொறுத்தவரை சமாளிக்க முடியாது போலவும், போதிய தகுதி இல்லாததாகவும், தொலைந்து போனது போலவும் உணர்வது மிகவும் எளிது. வெற்றிகரமான வேதாகம படிப்பின் முக்கியமான மூன்று நியமங்கள் மற்றும் சில வழிகளை உங்களுக்கு கற்பிப்பதன் மூலம் வேதாகமத்தை படிப்பதை உங்களுக்கு எளிதாக்குவதே எனது நோக்கம். வெறும் தகவலுக்காக மட்டுமின்றி வாழ்வை உருமாற்றும் எவ்வாறு வேதாகமத்தை வாசிக்கலாம் என்பதை கண்டறிய இன்றே இந்த திட்டத்தில் சேருங்கள்!
More