வேதாகமத்தை எப்படி படிப்பது (அடிப்படைகள்)மாதிரி

How To Study The Bible (Foundations)

5 ல் 1 நாள்

ஏன் வேதாகமத்தை படிப்பது முக்கியம்

வேதாகமத்தை அறியாமல் தேவனை அறிய முடியாது.

இந்த வரியை நான் முதன்முதலில் கேட்டது நினைவில் இருக்கிறது. அப்போது இளம் கிறிஸ்தவனாக இருந்த நான் என் இதயத்தை சரியான விருப்பங்களை நோக்கி வழிநடத்த சரியான விஷயத்தைத் தேர்ந்தெடுக்க ஆர்வமாக இருந்தேன். தேவன் என் வாழ்க்கையை உருமாற்ற முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன், அவரை நெருக்கமாக அறிய விரும்பினேன்.

அவர் உண்மையில் எப்படிப்பட்டவர்? என்னிடமிருந்து அவர் என்ன வேண்டுகிறார்? நான் ஏன் இங்கிருக்கிறேன்?

அடுத்த பத்தாண்டுகளில், தேவனை ஆழமாக அறிந்துகொள்ள நான் என்னால் முடிந்தவரை வேதாகமத்தைக் கற்றுக்கொள்வதை என் கடமையாக்கிக் கொண்டேன். அந்த முடிவு நான் கற்பனையும் செய்திராத பாதையில் என்னை அழைத்துச் சென்றது.

இந்த சிறிய தியானம், கடந்த பத்தாண்டுகளில் நான் பெற்ற மிகவும் பயனுள்ள நுண்ணறிவுகளின் அறிமுகமாகும். உங்கள் வாசிப்பு நேரத்திலிருந்து அதிகபட்ச பயனைப் பெற உதவும் நுட்பங்கள், கருவிகள் மற்றும் உத்திகளை நீங்கள் கண்டறிவீர்கள். மேலும் உங்கள் வேதாகமத்தை அறிவது அதற்குத் தேவையான ஒவ்வொரு அவுன்ஸ் வேலைக்கும் தகுதியானது ஏனெனில் அதனுடைய தேவனே உழைப்புக்குரிய விருப்பூதியம்.

சவாலை ஏற்று, உங்கள் வேதாகம அனுபவத்தை ஒரு வேலையாக அன்றி ஒரு அத்தியாவசிய பழக்கமாக உருமாற்றுவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். அவரை நீங்கள் மேலும் அறியவேண்டும் என தேவன் காத்திருக்கிறார். அவர் மகத்தான அழைப்பை விடுத்துள்ளார். அடுத்து என்ன நடக்கிறது என்பது உங்களைப் பொறுத்தது.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

How To Study The Bible (Foundations)

வேதாகமத்தைப் பொறுத்தவரை சமாளிக்க முடியாது போலவும், போதிய தகுதி இல்லாததாகவும், தொலைந்து போனது போலவும் உணர்வது மிகவும் எளிது. வெற்றிகரமான வேதாகம படிப்பின் முக்கியமான மூன்று நியமங்கள் மற்றும் சில வழிகளை உங்களுக்கு கற்பிப்பதன் மூலம் வேதாகமத்தை படிப்பதை உங்களுக்கு எளிதாக்குவதே எனது நோக்கம். வெறும் தகவலுக்காக மட்டுமின்றி வாழ்வை உருமாற்றும் எவ்வாறு வேதாகமத்தை வாசிக்கலாம் என்பதை கண்டறிய இன்றே இந்த திட்டத்தில் சேருங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்காக ஃபேய்த்ஸ்பிரிங்கிற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்திற்கு தயவுகூர்ந்து செல்லுங்கள்: http://www.ramosauthor.com/books/