கைல் ஐடல்மென் உடன் கெட்ட குமாரனின் உருமாற்றம்மாதிரி
“செயல் - எழுந்திருக்க வேண்டிய நேரம்”
செயல் என்பது நம்மில் நிறைய பேர் சிக்கித் தவிக்கும் இடம். என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரியும், நாம் நமது மேடையில் ஏறுவோம், ஆனால் நகர முடியாது. விழிப்புணர்வைப் பெறுவதும், நாம் செய்ய வேண்டியதைப் பற்றி நேர்மையாக இருப்பதும் ஒரு விஷயம். செயல்படுத்துவதென்பது முற்றிலும் மற்றொரு விஷயம். லூக்கா 15: 20ல், கெட்ட குமாரனின் கதையை மாற்றிய எளிய சொற்றொடரைப் படித்தோம். இயேசு வெறுமனே சொன்னார், "எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்...."
அவன் உடனடியாக நடவடிக்கை எடுத்தான். எழுந்திருக்க வேண்டிய நேரம் இது என்பதை அவன் உணர்ந்தான். ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. நமது கதையையும், “எனவே அவர் எழுந்தார்,” அல்லது “அதனால் அவள் எழுந்தாள்” என்று படிக்காவிட்டால், எதுவும் உண்மையில் மாறாது.
இங்குதான் ஆஹா நம்மில் பலருக்கு வெளியே நிற்கிறது. நமக்கு ஒரு விழிப்புணர்வு தருணம் உள்ளது, நேர்மையாக இருப்பதற்கான வலிமையைக் கூட நாம் காண்கிறோம், ஆனால் உண்மையில் வேறு எதையும் செய்ய நாம் ஒருபோதும் அடியெடுக்கிறதில்லை. நமது வாழ்க்கையின் பெரும்பகுதியை நேர்மைக்கும் செயலுக்கும் இடையில் சிக்கி செலவிடுகிறோம்.
நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் போது, “நான் உங்களுடன் உடன்படுகிறேன், ஆனால் இதைப் பற்றி எதுவும் செய்ய எனக்குத் தெரியவில்லை” என்று நினைக்கலாம்.
இது கொஞ்சம் கடுமையாக இருக்கலாம், அல்லது கொஞ்சம் சாதாரணமாக இருக்கலாம்; இருப்பினும், உண்மை என்னவென்றால், நாம் தேவனை போல் உணராதபோதும் நாம் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு செய்ய உந்துதல் இல்லாமல் இருக்கும் வேலையிலும் நாம் கடவுளுக்குக் கீழ்ப்படியும்போது, நம் உணர்வுகள் இறுதியில் நம் செயல்களோடு ஒன்றினையும்.
நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களுக்கான உங்கள் விளையாட்டுத் திட்டத்தைத் திரும்பிப் பாருங்கள். தாளில் அல்லது உங்கள் மனதில் இருந்தாலும் நீங்கள் முன்பே பட்டியலை உருவாக்கியிருக்கலாம், அவை என்னவென்று உங்களுக்குத் தெரியும். முதல் கட்டத்தை அடையாளம் காணுங்கள், "எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில்...." போக வேண்டும் என்று கெட்ட குமாரன் அறிந்த மாத்திரத்தில், அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது, அதை அவன் நிறைவேற்றினான். நாமும் நமது முதல் படியைக் கண்டுபிடித்து, நாம் அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது செய்வோம். தேவனின் உதவியுடன், முதலில் செயற்கையாகத் தோன்றும் செயல்கள் செய்வோம் பின்னர் அது உண்மையானவை என்பதை நாம் காணலாம்.
* நீங்கள் உணர்வடைந்து, உங்களுடன் நேர்மையாக இருந்திருக்கிறீர்களா, ஆனால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் போனது உண்டா? அந்த செயலைத் தொடங்க நீங்கள் எடுக்கப் போகும் முதல் படி என்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கைல் ஐடல்மான் என்பவருடைய "ஆஹா" என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட, இத்திட்டதுடன் சேருங்கள், இதில் அவர் தேவனிடம் நம்மை நெருங்கி வரக்கூடிய 3 கூறுகளை கண்டுபிடிப்பதால் இதனை அறியும் நாமும், நம் வாழ்க்கையை நன்மைக்காக மாற்ற முடியும். எல்லாவற்றையும் மாற்றும் தேவனின் தருணத்திற்கு நீங்கள் தயாரா?
More