கைல் ஐடல்மென் உடன் கெட்ட குமாரனின் உருமாற்றம்மாதிரி
“ஆஹா"க்கான செய்முறை”
என் மனைவியிடம் இந்த சமையல் புத்தகம் வீட்டில் உள்ளது, இது எங்கள் திருமணப்பரிசு. இது “மூன்று பொருட்கள் சமையல் புத்தகம்” என்றும் அழைக்கப்படுகிறது. என் மனைவி அப்புத்தகத்தைப் பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவள் சமைக்கும்போது, பொதுவாக மூன்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் இருக்கும். உண்மை என்னவென்றால், “மூன்று பொருட்கள் சமையல் புத்தகத்தை” பயன்படுத்துவது நான் தான்.
சமையலறைக்கு அனுமதிக்கப்படும் அரிய சந்தர்ப்பங்களில், இந்த சமையல் புத்தகமே எனது சமையல் துணை, நேர்மையாக சொல்லப் போனால், மூன்று பொருட்களுக்குள் தான் எனது சமையல் திறன். நான் கடினமான வழியில் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால், மூன்று மூலப்பொருள் சமையல் புத்தகத்தைப் பயன்படுத்தும் போது, அனைத்து பொருட்களும் அவசியம் - அதாவது, அம்மூன்றும் முற்றிலும் இன்றியமையாதவை.
இது மூன்று மூலப்பொருள் சமையல் புத்தகத்தின், தீங்கு. நாம் ஏமாற்ற முடியாது. இரண்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்தினால், அது நன்றாக வேலை செய்யாது.
'ஆஹா' அனுபவங்களுக்கும் இது பொருந்தும்.
பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான-ஆயிரக்கணக்கான நபர்களின் ஆஹா அனுபவங்களை நான் கவனித்திருக்கிறேன். வேதாகமத்தின் முக்கிய நபர்களின், பல மாற்று அனுபவங்களை நான் படித்திருக்கிறேன். அவற்றை ஆராய்ந்து பார்த்தால் நிலைத்தன்மையுடன் வேலை செய்யும், 'ஆஹா' எப்போதும் மூன்று பொருட்களைக் கொண்டுள்ளதாகவே இருக்கிறது. இந்த பொருட்களில் ஏதேனும் ஒன்று காணவில்லை என்றால், அது உருமாற்ற செயல்முறையை குறுகிய சுற்றுகளாக மாற்றிவிடும்:
(1) திடீர் விழிப்புணர்வு (2) மிருகத்தனமான நேர்மை (3) உடனடி நடவடிக்கை (விழிப்பு, நேர்மை, செயல் = ஆஹா)
விழிப்புணர்வு மற்றும் நேர்மை இருந்து, எந்த நடவடிக்கையும் இல்லை என்றால், ஆஹா இருக்காது.
விழிப்புணர்வும் செயலும் இருந்து, நேர்மை கவனிக்கப்படாவிட்டால், ஆஹா குறுகிய காலம் மட்டுமே இருக்கும்.
ஆனால் தேவனுடைய வார்த்தையும் பரிசுத்த ஆவியும் இந்த மூன்று விஷயங்களையும் உங்கள் வாழ்க்கையில் ஒன்றாகக் கொண்டுவரும்போது, எல்லாவற்றையும் மாற்றும் தேவன் அருளும் தருணமாகிய ஆஹாவை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
* உங்களை மாற்றும் ஆஹா தருணத்திற்கு நீங்கள் தயாரா? இந்த செயல்பாட்டின் மூன்று படிகளை நீங்கள் செல்ல விரும்புகிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கைல் ஐடல்மான் என்பவருடைய "ஆஹா" என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட, இத்திட்டதுடன் சேருங்கள், இதில் அவர் தேவனிடம் நம்மை நெருங்கி வரக்கூடிய 3 கூறுகளை கண்டுபிடிப்பதால் இதனை அறியும் நாமும், நம் வாழ்க்கையை நன்மைக்காக மாற்ற முடியும். எல்லாவற்றையும் மாற்றும் தேவனின் தருணத்திற்கு நீங்கள் தயாரா?
More