கைல் ஐடல்மென் உடன் கெட்ட குமாரனின் உருமாற்றம்மாதிரி

Prodigal Son Transformation With Kyle Idleman

7 ல் 2 நாள்

“விழித்தெழுதல் - உணர்வடைதல்”

கடிகார அறிவிப்பு ஒலியினை நாம் உணராமலே நம் வாழ்க்கையில் அடிக்கடி அதை தவற விடுகிறோம். மென்மையான சத்தம் கொண்ட, எழுப்பு ஒலியால் நம்மை எழுப்பிட முடியாது நம்மை எழுப்புவதற்கு பெரிய சத்தம் தேவைப்படும். எனவே ஆரம்பத்தில் அலாரத்திற்கு பதிலளிப்பதற்கு பதிலாக, உறக்கநிலையைத் தொடுகிறோம். அலாரம் சத்தமாகவும் சத்தமாகவும் வளரும், இறுதியில் அது மிகவும் விரும்பத்தகாததாக சத்தத்தை எழுப்பும் வரை, இதை இனி புறக்கணிக்க முடியாது என்ற நிலையில் எழுகிறோம். நாம் எழுந்து, கண்களைத் தேய்த்து, நம்மைச் சுற்றியுள்ள கெட்ட குமாரின் பன்றிகளை நம்மை சுற்றிப் பார்க்கிறோம், இது எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுகிறோம்.

உங்களுக்கான எனது கேள்வி இதோ: உங்கள் வாழ்க்கையில் இப்போது அலாரங்கள் அல்லது எழுப்பு ஒலி ஒலிக்கிறதா?

தேவன் நம் வாழ்க்கையில் அலாரத்தை எவ்வாறு ஒலிக்கிறார் என்பதற்கு வேதத்தில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. விஷயங்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்பே நம்மை எழுப்புவதற்கு அலாரம் ஆரம்பத்தில் ஒலிக்கிறது. சில நேரங்களில் நாம் நம் நினைவுக்கு வருவதற்கு முன்பு தரை நிலையில் அடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால் இந்த அலாரம் நாம் பிற்கால தொலைதூர நாட்டில் இருக்கும் தருவாயில் உணரும் இதய துடிப்பிலிருந்து நம்மை காப்பாற்ற தேவன் இப்போதே நம்மை எழுப்ப முயற்சிப்பதாய் இருந்தால் என்ன செய்வது?

2 நாளாகமம் 36:15 ஆம் வசனம் தேவன் தம் மக்களை எச்சரிக்க அலாரத்தை எவ்வாறு ஒலிக்கிறார் என்பதைப் பற்றி பேசுகிறார். “சீக்கிரம் எழுந்திருத்தல்” என்ற வெளிப்பாடு தேவன் சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுந்ததாக அர்த்தமல்ல. மாறாக இது “ஆரம்பத்தில் நடவடிக்கை எடுப்பது” என்று சிறப்பாக புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த சூழலில், பிரச்சினைகள் உணரப்பட்டவுடன் அவர் அலரத்தை ஒலிக்கிறார் என்று அர்த்தம்.

பின்னர் அவர் ஏன் எச்சரித்தார் என்பதைப் படிக்கிறோம்: “… அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால்,…” இந்த அலாரங்கள் நம்முடைய நன்மைக்காகவே இருக்கின்றன, ஏனென்றால் தேவன் நம்மை நேசிக்கிறார்.

* நீங்கள் புறக்கணிக்கும் அலாரங்கள் ஏதேனும் உள்ளதா, விழித்திருப்பதை விட உறக்கநிலையைத் தேர்வுசெய்கிறீர்களா? பிற்கால இதய முறிவு / பாவத்திலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக தேவன் உங்களுக்கு ஆரம்பகால அலாரங்களை எப்போது கொடுத்தார் என்று நீங்கள் யோசிக்க முடியுமா?

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Prodigal Son Transformation With Kyle Idleman

கைல் ஐடல்மான் என்பவருடைய "ஆஹா" என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட, இத்திட்டதுடன் சேருங்கள், இதில் அவர் தேவனிடம் நம்மை நெருங்கி வரக்கூடிய 3 கூறுகளை கண்டுபிடிப்பதால் இதனை அறியும் நாமும், நம் வாழ்க்கையை நன்மைக்காக மாற்ற முடியும். எல்லாவற்றையும் மாற்றும் தேவனின் தருணத்திற்கு நீங்கள் தயாரா?

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.dccpromo.com/aha/ க்கு செல்லவும்.