கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி
நிதானமாக, இசைவாக, அமைதியுடனும் இருங்கள்...
பல காரணங்களினால், கிறிஸ்மஸ் பண்டிகை மக்களுக்கு மிகவும் கடினமானதொரு நேரமாக இருக்கலாம். அதில் ஒரு காரணம், கிறிஸ்மஸ் எப்போதும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைவதில்லை. உண்மையில், கொண்டாட்டம் அரிதாகவே அமைகிறது. நீங்கள் கூட சில சமயம் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும். அநேகர் மது மற்றும் போதைப் பொருள் நோக்கி ஓடுகின்றனர். துரதிருஷ்டவசமாக ஆண்டின் இந்த நேரத்தில் தான் தற்கொலை நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.
சில சமயங்களில் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக்க் கிறிஸ்மஸ் பண்டிகை ஆழ்ந்த சோகமாக இருக்க நேரிடும். ஒருவேளை உங்களது பெற்றோர் விவாகரத்து செய்திருக்கலாம். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களை விட்டுப் பிரிந்திருக்கலாம். கடந்த ஆண்டு அவர்களுடன் இணைந்து கொண்டாடி இருப்பீர்கள், ஆனால், இந்த ஆண்டு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். சிலர் தாங்கள் நேசித்தவரை இழந்திருக்கலாம். கடந்த ஆண்டு அவர்கள் உங்களோடு இருந்தார்கள், ஆனால் இந்த வருடம் அவர்கள் இல்லை. இது ஆழமான வலி.
பலர் கிறிஸ்மஸை வேடிக்கையாகக் கொண்டாடி மகிழும்போது, சிலர் உண்மையாக வேதனையில் வாடுகின்றனர். ஆனாலும் இந்தக் கொண்டாட்டத்தில் உள்ள உண்மையான செய்தி என்னவென்றால், தேவகுமாரன் இந்த பூமிக்கு இறங்கி வந்து மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். பின்னர் இந்த உலகத்தின் பாவங்களுக்காக, சிலுவையில் தமது உயிரைப் பலியாகச் செலுத்தினார். அதுதான் நாம் மறந்துவிடக் கூடாத முக்கியச் செய்தி. அவர் மரிப்பதற்காகவே பிறந்தார். அவரது மரணத்தால் நாம் பிழைத்திருக்கிறோம். அவர் சிலுவையைச் சுமந்தார், பலியாக மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார், இப்போது நம் இதய வாசலின் கதவுகளை, அவர் அன்போடு தட்டுகிறார்.
இயேசுவின் பிறந்தநாளை வெறும் சமயச்சடங்காக கொண்டாட வேண்டாம். கிறிஸ்மஸ் பண்டிகையின் பணிகளில் தீவிரமாக மூழ்கி, அதன் நிகழ்வுகளில் மெய்மறந்து, அவரை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் கதவைத் திறந்து அவரை உள்ளே அழைக்கவும்.
சில சமயங்களில், உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் எங்கே இருக்கிறார் என்று நீங்கள் சிந்திக்கக் கூடும். அவர் உங்களை விட்டு விலகிச் சென்று விட்டாரோ என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். இல்லை, அது உண்மை இல்லை. அவர் இங்கே இருக்கிறார் அவர் இம்மானுவேல் — தேவன் நம்மோடு இருக்கிறார். இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்ட பரபரப்பில், நிதானமாகவும், இசைவாகவும், அமைதியாகவும், அவர் கர்த்தர் என்பதை அறிந்து கொள்ள, கவனத்துடன் நினைவில் கொள்வோம்.
பதிப்புரிமை © 2011 அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள் புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More