உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள்மாதிரி

Give Your Work Meaning

4 ல் 4 நாள்

தேவன் நமது வேலையை தமது சித்தத்துக்கென்று பயன்படுத்துகிறார்

யாக்கோபு இறந்தப்பின்பு, யோசேப்பு தங்களை பழிவாங்கும் எண்ணத்தில் ஏதேனும் செய்துவிடுவாரோ என்று எண்ணி அவரின் சகோதரர்கள் பயந்தார்கள். ஆனால் யோசேப்போ தேவனுடைய சித்தத்தை செய்வதையே தன் சித்தமாகக்கொண்டு, "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." என்று கூறினார். இன்று நாம் காணும் தேவனின் மாபெரும் திட்டத்தின் ஒரு சிறுப்பகுதியை மட்டுமே யோசேப்பில் அன்று காண முடிந்தது. என்றாவது, யோசேப்பு தான் எத்தனை உயிர்களை காப்பதில் பங்காற்றினார் என்பதை அறிந்துக்கொள்வார்.

“எனது சகோதர சகோதரிகளே, உங்களுக்குப் பலவகையான தொந்தரவுகள் இருக்கும். ஆனால் இவை நிகழும்போது இதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால், இத்தொந்தரவுகள் உங்களது விசுவாசத்தை சோதிக்கின்றன என நீங்கள் அறியுங்கள். இவை உங்களுக்குப் பொறுமையைத் தருகின்றது” என்பதை யாக்கோபு 1:2-3 ல் காண்கிறோம். சோதனைகளுக்கு மத்தியில் விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது, தேவன் நம்மூலமாய் மகத்துவமான கிரியைகளை செய்ய அவருக்கு வாய்ப்பளிக்கிறோம். தேவனால் நாம் செய்யும் வேலையைக்கொண்டு நமது நடவடிக்கைகளை சரிசெய்ய முடியும், நம்மை பலப்படுத்த முடியும், வேறு வகையில் அடைய முடியாத கனிகளைத்தரும் வாழ்வை நமக்கு அழிக்க முடியும், அவர் அப்படி செய்ய சித்தமாயிருக்கிறார் என்பதை நம்ப வேண்டும்.

நாம் தேவனை சார்ந்து இருக்கும்போது, நம் கற்பனைக்கெட்டாத வழிகளில் நம்மையும் நாம் செய்யும் வேலைகளையும் தேவன் பயன்படுத்துவார் என்ற விசுவாசத்தில் உறுதியாய் இருப்போம். சில நேரங்களில் நாமும் யோசேப்பைப்போல, தேவ சித்தத்தின் நமது சிறு பங்கை காணக்கூடும். தேவனுடைய பரிபூரண சித்தத்தில் நமது விசுவாசத்தின் பங்கை என்றாவது ஒரு நாள் முழுமையாகக்காண்போம்.

கடினமான சூழல்களைக்கொண்டு உங்களை மெருகேற்றவும், தேவ சித்தத்தை நிறைவேற்றவும், அவருடைய நாம மகிமைக்காகவும் உங்கள் வேலையின் அர்த்தத்தை உயர்த்தவும், அவரை அனுமதிக்க தீர்மானியுங்கள்.

ஜெபம்

அப்பா பிதாவே, நீர் எப்பொழுதும் என் மூலமாகவும் என்னிலும் கிரியை செய்கிறீர் என்பதை அறிக்கையிடுகிறேன். நான் தினமும் செய்யும் வேலைகளை, உமது கண்ணோக்கத்தில் நானும் பார்க்க எனக்கு உதவும். நான் செய்யும் அனைத்தும் உமது சித்தத்தை நிறைவேற்றும் வகையில் அமைய, ஞானத்தால் என்னை நிறைத்தருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.

மேலும் விவரங்களுக்கு

ஒர்க்கமாட்டேர்சின் மற்ற ஒர்க்ப்லேஸ் டேவோஷனல்ஸை பார்த்து பயனடையுங்கள்.

நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Give Your Work Meaning

நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த ஒர்க்கமாட்டேர்ஸ் அமைப்பிற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு http://www.workmatters.org/workplace-devotions/ என்ற வலைத்தளத்தை அணுகவும்.