உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள்மாதிரி
தேவன் அருளும் வேலையின் அர்த்தத்தை தேர்ந்தெடுப்போம்
போதகர்கள், ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள் செய்யும் வேலை மட்டுமே தேவனுக்கு பிரியமானவை என்ற தவறான கருத்து கிறிஸ்துவர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மற்ற வேலைகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம், இந்த மனப்பான்மை நமது வேலையை குறித்த அணுகுமுறையையும் மன நிம்மதியையும் குலைக்கும். அல்லாமலும், தேவனின் பார்வையில் அனைத்து வேலைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளே. நாம் மற்றவர்களுக்காக செய்யும் அனைத்து வேலைகளிலும் தேவனோடு இணைந்து அவருடைய திட்டத்தின்படி செயற்பட வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.
யோசேப்பு இதை அறிந்திருந்தார், அவரது வாழ்வின் சோதனைகளிலும் இந்த உண்மையை அவர் மறக்கவில்லை. அவரது வாழ்வு துன்பங்களால் சூழ்ந்த போதும், ஒரு தவறான அணுகுமுறையை அவர் கையாடவில்லை. அவர் செய்துகொண்டிருந்த வேலை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கூறி ஒரு போதும் முழுமையற்ற வேலையே செய்யவில்லை. யோசேப்பு, தான் தேவனுக்கு ஊழியக்காரராய் இருப்பதை அறிந்திருந்தார். அதின் விளைவாக, தேவன் அவரோடு இருந்தார் என்பதை ஆதியாகமம் 39ல் "கர்த்தர் யோசேப்போடே இருந்தார்" என்று நான்கு முறை காண்கிறோம் (ஆதி 39:2,3,21,23). போத்திபாரின் மனைவி அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்தப்போதும் அவர் "வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்... இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?" என்றான். யோசேப்பு தன்னுடைய ஆசீர்வாதங்கள் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதையும் தேவனை எப்போதும் கணப்படுத்த வேண்டும் என்பதையும் நன்கறிந்திருந்தார்.
யோசேப்பு என்னதான் நன்மை செய்தாலும், தவறான முறையில் குற்றம் சாட்டப்பட்டு, தன் வேலையை இழந்து, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நியாயமற்ற சூழ்நிலையிலும் அவர் தேவனை மகிமைப்படுத்தினர், தன்னை சுற்றி இருந்தவர்களுக்கும் உதவிகள் செய்து வந்தார். கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
நாமும் பல நியாயமற்ற சூழ்நிலைகளை பணி இடங்களில் சந்திக்கிறோம். வாழ்க்கை நாம் எதிர்பார்க்கும் வண்ணம் செல்லாதபோது, தவறான அணுகுமுறையை கையாடாமல் இருக்க எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். "உலகத்தில் உங்களுக்கு உபத்தரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான்[இயேசு] உலகத்தை ஜெயித்தேன்... " (யோவான் 16:33) என்று இயேசு கூறுகிறார். “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” (யோவான் 15:5)
உங்கள் வேலையே தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்க்க இன்று என்ன செய்ய போகிறீர்கள் ?
ஜெபம்
அப்பா பிதாவே, நீர் எனக்கு தந்த வேலைக்காக உனக்கு நன்றி. நீர் எனக்கு தந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உம்மை துதிக்கிறேன். நான் எந்நிலையிலும் உம்மில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்க, எனக்கு கிருபை அளித்தருளும். என் திட்டங்கள் என் வாழ்வில் நிறைவேறாதப்போதும் உம்மை நோக்கிப்பார்க்க எனக்கு கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.
மேலும் விவரங்களுக்கு
உங்கள் வேலையின் நோக்கத்தை அறிய விரும்பினால் போனி வுர்ஸ்பாச்சர் கோகோ கோலா நிறுவனத்தின் முன்னாள் எஸ்.வி.பி அவர்களின் இந்த வீடியோவை பாருங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும்.
More