உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள்மாதிரி
நமது வேலையில் எந்நேரமும் தேவனை சார்ந்து இருப்பது
நாம் யாருக்காக வேலைசெய்கிறோம் என்பது நமது வேலையின் அர்த்தத்தை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. நாம் வேலைச் செய்யும் அலுவலகத்தை விரும்பி நம்முடன் பணி செய்பவர்களை நேசித்தல் நாம் செய்யும் வேலையும் சிறப்பானதாக அமையும். ஆனால், நியாயமற்ற சூழலை சந்தித்து, அன்பற்ற சக பணியாளர்களோடு பணியாற்றும் போது எளிதில் சோர்வடைகிறோம், விரக்தியும் அடைகிறோம் எரிச்சலும் அடைகிறோம். மற்றவர்களை குறித்த நமது மனப்பான்மை, நமது வேலையைக்குறித்திருக்கும் நமது அணுகுமுறையை மாற்றும்.
மனங்கசந்து எரிச்சலடைய யோசேப்புக்கு அணைத்து காரணமும் இருந்தது. அவர் தகாத முறையில் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலையில் தள்ளப்பட்டார். ஆயினும், யோசேப்பு தேவனை சேவிக்க விரும்பினார், சிறைச்சாலை தலைவனுக்கு சிறந்த முறையில் உதவினார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் கலங்கி இருப்பதைப்பார்த்தப்போது யோசேப்பு அவர்களை விசாரித்தார். அவர்களின் நிம்மதியை குலைக்கும் கனவுகளை பொறுமையாக கேட்டப்பின் அதற்கு தேவன் வெளிப்படுத்தின அர்த்தத்தையும் விளக்கினார். பார்வோனுக்கு எவராலும் விளக்க இயலாத ஒரு கனவு வந்தப்போது அந்த பானபாத்திரக்காரன் யோசேப்பின் இச்செயலை நினைவுக்கூர்தன். அப்பொழுதும் அவர் தன்னைத்தான் உயர்த்திக்கட்ட விரும்பவில்லை. அவர், தேவனைத்தவிர வேறு ஒருவராலும் கனவுகளின் அர்த்தத்தை வெளிப்படுத்த இயலாது என்று கூறி, தேவன் அருளின வெளிப்பாட்டை விளக்கினார்.
யோசேப்பு உண்மையுள்ளவராய் இருந்தபடியால், தேவன் அவரை எகிப்துக்கு அதிபதியாக்கினார் (லூக்கா 16:10). தேவன் யோசேப்போடு இருந்தார், ஞானத்தை போதித்தார், அவரை தகுதிப்படுத்தினார், அவரது சூழ்நிலைகளை தேவ சித்ததுக்கென்று பயன்படுத்தினர்.
சிறந்த வேலையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களின் நடவடிக்கைகளை சார்ந்து இருக்குமெனில், நமது அர்ப்பணிப்பின் ஆழம் மாறுப்பட்டுக்கொண்டே இருக்கும். மாறாக, நாம் எப்போதும் தேவனை சார்ந்து இருந்து, செய்யும் வேலையை அவர் நாம மகிமைக்கென்று செதய்தால், தேவன் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றியைத்தருவார். உங்கள் பணியில் நீங்கள் எப்படி தேவனை சார்ந்து செயல்படுகிறீர்கள்?
ஜெபம்
ஆண்டவரே, மற்றவர்களைக் குறித்த எண்ணங்களால் என் வேலையை சரியாக செய்யாத நாட்களை எனக்கு மன்னியும். நான் செய்யும் வேலைகள் உம்மை கணப்படுத்தும் வகையில் இருக்க என் விசுவாசத்தை பெருகப்பண்ணும். என் இருதயத்தை மாற்றும், என் வேலையைக்குறித்த சரியான அணுகுமுறையை எனக்கு போதியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும்.
More