உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள்மாதிரி

Give Your Work Meaning

4 ல் 1 நாள்

நாம் தேர்ந்தெடுப்பதே நமது நமது வேலையின் அர்த்தம்

ஆதியாகமம் 37:5-7 மற்றும் 9ஆம் வசனங்களில் யோசேப்பு, அவர் வாழ்வை குறித்த தேவ சித்தத்தை வெளிப்படுத்தும் கனவுகளை கண்டார். அவர் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பதையும் அவரின் குடும்பத்தினர் அவரை பணிந்துக்கொள்வதையும் தம் கனவில் கண்டார். அவரின் சகோதரர்கள் பொறாமைப்பட்டு அவரை எங்காவது துரத்திவிட விரும்பினார்கள். அவர்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தபோது யோசேப்பு தனியாக அவர்களைக் காணச்சென்றான், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரை அடிமையாக விற்றுப்போட்டார்கள். யோசேப்பின் பாதை அங்கே குழப்பப்பட்டது என்று நீங்கள் சொல்லலாம்.

தேவனை குறித்த பயம் இல்லாத ஒரு அந்நிய தேசத்தில், யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டார். ஆயினும், அவரின் வேலைக்கு நேராக அவருக்கு இருந்த அணுகுமுறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவரிடம் இருந்து பறிக்கப்படவில்லை. அவரின் சூழ்நிலை அவரின் மதிப்பை தேர்ந்தெடுப்பதை அவர் அனுமதிக்கவில்லை. அவரின் எஜமான் போர்த்திபாராக இருந்தாலும் அவர் தேவனுக்கு பிரியமானதைச் செய்ய விரும்பி தான் செய்யும் வேலைகளை சிறந்த முறையில் செய்தார். பிரதியுத்தரமாக தேவன் யோசேப்பின் காரியங்களை வாய்க்கப்பண்ணினார். போர்த்திப்பாரும் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்தார்.

நாம் செய்ய வேண்டிய வேலையை குறித்த கனவுகளோடு நாம் அனைவரும் இருக்கிறோம். ஒருவேளை நீங்கள் செய்யும் வேலை, நீங்கள் கண்ட கனவிலிருந்து வெகு தொலைவில் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, உணர்வுபூர்வமாகவோ அல்லது அறியாமலோ நாமே நமது வேலையின் அர்த்தத்தை தேர்ந்தெடுக்கிறோம். நமது வேலைக்கு, நாம் கொடுக்கும் அர்த்தமே நமக்கு அதைக்குறித்திருக்கும் அணுகுமுறையை தீர்மானிக்கிறது. அதோடுக்கூட நமது வேலையின் தரத்திலும் அதற்கு பங்கு உண்டு. தேவன் நம்மை பயன்படுத்த விரும்பும் வழியிலும் அதற்கு ஒரு இடம் உண்டு.

நமது வேலைக்கான ஒரு நல்ல அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் சுதந்திரமும் நமக்கு உண்டு. நாம் அப்படி செய்யும்போது நமது வேலையை சிறப்பாக செய்வது மட்டுமல்லாமல், கிறிஸ்துவை பிறருக்கு வெளிப்படுத்துகிறோம். நமது அடையாளம் கிருஸ்துவில் இருக்கிறதே ஒழிய நாம் செய்யும் வேலையில் இல்லை. அவரின் ராஜ்யத்தில் உங்கள் வேலையை குறித்து அவர் முன்குறித்திருக்கும் அர்த்தத்தை அறிய அவரை நாடுங்கள்.

ஜெபம்

அப்பா பிதாவே, என் வேலையை நீர் பார்ப்பதுபோல் பார்க்க எனக்கு உதவும். நான் உம்மீது உள்ள அன்பினால் செய்யும் ஒவ்வொரு பணியையும், பிறருக்கு உம் அன்பை வெளிப்படுத்த நீர் பயன்படுத்துவீர் என்பதை நினைவுக்கூற உதவி செய்யும். என்னோட பணியாற்றும் அனைவரும் இன்று, என்னில் உம்மைக்காணச்செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.

மேலும் விவரங்களுக்கு

உங்கள் வேலையின் நோக்கத்தை அறிய விரும்பினால் ஒர்க் மாட்டேர்ஸ் என்ற வலைப்பதிவை படிக்கவும்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Give Your Work Meaning

நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த ஒர்க்கமாட்டேர்ஸ் அமைப்பிற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு http://www.workmatters.org/workplace-devotions/ என்ற வலைத்தளத்தை அணுகவும்.