பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்) மாதிரி
இயேசுவின் சரீரத்தைக் குறித்த உக்கிராணத்துவம் திருச்சபை
கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் உக்கிராணத்துவம் உடையவர்களாக இருக்கிறோம். நான் இயேசுவைப் பின்பற்றுகிறவனாயிருந்தும், பாவத்தில் வாழ்ந்தால், இயேசுவின் சரீரம் முழுவதையுமே களங்கப்படுத்துகிறவனாவேன். யோசுவா 7ம்; அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, ஆகான் மட்டுமே செய்த பாவம், இஸ்ரவேலரின் முழு பாளையத்தையுமே பாதிக்கும்படி செய்தது. பாவத்தில் வாழும் விசுவாசிகள், தங்கள் குடும்பத்தில் ஆரம்பித்து கிறிஸ்துவின் முழுசரீரத்தையுமே கறைப்படுத்தி செயலற்றதாக்கி கலாத்தியர் 6:1ல் சொல்லப்பட்டபடி ‘சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு. திருச்சபையில் ஒருவர் மற்றவருக்குத் தேவை.
மூத்த விசுவாசிகள் எப்படி வாழ வேண்டும், அதைப் பார்த்து விசுவாசத்தில் குறைந்தவர்கள், உறுதியான விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ரோமர் ; 14ம் அதிகாரத்தில் தூய பவுல் அடிகாளார் எழுதி இருக்கிறார் . மூத்த விசுவாசிகள், விசுவாசத்தில் குறைந்தவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. மாறாக அவர்கள் விசுவாசத்தில் வளர உதவி செய்ய வேண்டும்.
2கொரிந்தியர் 12ல் சொல்லப்பட்டபடி இயேசுவின் சரீரமாகிய திருச்சபையின் அங்கங்களாகிய ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வரங்களை மற்றவர் களிடத்தில் பகிர்ந்து அன்புகூறவும், இரக்கம்கொள்ளவும் அதன்மூலம் இயேசுவின் நாமம் மகிமைப்படவுமே எதிர்பார்க்கப்படுகிறோம். அடிக்கடி நாம், கடவுள் மற்றவர்களுக்குக் கொடுத்த வரங்கள் மேலேயே நோக்கம் கொள்கிறோம். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட வரங்களுக்கு நாம் உக்கிராணத்துவம் கொடுக்க வேண்டும்.
விசுவாசிகளுக்குள் எழும்புகிற வழக்குகளைப் பற்றி தூய பவுலடிலார் 1கொரி 6ம் அதிகாரத்திலும், இயேசுதாமே மத்தேயு 18:15-17 வசனங்களிலும் அவைகள் எப்படி திருச்சபையின் அங்கத்தினர்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்று திருச்சபையில் இருக்கிற நாம் ஒவ்வொருவரும் நமது பணிக்கு, கடவுளிடம் கணக்குக்கொடுக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். அநேக நேரங்களில் விவாதம் செய்வதால் திருச்சபையே பிளவுப்படுகிறது. திருச்சபை உறுப்பினர்களாகிய நமக்கு திருச்சபையை சத்துணவு கொடுத்து வளர்த்தெடுப்பதே நமது பொறுப்பு. அதற்கு இடையூறு செய்வதன்று. 1கொரிந்தியர் 3:16,17ல் ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனை தேவனைக் கெடுப்பார் . தேவனுடைய ஆலயம் பரி சுத்தமாக்கப்படுகிறது. நீங்களே அந்த ஆலயம் என்று திருச்சபையைக் கெடுக்கிறவர்களுக்கான தண்டனையைப் பற்றி எழுதியிருக்கிறது
சிந்தனைக்கு:
கிறிஸ்தவர்கள் தங்களை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து விட்டால் கிறிஸ்துவின் சரீரமாகிய ஒருவர் மற்றவருக்கு தன்னை சமர்ப்பிப்பது எளிதாகி விடும்.
ஜெபம்:
அன்புள்ள இயேசு கிறிஸ்துவே, கிறிஸ்துவின் சரீரமாகிய என்னுடைய சகோதர சகோதரர்களுக்கு என்னை சமர்ப்பிக்க உதவி செய்யும். கிறிஸ்துவின் சரீரத்தில் நீர் விரும்புகிறபடி வளர என்னுடைய ஒவ்வொரு அங்கத்தையும் உம்முடைய இரத்தத்தினால் கழுவியருளும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பொதுவாக மனிதர்கள் என்ற முறையில், அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் , நாம் அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி செய்யும் இடங்களில் நமது முதலாளிக்கும் , நம்முடன் இணைந்து பணியாற்றும் குழுவினருக்கும் கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றோம். ஆனால் , மனித இயல்பானது ,யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க விரும்புவதில்லை. கடவுளுக்கு கணக்கு ஒப்புவித்தல் என்பது மற்ற எல்லா பொறுப்புடைமைக்கும் பொருந்தக்கூடிய அடிப்படை அம்சமாகும் .
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக விக்டர் ஜெயரருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
http://victorjayakaran.blogspot.in/