பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்) மாதிரி
நம்முடைய பணியில் உக்கிராணத்துவம்- நம் மனநிலையும், நம்பகத்தன்மையும்:
இந்த புத்தாயிரம் ஆண்டுகளின் துவக்கத்தில், உலகளாவிய நிறுவனங்களின்; தலைமைச் செயல் அதிகாரிகள் மேல் பொதுவான வெறுப்பு ஏற்பட்டது. தங்களது பகட்டான வாழ்க்கைக்காகச் செலவழித்த பங்குச் சந்தை மூலதனத்தின் வரவுகள், தேவையில்லாத ஆபத்திற்குள்ளாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குச்சந்தை செல்வங்கள் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டார்கள். தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய திரு. நாராயண மூர்த்தி அவர்கள் பின்வரும் கருத்து தெரிவிக்கிறார்கள் . ‘நிறுவன அமைப்புகளில் மக்கள் வளரும்போது அதனுடைய திறனையும், அதிகாரத்தையும் குறித்ததான உக்கிராணத்துவத்தை மக்கள் உணரவேண்டும்’.
நிறுவனங்களில் நாம் உயர்ந்த நிலையில் வரும்பொழுது நமது வாழ்க்கை தெளிவாக (களங்கமற்றதாக) இருக்கவேண்டும். நிர்வாகிகளும் நிறுவனங்களின் தலைவர்களும், தங்களது வாழ்க்கையும், சாட்சியும், தங்களோடும் தங்களுக்காக பணிசெய்கின்றவர்களைப் பாதிக்கிறது என்பதை உணரவேண்டும.; தாவீது அரசன் பாவம்செய்தபோது அது முழு இஸ்ரவேலையும் பாதித்தது. யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ள தலைவர்களை எண்ணுவது தனக்குப் பெருமை என்று நினைத்தான். ஆனால் கொள்ளைநோயால் அனைவரும் பாதிக்கப்பட்டனர் . கொள்ளை நோயை நிறுத்துவதற்கு கடவுளிடம் கெஞ்சினான். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், நம் உடன் ஊழியர்களுக்கும் பொறுப்பானவர்கள். நாம் நீதியும் நேர்மையும் உள்ள தலைவர்களாயிருந்தார்கள்.
நமக்குக் கீழ் இருக்கிற மக்களும் அப்படியே நம்மோடு பணிசெய்கிற உடன் வேலையாட்களைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? அவர்களை நமது முன்னேற்றத்திற்காக உபயோகப்படுத்தும் வீரர்களாக நினைக்கிறோம்? அல்லது அவர்களும் கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் என்று நினைக்கிறோமா? நாம் யாருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். இன்றைய தொழிற்சாலைகளில் பணியமர்த்துவதும், துப்பாக்கிசூடு நடத்துவதும் இந்தியாவிலும்கூட சாதாரணமாகிவிட்டது. ஆனால் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாயிருந்தால், வித்தியாசமாக இருக்க அழைக்கப்பட்டவர்கள். நாம் மக்களைப் பணியமர்த்தும்போது, அவர்களுடைய வேலை வாய்ப்புகளில் அவர்களது திறமையைப் பெருக்கி, அவர்களை வழிநடத்துவது நமது பொறுப்பு. மக்கள் தங்கள் வாழ்க்கையில் உங்களை நம்பினால், அவர்கள் கடவுளை தங்களது மீட்பராக நம்புவதற்கு அதிகமாக விரும்புவார்கள்.
சிந்தனைக்கு:
கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்க்கை நமது உறுதியான நம்பிக்கையை பிரதிபலிக்கிறதாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
கடவுளே, என்னுடைய பணியிடங்களில், என்னுடைய உக்கிராணத்துவமும், வாழ்க்கையும் தெளிவாக இருக்கும்படி உதவி செய்யும். உம்முடைய உபயோகத்திற்காகப் பயன்படும் பாத்திரமாக என்னை உபயோகியும் (தகுதிப்படுத்தும்). எப்பொழுதும் நம்பகத்தன்மை உள்ளவனாக இருக்க உமது வல்லமையைத் தாரும் ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பொதுவாக மனிதர்கள் என்ற முறையில், அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் , நாம் அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி செய்யும் இடங்களில் நமது முதலாளிக்கும் , நம்முடன் இணைந்து பணியாற்றும் குழுவினருக்கும் கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றோம். ஆனால் , மனித இயல்பானது ,யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க விரும்புவதில்லை. கடவுளுக்கு கணக்கு ஒப்புவித்தல் என்பது மற்ற எல்லா பொறுப்புடைமைக்கும் பொருந்தக்கூடிய அடிப்படை அம்சமாகும் .
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக விக்டர் ஜெயரருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
http://victorjayakaran.blogspot.in/