பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்) மாதிரி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

7 ல் 3 நாள்

அது யாருடைய பொக்கிஷம்? 

பணம்தான் எல்லாத் தீங்கிற்கும் ஆணிவர். ஆனால் ஆணிவேரைத்தான் மனிதர் கள் விரும்புகிறார்கள் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களானாலும், பின்பற்றாதவர்களானாலும் பணம் நமது வாழ்வில் ஒரு பகுதியாகி விடுகிறது. ஆனால் கிறிஸ்தவரும் கிறிஸ்தவரல்லாதவரும், செல்வத்தை கருதுவதில் வித்தியாசமிருக்கிறது. இந்த உலகத்தை சார் ந்தவர் களுக்கு, வாழ்ந்தாலும் மரித்தாலும் பணமே முக்கியம். ஆனால் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்  நமக்கோ அது நிலையற்றது. நீதி: 23:5ன்படி அது இல்லாமல் போகும் பொருள். எனவே கடவுளுக்கு சேவை செய்வதற்காகவே கிறிஸ்தவர்களாகிய நமக்கு பணம் தேவைப்படுகிறது. மற்றவைகளுக்கு அல்ல. பணத்தை பொறுத்தவரையில் நாம் தளர்ந்து(இழந்து) போகிறவர்களாக இருக்க வேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் தங்களது செல்வத்தில் தசமபாகம் செலுத்துவது  கடவுளின் இறையாண்மையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விசுவாசிகளாகிய நாம் தசமபாகம் செலுத்துவது மட்டுமல்லாமல், பழைய ஏற்பாட்டு மனிதர்களைவிட அதிகமாகக் கொடுப்பதற்கு  இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் ஊக்குவிக்கப்படுகிறோம். நம்மில் அநேகர்  தசமபாகம் செலுத்தாவிட்டால், மீதி பங்கை தங்களது விருப்பம்போல் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கடவுள்தான் செல்வத்தைத் தருகிறார், அவரே எல்லாவற்றுக்கும் அதிபதி என்பதை உணர்ந்து கொள்வதில்லை. கடவுள் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்பினால், கடவுள் நமக்குத் தந்த ஆசீர்வாதங்களுக்காக, முழுமையான செல்வத்திற்கு கணக்குக் கொடுக்க வேண்டும்.  

இன்றைய உலகில், கடன் அட்டைகளின் வருகையால் நாம் விரும்பும் பொருட்களை விரும்பிய உடனேயே வாங்கும்படியான சலுகைகள் இருக்கிறது. ஆனால் நமது பணத்தையும், உடமைகளையும் கடவுள் மட்டுமே ஆசீர் வதிக்கிறார்  என்பதை மறக்கக்கூடாது. நமது செல்வத்தை உபயோகப்படுத்தும் முறையை இயேசு அங்கீகரிப்பாரா? (ஏற்றுக்கொள்வாரா) என்று சோதித்துப்பார்க்க  வேண்டும். அவரது இறையரசைக் கட்டுவதற்கே கடவுள் நமக்குச் செல்வத்தைத் தந்திருக்கிறார்   என்று எண்ணினால், செல்வத்தைக் குறித்த நமது சிந்தனை வித்தியாசமானதாக இருக்கும் நீதி:10:22 ‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர்  வேதனையைக் கூட்டார். 

கடந்த காலங்களில் நான் கற்றுக் கொண்ட முக்கியமான உண்மை என்னவென்றால், கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்து உண்மையுள்ள ஊழியர்க  ளாக செல்வத்தைக் கையாளும்  திறமை பெற்றவர்களுக்கு கடவுள் செல்வத்தை அளிக்கிறார். கடவுள் நமக்குச் செல்வத்தைக் கொடுக்கும்பொழுது, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு அது ஆசீர்வாதத்தின் வடிகாலாக இருந்து, கடவுளின் இறையரசு  உலகம் முழுவதும் பரவிட வழிவகைச் செய்ய வேண்டும். 

இன்றைய  சிந்தனை :   

மக்களை நேசிப்பதற்காகவே பணத்தை உபயோகப்படுத்து, மற்ற காரியங்களுக்காக அல்ல.

ஜெபம்: 

கர்த்தராகிய இயேசுவே, பணத்தைப்பற்றிய சர்யான, முறையான கண்ணோக்கத்தை எனக்குத்தாரும். நான் பணத்திற்கு அடிமையாக அல்ல, பணம் எனக்கு வேலைக்காரனாக பயன்பட உதவி செய்யும். பணத்தையும் செல்வத்தையும் நோக்காமல் சகல ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகிய உம்மையே நோக்கிப்பார்க்க கிருபை செய்யும். ஆமென். 

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் . 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக விக்டர் ஜெயரருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
http://victorjayakaran.blogspot.in/