பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்) மாதிரி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

7 ல் 6 நாள்

உக்கிராணத்துவமும் குடும்பமும்: 

இறையரசைக் கட்டுவதில் கிறிஸ்தவ குடும்பம் கடவுளின் அலகு ஆகும் (மூலக்கூறு). கணவன் மனைவிக்கு இடையில் யாருக்குயார்   சமர்ப்பிப்பது என்று நூற்றாண்டுகளுக்கு மேலாக மாறாத விவாதம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில், குடும்பத்தலைவர்களைக் கொண்ட கூட்டுக்குடும்பங்களில் நடைமுறை வித்தியாசமாகிவிட்டது. கணவன், மனைவி, குழந்தைகள் தனித்தனி வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர் . சுயாதீனமான கடன் அட்டை வைத்திருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மின்னஞ்சல், கைபேசி வைத்திருக்கின்றனர். 

மின்னஞ்சல் மற்றும் கைபேசி பற்றி திருமறை சொல்வதில்லை. ஆனால் திருமணத்தில் இணையும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர்  சார்ந்தும், தூய்மையான (தெளிவான) வாழ்க்கை வாழ்வதாகவும் கடவுள் முன்னிலையில் உடன்படிக்கை செய்துள்ளனர். தங்கள் உடமைகள் அனைத்தையும் தங்களது வாழ்க்கைத் துணையோடு பகிர்ந்து கொள்வதாக வாக்களித்துள்ளனர். எனக்கு வரும் அல்லது  நான் அனுப்புகின்ற ஒவ்வொரு மின்னஞ்சலையும், குறுஞ்செய்தியையும், கைபேசி அழைப்புகளையும் வாழ்க்கைத்துணையோடு பகிர்ந்து கொள்ள முடியவில்லையென்று உடன்படிக்கையிலிருந்து தவறுபவன் ஆவேன். 

பெற்றோர்களாகிய நாம் உக்கிராணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது நமது குழந்தைகள் இயல்பாகவே நல்லவர்களாகவும், உக்கிராணத்துவத்தை உணர்ந்தவர்களாவும் இருப்பார்கள். எனக்குத் தெரிந்த அநேக குடும்பங்களில் குடும்பத்தலைவர் வெளியே சென்றால் அவர்  எங்கு செல்கிறார்  என்று மற்றவர் களுக்குத் தெரியாது. தாங்கள் எங்கிருக்கிறோம், எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரிவிப்பதற்கு குழந்தைகள் தயங்கக்கூடாது. 

கிறிஸ்தவ கணவன், மனைவி இருவருக்கும் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் முக்கியமான பொறுப்பு கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கைக்கு நாமே உக்கிராணத்துவம் பெற்றவர் கள். கடவுளுடைய வார்த்தையாலும், எடுத்துக்காட்டுகளாலும் அவர்களை கடவுளிடத்தில் நடத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறோம். 

சாம் என்ற வயதான மனிதரைப்பற்றிய, வருந்தக்கூடிய கதை ஒன்று உண்டு. அவரது மனைவி ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கிறார். அவர்  ‘மறதி’ நோயினால் பாதிக்கப்பட்டவர் ;. தினமும் காலையில் சாம் அங்கு சென்று தன் மனைவியைப் பார்த்து, அவர்  அருகில் படுக்கையில் உட்கார்ந்து அவரது புத்தகத்தை; வாசித்து படுக்கை விரிப்புகளை மாற்றி உதவி செய்வார். உங்கள் மனைவி குணம்பெறவே முடியாது என்றாலும் நீங்கள் இந்த உதவிகளை ஏன் தொடர்ந்து செய்கிறீர்  என்று ஒருநாள் சாமிடம் தலைமைச் செவிலியர் கேட்டார் . அதற்கு அவர்  ‘அவர்  எனது மனைவி, எனது மனைவியில்லையா?. நான் அவளை எனது மனைவியாக இன்னும் உணர்கிறேன்’. என்று பதிலுரைத்த்தார். திருமண நிகழ்வில் நாம் செய்து கொண்ட நமது வாழ்க்கைத்துணையோடு செய்து கொண்ட உறுதிமொழி நமது உக்கிராணத்துவம். 

சிந்தனைக்கு: 

ஒருவருக்கொருவர்  சமர்ப்பித்தால் மட்டுமே குடும்பத்தில் கூடி வாழ முடியும். 

ஜெபம்: 

அன்புள்ள இயேசுவே, என்னுடைய அகங்காரத்தை விட்டு விட்டு, குடும்ப உறுப்பினர்களோடு என்னை சமர்ப்பித்து அன்புள்ள உறவுகளை ஏற்படுத்தும். குடும்பமாக எங்களை உமது அன்பினால் கட்டும். உம்மில் நாங்கள் செழித்து வளரவும்  உமக்கு பிரயோஜனமாக இருக்கவும் கிருபை செய்யும். ஆமென். 

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் . 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக விக்டர் ஜெயரருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
http://victorjayakaran.blogspot.in/