வாழ்க்கையின் உக்கிராணத்துவம்மாதிரி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 ல் 3 நாள்

நான் ஒரு மேலாளர் 

இன்றைய உலகில் நாம் உக்கிராணக்காரர் என்பதை விட மேலாளர் என்ற பதத்தையே அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

ஆனால் உக்கிராணக்காரன் என்ற வார்த்தைக்கு “மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட ஒன்றை நிர்வகிப்பவன்” என்று அர்த்தம்.

பாவம் உலகில் பிரவேசிப்பதற்கு முன்பாக, கடவுள் ஒரு தோட்டத்தை உருவாக்கி அதை பண்படுத்தி பாதுகாக்கும் பொறுப்பை இருவரிடம் கொடுத்தார். ஆதியாகமம் 1ம் அதிகாரம் 28ம் வசனத்தில், கடவுள் உலகத்தை சிருஷ்டித்து அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை மனிதனிடம் கொடுத்தார்.

ஆனால் பாவம் உலகத்தில் பிரவேசித்த போது, மனிதன் தானே அதற்கு சொந்தக்காரன் என்று நினைத்து, நிர்வகிக்க வேண்டும் என்ற பொறுப்பை மறந்து விட்டான்.

நாம் எதை நிர்வகிக்கிறோம்?

முதலாவதாக நம்முடைய வாழ்க்கையே கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். எனவே நல்ல நிர்வாகி என்றால், நம்முடைய விருப்பமின்றி கடவுளுடைய பிரியத்துக்காகவே நாம் வாழுகிறோம். என்று அர்த்தம். 

உயர் நிலைக்கு செல்வதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உலக சிந்தனை வரும்போது, கடவுள் என்னை ஒரு நிர்வாகியாக வைத்திருக்கிறார் என்பதை மறந்து விட்டு, இந்த வாழ்க்கை நமக்கே சொந்தம், இதைக் கொண்டு நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் நினைக்கத் துவங்குகிறோம். 

இரண்டாவதாக கடவுள் நம்மிடம் கொடுத்துள்ள ஆதாரங்களை சற்று கவனிப்போம். அது ஒரு வீடாக இருக்கலாம், ஒரு கார், வங்கியில் உள்ள பணம், ஒரு ஸ்மார்ட்ஃபோன், ஒரு மடிக்கணினி, புத்தகங்கள், காலணிகள் … இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

நாம் நிர்வகிக்கும் இந்த வளங்கள் கடவுளுக்கு சொந்தமானவை என்று நினைக்கிறோமா? அல்லது அவை அனைத்துக்கும் நாமே உரிமையாளர் என்று நினைக்கிறோமா?

உண்மையில் நாம் எதற்கும் உரிமையாளர் கிடையாது. இந்த உலகில் நாம் வந்த போது எதையும் கொண்டு வரவில்லை, இங்கிருந்து செல்லும் போதும் கொண்டு போகப் போவதும் இல்லை. நம்மிடம் இருக்கும் அனைத்தும் ஒரு வெகுமதியே!

இது மிக மிக முக்கியமான ஒரு சத்தியம்! இந்த உண்மையை நாம் நமது இருதயத்திலும் எண்ணத்திலும் உறுதியாக பதியவைக்கும் வரை நாம் ஒருபோதும் ஆண்டவருக்கு உரிய கனத்தையும் மகிமையையும் கொடுக்க முடியாது.

நம்மிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்துக்கும் நாம் வெறும் நிர்வாகிகளே என்று கருதும் போது நம்முடைய சிந்தனை மிகப்பெரிய மாற்றத்தை அடையுமா? நிச்சயமாக. நாம் பதுக்குகிறவர்களாக இல்லாமல், நம்முடைய வளங்களை எப்படி கையாள வேண்டும் என்று கடவுளுடைய வழிநடத்துதலைப் பெற்று, கவலையற்று வாழத் துவங்கலாம். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமானால், நம்மையே நாம் சார்ந்து வாழாமல், கடவுளையே சார்ந்து வாழும் ஒரு புதிய பரிமாணத்தை அடைவோம். 

நான் ஒரு நல்ல நிர்வாகியா? என்ற கேள்வியை நீங்களே உங்களிடம் கேட்டுப் பாருங்கள்.

மேற்கோள் : “ஒரு கிறிஸ்தவ காலணி தயாரிப்பாளர் தான் தயாரிக்கும் காலணிகளின் மேல் சிலுவை அடையாளத்தை வரைந்து தனது கடமையை செய்யாமல், மிகச்சிறந்த காலணிகளை தயாரித்து கடவுள் நல்ல கைத்திறனை விரும்புகிறவர் என்பதற்கு சான்றாக விளங்குவார்” – மார்ட்டின் லூத்தர்.

ஜெபம் : ஆண்டவரே, நீர் என்னிடம் ஒப்புவித்துள்ள எல்லாவற்றையும் கொண்டு நான் உம்மை கனப்படுத்தி, உமது இராஜ்ஜிய விரிவாகத்துக்காக செயல்பட கிருபை தாரும். நான் ஒரு சிறந்த நிர்வாகியாக திகழ உதவி செய்யும். ஆமென்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய 
http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.