வாழ்க்கையின் உக்கிராணத்துவம்மாதிரி
எனக்கு எதுவும் சொந்தமல்ல. கடவுளே எல்லாவற்றுக்கும் உரிமையாளர்.
நாம் ஒரு “சுயபடம்” உலகில் வாழ்ந்து வருகிறோம். இங்கு எல்லா கவனத்தையும் நம்மை நோக்கியே இழுத்துக்கொள்கிறோம். எனக்கு உரியது என்று சொல்லக்கூடியவற்றை உரிமையாக்கிக் கொள்ள பெருமுயற்சி செய்கிறோம். என் நண்பர்கள், என் மொபைல், என் பொருட்கள், என் பணம். என், என் …
நம்முடைய கடின உழைப்பின் காரணமாக நமக்கு சொந்தம் என்று சொல்லக்கூடிய ஒரு வீட்டை வாங்குவதாக நாம் நினைக்கிறோம். நம்முடைய சிறப்பான கல்வித் தகுதி மற்றும் செல்வாக்கின் காரணமாகவே நமக்கு நல்ல வேலை கிடைக்கிறது என்றும் நினைக்கிறோம். நம்முடைய எதிர்காலத்தை நாமே திட்டமிட்டு தீர்மானிக்க முடியும் என்று நினைக்கிறோம். இதன் காரணமாக நமது வாழ்க்கை கடவுளை சாராமல் நம்மைச் சார்ந்தே அமைந்து விடுகிறது.
ஆனால் நமக்கு ஒன்றும் சொந்தமில்லை என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. “தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை” என்று பிரசங்கி 5:15ல் வாசிக்கிறோம்.
மைக்கேல் ஹஃபிங்டன் இதை கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார் : “நாம் மரிக்கும் போது நமது பணம், புகழ், அந்தஸ்து எல்லாமே அர்த்தமற்றதாகிவிடும். நாம் இந்த உலகில் எதற்கும் உரிமையாளர்கள் அல்ல. நாம் உரிமையாளர்கள் என்று நினைக்கும் அனைத்துமே நாம் மரிக்கும் வரைக்கும் நமக்கு கடனாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. நமது மரண படுக்கையில், நமது மரண நேரத்தில் கடவுள் மட்டுமே நமது ஆத்துமாவை இரட்சிக்க முடியும்”.
நமக்கு எதுவும் சொந்தமில்லை என்றால், நாம் நம்மிடம் உள்ள அனைத்துக்கும் வெறும் உக்கிராணக்காரர்களே.
நமக்கு எதுவும் சொந்தமில்லை என்ற இந்த கோட்பாடு எப்படி நமது உலக வாழ்க்கையை பாதிக்கும்?
இது ஒரு விடுதலை தரக்கூடிய சிந்தனை. ஏனெனில் நாம் நமது ஆஸ்திகளை சார்ந்து வாழாதிருக்கவும், இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்ற வெறித்தனமான ஆஸ்தி சேர்க்கும் போட்டியிலிருந்தும் நம்மை விலக்கி வைக்கிறது. நமக்கு சொந்தம் என்று சொல்லக்கூடியவைகள் அதிகம் இருப்பதால், நாம் வாழ்க்கையில் ஒரு சிறப்பான நிலைக்கு வந்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால் இந்த அதிகப்படியான ஆஸ்தி சேர்க்கும் முயற்சியானது அதை எவ்வாறு பத்திரப்படுத்தி வைக்க முடியும் என்றும், நம்முடையதை தேவையுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளாமல் எப்படி பாதுகாக்க முடியும் என்ற கவலையையும் கூடவே கொண்டு வருகிறது.
நம்முடைய பரலோக பிதா நம்முடைய எல்லா தேவைகளையும் நிச்சயம் சந்திப்பார் என்று நாம் அறிந்திருக்கிறபடியால், நாம் “இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்“ என்ற எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டு வாழமுடியும்.
கடவுள் மட்டுமே நம்மிடம் உள்ள எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர் என்பதை நாம் அங்கீகரித்த உடன், கடவுள் நம்மிடம் கொடுத்துள்ளவைகளுக்கு, பொறுப்புள்ள, ஞானமுள்ள உக்கிராணக்காரர்களாகி விடுகிறோம்.
மேற்கோள் : “உன்னிடம் உள்ள அனைத்தும், உன்னுடைய சிந்திக்கும் ஆற்றல், நொடிக்கு நொடி உன்னுடைய கைகால் அசைவுகள் எல்லாமே கடவுளால் உனக்கு கொடுக்கப்பட்டவை. உன் முழு வாழ்வின் அனைத்து க்ஷணப்பொழுதும் கடவுளுடைய சேவைக்காகவே நீ அர்ப்பணிக்கக்கூடுமானால், அவருக்கு ஏற்கெனவே சொந்தமில்லாத ஒன்றை, அவருக்கென்று நீ திருப்பிக் கொடுக்க இயலாது” – சி.எஸ். லூயிஸ்.
ஜெபம் : ஆண்டவரே, நீரே எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர், நான் உம்முடைய பிள்ளை என்ற விடுதலை தரும் சிந்தனைக்காக ஸ்தோத்திரம். என்னுடைய எல்லா தேவைகளையும் நீரே சந்திப்பீர். என்னிடத்தில் உள்ள அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன என்று நீர் உணர்த்தியதுக்காக நன்றி செலுத்துகிறேன். இவை அனைத்தையும் உமது இராஜ்ய விரிவாக்கத்துக்காகவே ஞானத்துடன் நான் பயன்படுத்திட எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய
http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.