வாழ்க்கையின் உக்கிராணத்துவம்மாதிரி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 ல் 1 நாள்

இது என்னுடைய வாழ்க்கை. நிஜமாகவா?

“இது என்னுடைய வாழ்க்கை” என்ற அர்த்தமுடைய அநேக பாடல்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் இந்த வாழ்க்கை உண்மையில் நமக்கு சொந்தமானதா? நாமே நமது வாழ்க்கையின் உரிமையாளர்களா? இந்த வாழ்க்கையைக் கொண்டு நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?

நாம் நம்மையே சிருஷ்டித்துக் கொண்டோமா? அல்லது நம்மை ஒரு சிருஷ்டி கர்த்தர் உருவாக்கினாரா?

நமது வாழ்க்கையைக் குறித்து நாம் யோசிக்கும் போது, இந்த வாழ்க்கை நமக்கு சொந்தமானதல்ல, அது சிருஷ்டிகரான கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். நாமே நமது சிருஷ்டி இல்லை, கடவுளே நமது சிருஷ்டிகர். கடவுள் நமது சிருஷ்டிகரானால், நாம் உரிமையாளர்கள் அல்ல, உக்கிராணக்காரர்களே.

ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தையை நாம் நினைக்கும் போது உடனடியாக நமக்கு எண்ணத்தில் தோன்றுவது பணம் தான். ஆனால் உக்கிராணத்துவம் பணத்தை விட பெரியது. அது நமது முழு வாழ்க்கையையும் நிர்வகிப்பது.

உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு அகராதி சொல்லும் சில அர்த்தங்கள் என்ன தெரியுமா? ”நடத்துதல், மேற்பார்வை பார்த்தல், ஒரு காரியத்தை நிர்வாகம் செய்தல், குறிப்பாக ஒருவரிடம் ஒப்புவிக்கப்பட்ட ஒரு காரியத்தை மிகவும் கவனமாகவும், பொறுப்புள்ள விதத்திலும் நிர்வாகம் செய்தல்”.

இந்த வாழ்க்கை நமது பொறுப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நமக்கு சொந்தமானது அல்ல. இது நமது பொறுப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றால், இதைக் குறித்த சரியான கணக்கை, யார் நம்மிடம் இந்த வாழ்க்கையை கொடுத்தாரோ, அவரிடமே நாம் ஒப்புவிக்கவேண்டும்.

மேலும் உக்கிராணத்துவம் என்பது கடவுள் நம்மிடம் கொடுத்துள்ள வாழ்க்கையை எப்படி நிர்வாகம் செய்வது என்பதை கற்றுக் கொள்வதாகும்.

மத்தேயு 25ம் அதிகாரம் 14ம் வசனத்தில் தாலந்துகள் குறித்த உவமையில் இந்த ஒப்புவித்தலைக் குறித்து சொல்லும் போது “என் ஆஸ்தி” என்றும் ”என் பணம்” என்றும் குறிப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை அந்த உக்கிராணக்காரனுடைய பொருட்களோ, ஆஸ்தியோ அல்ல. எஜமானர் ஒப்புவித்தவைகளை நிர்வாகம் செய்வதே உக்கிராணக்காரனுடைய வேலை.

மூன்று உவமைகளை இயேசு கிறிஸ்து தம் சீஷர்களோடு பகிர்ந்து கொண்டதில் “தாலந்துகள் உவமை” கடைசியானது. இதில் “விழித்திருங்கள்” என்ற கட்டளைக்கு உதாரணமாக இந்த உவமை சொல்லப்பட்டது. வேறு விதத்தில் சொல்ல வேண்டுமானால், நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கு, சரியான உக்கிராணக்காரர்களாக நாம் இருக்கிறோமா என்பதை அனுதினமும் சீர்தூக்கிப் பார்த்து நம் வாழ்க்கையை நாம் சரிப்படுத்த வேண்டும். 

நம்மிடம் உள்ளவைகள் எல்லாம் கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை. இந்த உண்மையை நாம் அங்கிகரிக்காத பட்சத்தில், நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ளவைகளுக்கு ஏற்ற நிர்வாகிகளாக நாம் திகழ முடியாது. 

 நாம் நம்மை உக்கிராணக்காரர்களாக பார்க்கிறோமா, அல்லது உரிமையாளர்களாக பார்க்கிறோமா? உங்கள் பதிலைப் பொறுத்துத்தான் எல்லாமே அமைந்திடும்.

 ஒரு உரிமையாளர் தன்னிடம் உள்ளவைகளைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். ஆனால் ஒரு உக்கிராணக்காரன், எஜமானருக்கு தான் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறான்.

சி.எஸ்.லூயிஸ் இதை மிக அழகாக வர்ணிக்கிறார் : “ஒரு முட்டை ஒரு பறவையாக மாறுவது கடினமான காரியம். முட்டையாக இருக்கும் போதே பறந்திட பயிற்சி எடுப்பது என்பது இன்னும் சிரிப்பானது. நாம் அனைவரும் இன்று முட்டையைப் போன்றவர்களே. ஒன்று நாம் அனைவரும் பொரிக்க வேண்டும் அல்லது கெட்டுப் போகவேண்டும்”.

பொரித்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையை ஆண்டவர் கரத்தில் கொடுத்து விடுங்கள். உங்களுக்கு எது சிறந்தது என்பது அவருக்கு நன்றாக தெரியும் – ஏனெனில் அவரே உங்கள் சிருஷ்டிகர்.

மேற்கோள் : தன்னால் எதை தக்கவைத்து லாபமடைய முடியாதோ அதை கொடுப்பதினால் இழப்பவன் முட்டாள் அல்ல – ஜிம் எலியட்.

ஜெபம் : ஆண்டவரே, இந்த வாழ்க்கையை என்னுடையது என்று சொல்லும் நான், அது உண்மையில் என்னுடையது அல்ல என்று உணர்ந்து கொள்ள உதவி செய்ததற்காக நன்றி செலுத்துகிறேன். இன்று என் வாழ்க்கையை உம்மிடமே திருப்பிக் கொடுக்கிறேன். உமக்காகவே வாழ்ந்திட எனக்கு உதவி செய்யும். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய 
http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.