எனவே கிறிஸ்து தமது சரீரத்தில் துன்பத்தை அனுபவித்ததனால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், சரீரத்தில் துன்பப்படுகின்றவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்கின்றார்கள். அதனால் அவர்கள் பூமியிலே எஞ்சியுள்ள தமது வாழ்நாட்களிலே பாவ மனித இயல்பில் எழும் தீய ஆசைகளுக்காக வாழாமல், இறைவனுடைய விருப்பத்திற்காகவே வாழ்வார்கள்.