YouVersion Logo
Search Icon

Plan Info

திருமணம் கனத்துக்குரியதுSample

திருமணம் கனத்துக்குரியது

DAY 4 OF 5

நாள் 4: கணவன் மனைவியாக திருமணத்தை கனப்படுத்துங்கள்

தேவனுடைய பார்வையில் தங்கள் திருமண உறவு விலையேறப் பெற்றது என்று கணவன் மனைவி அறிந்து உணரும்போது திருமணத்தை கனப்படுத்துகின்றனர். தேவன் தங்களுக்களித்த விலைமதிப்பற்ற பரிசாக திருமண உறவை எண்ணி, அதைப் பாதுகாக்கவும், மதிக்கவும், பொக்கிஷமாக கருதவும் அவர்கள் இருவரும் விருப்பம் காட்ட வேண்டும். திருமணத்தில் ஒருவித வறட்சி ஏற்படும் போது, அந்த உறவு முன்பு போல் இல்லாத போது, கணவன் மனைவி இருவரும் மற்றவருக்காக காத்திருக்காமல், தங்களுடைய விலைமதிப்பற்ற உடன்படிக்கை உறவைப்பற்றி ஒருவருக்கொருவர் நினைப்பூட்ட தயாராக இருக்க வேண்டும்.இன்று அநேகர் தங்கள் திருமணங்களில் அன்பையும், அரவணைப்பையும் உணர்வதில்லை. இது இயற்கையானதே என்று கருதுவது சரி இல்லை! இது எதிரியின் பொய்யாகும்! மரணம் நம்மை பிரிக்கும்வரை என்று உறுதியளித்து இணைந்த தன் துணையிடமிருந்து பிரிவதற்கு இந்த பொய் பலரை தூண்டி விடுகிறது!

கிறிஸ்துவுக்குள் ஆணையும் பெண்ணையும், தேவன் சரி நிகர் சமானமாக சிருஷ்டித்தார் என்பதை கணவன், மனைவி நம்பும்போது அவர்கள் திருமணத்தை கனப்படுத்துகிறார்கள். நம்மிடையே உள்ள வேறுபாடுகள் நம்மை அச்சுறுத்த வேண்டாம்! நம் வேறுபாடுகள் ஒருவரையொருவர் பூர்த்தி செய்வதற்கும், நிறைவுசெய்வதற்குமே உள்ளன. எனவே, நாம் போட்டிபோட அவசியமில்லை.

கணவனும் மனைவியும் தங்கள் பெற்றோரை விட்டு, ஒருவரோடொருவர் இசைந்து" ஒரேமாம்சம்" ஆகி திருமணத்தை கனப்படுத்துகின்றனர். பெற்றோரின் பாதுகாப்பின்(covering) கீழ் இருந்து, தேவனின் பாதுகாப்பின் கீழ் வரும் போது மட்டுமே இது சாத்தியம்(1 கொரிந்தியர் 11:3). தேவன், “ஒரே- மாம்சம்” ஆகும் செயலை நம் திருமண நாளன்று துவக்குகிறார்- “ஆகவே தேவன் இணைத்ததை …” என்ற அறிக்கைக்கேற்ப, அந்த "ஒரே மாம்சம்" ஆகுதலை இருவரும் அன்றிலிருந்தே கவனமாக செயல்படுத்த வேண்டும்.

கணவனும் மனைவியும் தங்களுடைய விவாக மஞ்சத்தை பரிசுத்தமாக வைத்திருக்கும்போது திருமணத்தை கனப்படுத்துகிறார்கள் - எபிரேயர் 13:4. திருமணம் என்பது தேவன் தங்குமிடம் (மல்கியா 2:11 NIV); எனவே, அதை பரிசுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

ஒருவர் எதிர்பாலர் அல்லது ஒரே பாலினத்துடன் நெருங்கிய உறவு வைக்கும் போது, அது ஒரு உணர்ச்சி ரீதியான விபச்சாரம் மற்றும் தங்கள் திருமணத்திற்கு செய்யும் துரோகம் ஆகும். மத்தேயு 5:28.

இத்தகைய உறவு ஒரு குற்றமற்ற, சாதாரணமான நட்பாகத் துவங்கலாம். ஆனால் விரைவில், அது நம் திருமணத்தை களங்கப்படுத்தவும், திருமணத்தை அழிக்கவும் ஒரு சந்தர்ப்பமாக மாறி விடும் - இதுவே எதிரியின் சூழ்ச்சி. (யோவான் 10:10a). சுய புணர்ச்சி என்பது விபச்சாரம்; இந்த செயல், தன் மனைவி அல்லது கணவனுக்கு தான் செய்யும் துரோகம் என்பதை தம்பதியர் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவரையொருவர் கனப்படுத்தும் போது நாம் திருமணத்தை கனப்படுத்துகிறோம். உங்கள் மனைவி(கணவன்) தேவன் உங்களுக்குக் கொடுத்த பரிசு - "மனைவியைக் கண்டடைபவன் நன்மையானதக் கண்டடைகிறான், கர்த்தரால் தயயையும் பெறுகிறான்." நீதிமொழிகள் 18:22. உங்கள் கணவன்/மனைவிக்காக நீங்கள் கடைசியாக எப்போது தேவனுக்கு நன்றி சொன்னீர்கள்?

குழந்தைகள் பிறந்த பிறகு நாம் கணவன் மனைவி உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறிவிடுகிறோம். நம் குழந்தைகள் விரைவில் கூட்டை விட்டு பறந்து விடுவார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திருமண உறவை பெலப்படுத்த நாம் செய்யும் முயற்சி, முதுமையில் மனநிறைவோடு அமைதியான வாழ்க்கையை வாழ உதவும்.

ஏதோ திருமணமாகிவிட்டது என்று காலத்தை கடத்தாமல், திருமணத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை கனப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது, நாம் திருமணத்தின் தேவனை கனப்படுத்துகிறோம். தேவனை கனப்படுத்தும் திருமணத்தின் வாயிலாக, தேவன் மகிமைப்படுகிறார்.

ஜெபம்: பரலோகத் தகப்பனே, உங்களிடமிருந்து நான் பெற்ற என் கணவன்/ மனைவிக்காக நன்றி. அவர்கள் ஒரு விலைமதிப்பற்ற நல்ல பரிசு. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியதற்கு என்னை மன்னியும். இயேசுவே, என் திருமண மஞ்சத்தை களங்கப்படுத்தியதற்காக என்னை மன்னியும். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னையும், என் திருமண மஞ்சத்தையும் சுத்திகரித்து, அதை பரிசுத்தமாக்கும்படி ஜெபிக்கிறேன். ஆண்டவரே, என்னையும் என் திருமணத்தையும் பரிசுத்தப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில். ஆமென்.

Scripture

Day 3Day 5

About this Plan

திருமணம் கனத்துக்குரியது

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்க வேண்டும் என்று எபிரெயர் 13:4ல் தேவனுடைய வார்த்தை கூறுகிறது.இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை நமக்கு என்ன பொருள்படுகிறது? இது ஏன் முக்கியம் என்றும், திருமணத்தை தேவன் நினைத்தபடி எப...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy