YouVersion Logo
Search Icon

Plan Info

திருமணம் கனத்துக்குரியதுSample

திருமணம் கனத்துக்குரியது

DAY 3 OF 5

நாள் 3: திருமண உடன்படிக்கையின் ஐந்து அம்சங்கள்

திருமண உடன்படிக்கை, ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. நம் சொந்த திருமணத்தின் வெளிச்சத்தில் அவற்றை ஆராய்வோம்.

1.தேவ பிரசன்னம்: திருமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் இணைவது மட்டுமல்ல – தேவனே திருமண உடன்படிக்கையின் பங்காளராக மாறுகிறார் (மல்கியா 2:14). எனவே, அவர் திருமணத்தில் இருக்கிறார். மல்கியா 2:11ல்,தேவன் திருமணத்தை பரிசுத்த ஸ்தலமாக அழைக்கிறார்(ஆங்கில வேதத்தில் NIV version). பரிசுத்த ஸ்தலம் என்றால் தேவன் தங்கும் இடம் என்று அர்த்தம்.கணவன் மற்றும் மனைவி இருவரும் விசுவாசிகளாக இருக்கும்போது மட்டுமே, அவர்களது திருமணம் கர்த்தரின் வசிப்பிடமாக மாறும்.

2.நிரந்தர ஐக்கியம்: விவாகரத்து பற்றிய கேள்விக்கு, இயேசு பரிசேயர்களுக்கு பதிலளிக்கும் போது , திருமணம் தேவன் உருவாக்கின ஐக்கியம் எனவும், அதை முறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை எனவும் கூறினார் (மத்தேயு 19:6). மேலும், மல்கியா 2:16ல், விவாகரத்து செய்வதை தேவன் வெறுக்கிறார் என்றும், கணவன், மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு ஒருவரை திருமணம் செய்வது விபச்சாரம் என்றும் வாசிக்கிறோம். லூக்கா 16:18

3.பரிசுத்தம்: திருமணம் பரிசுத்தமானது - (எபிரேயர் 13:4). திருமண உறவை பரிசுத்தமாக வைத்திருப்பது கணவன் மனைவி இருவரின் பங்காகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விரோதமாக துரோகம்/ விபச்சாரம் செய்வது திருமணமஞ்சத்தை களங்கப்படுத்துவது மட்டுமல்லாமல் அதை அவமதிக்கிறது. பரிசுத்த நிறுவனமான திருமணத்தை சுயதிருப்தி பல வழிகளில் அசுத்தப்படுத்தி அவமதிக்கிறது.

4.நோக்கம்: திருமணத்திற்கு ஒரு நோக்கம் உண்டு. "ஏனென்றால், சகலமும் (திருமணம்) அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது, அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். (ரோமர் 11:36) எனவே திருமணமும் தேவனாலும், தேவனுக்காகவும், தேவனுடைய மகிமையை பிரதிபலிக்கவும் வேண்டும்.

5.வல்லமை: பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் திருமணத்தை வல்லமையுள்ளதாக மாற்றுகிறது (மல்கியா 2:15). அவரே திருமணத்தில், குணப்படுத்தும் வல்லவராகவும், இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையுடையவராகும் செயல்படுகிறவர்.

உடன்படிக்கை திருமணத்திற்குள் பிரவேசிப்பதினால், வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு உடன்படிக்கை ஆசீர்வாதத்திற்கும், நாம் பங்காளர் ஆகிறோம்.

ஜெபம்: தேவனே! நீரே உடன்படிக்கை திருமணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி. திருமணத்தை பரிசுத்தமாக காத்து அதை கனப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். உமது பிரசன்னத்தால் எங்கள் திருமணத்தை அழகுபடுத்தும்! உமது வல்லமையால் எங்கள் திருமணத்தை வளப்படுத்தும்! இயேசுவின் நாமத்தில், ஆமென்

Day 2Day 4

About this Plan

திருமணம் கனத்துக்குரியது

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்க வேண்டும் என்று எபிரெயர் 13:4ல் தேவனுடைய வார்த்தை கூறுகிறது.இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை நமக்கு என்ன பொருள்படுகிறது? இது ஏன் முக்கியம் என்றும், திருமணத்தை தேவன் நினைத்தபடி எப...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy