YouVersion Logo
Search Icon

Plan Info

திருமணம் கனத்துக்குரியதுSample

திருமணம் கனத்துக்குரியது

DAY 1 OF 5

[IMAGE CONTENT] நாள் 1: தேவன் திருமணத்தை கனப்படுத்துகிறபடியால் திருமணம் கனத்துக்குரியது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் திருமணம் பலவித வழிகளில் கனவீனப்பபடுத்தப்படுகிறது. தேவனாலே நிறுவப்பட்ட இந்த பரிசுத்த நிறுவனமாகிய திருமணத்தை, ஆதியிலிருந்தே அழிக்கவும், அதின் அர்த்ததை புரட்டவும் சாத்தான் முற்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், திருமணத்திற்கான தேவனின் அநாதி திட்டத்தை, கிறிஸ்துவின் சரீரமாகிய நாம் தொடர்ந்து கனப்படுத்தும் பொழுது சாத்தான் இந்த முயற்சியில் வெற்றி பெற முடியாது. திரித்துவ தேவனாகிய பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் தங்கள் எடுத்துக்காட்டின் வாயிலாக திருமணத்தை கனப்படுத்தக் கற்றுக் கொடுக்கின்றனர். தேவன் திருமணத்தை கனப்படுத்துகிறார் : பிதாவாகிய தேவன் தம்முடைய சாயலில் மனுஷனையும் மனுஷியையும் படைத்து, அவர்களை கணவன் மனைவி என்று அழைத்து, திருமணத்தை கனப்படுத்துகிறார். தேவன் அவர்களுக்கு திருமணத்திற்கான அநாதி திட்டத்தையும் கொடுத்து ஆசீர்வதித்தார். தேவன் தாமே திருமணத்தின் சாட்சியாயிருக்கிறார் என்று மல்கியா 2:14 ல் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து திருமணத்தை கனப்படுத்துகிறார் : கிறிஸ்து தனது முதல் அற்புதத்தை ஒரு திருமணத்தில் நிகழ்த்தினார்(யோவான் 2). திருமணத்தை கனப்படுத்தவும், தேவனுடைய ராஜ்யத்தை பற்றின ஆழமான சத்தியத்தை கற்றுக் கொடுக்கவும், இயேசுகிறிஸ்து சில உவமைகளில் திருமணத்தை பயன்படுத்தினார். திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பும் பொழுது இயேசுகிறிஸ்து, வேத வாக்கியத்தை மேற்கோள் காட்டி, திருமணத்திற்கான தேவனின் அநாதி திட்டத்தை விவரித்து அதை கனப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் திருமணத்தை கனப்படுத்துகிறார் : தேவன் தம்முடைய ஆவியையே கணவன் மனைவிக்குள் ஊற்றி அவர்களை ஒன்றாக்குகிறபடியால், தேவனுடைய ஆவியானவர் ஒவ்வொரு திருமணத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மல்கியா:2:15 கனப்படுத்துவது என்றால், ஒன்றை விலையேறப் பெற்றதாகவும், மதிப்புள்ளதாகவும் கருதுவதே! இயேசுகிறிஸ்துவின் மணவாட்டியாகிய நாம் திருமணத்தை கனப்படுத்த அழைக்கப்படுகிறோம். பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில், திருமணத்தை, கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் இரகசியமாக குறிப்பிடுகிறார். எபேசியர் 5:22-29. இயேசுகிறிஸ்துவின் மணவாட்டியாகிய நாம் திருமணத்தை கனப்படுத்த அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் சரீரமாகிய நாம், திருமணத்தை பற்றின உலக கண்ணோட்டத்தை நிராகரித்து, தேவனின் இருதயதிற்கேற்ப நம்மை ஒழுங்குபடுத்தும் பொழுது தான் திருமணத்தைக் கனப்படுத்துகிறோம். திருமணத்திற்கான தேவனின் அநாதி திட்டம் பல ஆயிரமாண்டுகள் நிலைத்தது மட்டுமல்லாமல் இயேசுகிறிஸ்துவின் வருகை பரியந்தமும் நிலைக்கும். ஜெபம் : பிதாவே! மனுக்குலத்திற்கு திருமணம் என்ற ஆசீர்வாதத்தை கொடுத்ததற்காக நன்றி! திருமணத்தை, இருவர் மட்டுமே இணையும் சாதாரண உறவு என்று அற்பமாக எண்ணி, கனவீனபடுத்தியதற்காக எங்களை மன்னியும். ஆவியானவரே! உம்முடைய வார்த்தையின்படி திருமணத்தை கனப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

Scripture

Day 2

About this Plan

திருமணம் கனத்துக்குரியது

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்க வேண்டும் என்று எபிரெயர் 13:4ல் தேவனுடைய வார்த்தை கூறுகிறது.இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை நமக்கு என்ன பொருள்படுகிறது? இது ஏன் முக்கியம் என்றும், திருமணத்தை தேவன் நினைத்தபடி எப...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy