BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample
அப்போஸ்தலனாகிய பவுல் சிறையிலிருந்து பிலிப்பியர்களுக்கு தனது கடிதத்தை எழுதுகிறார். கஷ்டங்களை அறிந்திருந்த அவர் தேவன் அளிக்கும் சமாதானத்தையும் அறிந்திருந்தார். காரணம், வேதாகம சமாதானம், நம்பிக்கையைப் போலவே, ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. பவுல் இயேசுவை பின்தொடர்பவர்களை எப்போதும் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்கவும், ஜெபிக்கவும், நன்றி கூறவும், சிறந்ததையும், உண்மை எது என்பதை சிந்திக்கவும் அழைக்கிறார். இந்த பழக்கவழக்கங்கள் மிகுந்த போராட்டத்தின் மத்தியிலும் தேவனின் சமாதானத்தை அனுபவிக்க வழிவகுக்கும் என்பதை பவுல் எடுத்துக் காட்டுகிறார்.
வாசிக்கவும் :
பிலிப்பியர் 4: 1-9
சிந்திக்கவும்:
பிலிப்பியர் 4: 1-9 இல் பவுல் கொடுக்கும் அனைத்து அறிவுறுத்தல்களின் பட்டியலையும் உருவாக்குங்கள் (அதாவது "கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்," "சமாதானத்துடன் வாழுங்கள்" போன்றவை).
உங்கள் பட்டியலைக் கவனித்து பாருங்கள், ஒவ்வொன்றையும் ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளவது போல் நினைத்து கொள்ளுங்கள். உங்கள் அன்றாட வாழ்க்கையில் அந்த பழக்கங்கள் எப்படியாக இருக்கும்? இறுதியாக அந்த பழக்கங்கள் தேவனின் சமாதானத்தை அனுபவத்திற்கு எந்த விதத்தில் வழிவகுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
7 மற்றும் 9 வசனங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். நீங்கள் எதை கவனிக்கிறீர்கள்? தேவனின் சமாதானத்தின் பாதுகாப்பு தன்மையைப் பற்றி இந்த வசனங்கள் நமக்கு என்ன சொல்கின்றன? இப்போது அவரது பாதுகாப்பிற்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும்.
Scripture
About this Plan
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More